பிரான்சின் பதினான்காம் லூயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
உள்நாட்டு விவகாரங்களிலும் வெளிநாட்டுத் தொடர்புகளிலும் மன்னன் பதினான்காம் லூயி ஈடு இணையற்று விளங்கினார். நாட்டில் புதிய, தெளிவான சட்டங்கள் இயற்றப்பட்டன. நிதி அமைச்சராக விளங்கிய கால்பர்ட் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். சிறப்பான பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தனார். இந்தக் கால கட்டத்தில் கலைகள் மிகச் செழிப்பாக வளர்ந்தன. ஓவியம், சிற்பம் போன்ற கலைகளுக்கு தனித்துறையை தொடங்கினார். அறிவியலும் ஏற்றம் கண்டது. பாரீஸில் ஒரு பெரும் தொலைநோக்ககம் (OBSERVATORY) உருவாக்கப்பட்டது. இலக்கிய அகாடமி அமைப்புக்கும் புது வெளிச்சம் கிடைத்தது. ஆனால் அது முழுக்க அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தது. அற்புதமான கட்டிடங்களைக் கட்டுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தார் மன்னர். லூவர் அருங்காட்சியகக் கட்டிடம் கூட அவர் காலத்தில் எழுப்பப்பட்டதுதான். ஸ்பெயினின் அதிகாரத்திலிருந்த சில பகுதிகள் பிரான்ஸோடு இவர் காலத்தில் இணைக்கப்பட்டன.
 
==மதக்கொடுமையும், மதஇனமத இன அச்சுறுத்தலும் ==
 
நிர்வாகத்தில் பெரிதும் உதவிய நிதி அமைச்சர் கால்பர்ட்டின் இறப்புக்குப் பிறகு ஆட்சியில் பல மாறுதல்கள் உண்டாயின.1598 ஆம் ஆண்டு நான்காம் என்றியால் போடப்பட்ட மத நல்லிணக்க சட்டம் தூக்கி வீசப்பட்டு 1685 இல் மத தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. பிரான்ஸில் உள்ள பிராடஸ்டன்ட் சிறுபான்மையினரின் 10,00,000 பேரின் சிறப்பு வழிபாட்டு உரிமையை நீக்கினார் மன்னர். பிரெஞ்சு ப்ராடெஸ்டன்டுகளை ‘ஹுகனாட்ஸ்’ என்பார்கள். இவர்களுக்கான வழிபாட்டு உரிமைகளை ரத்து செய்தார் மன்னர். அது மட்டுமல்ல, ப்ராடஸ்டன்ட் ஆலயங்களையும் இடித்துத் தள்ள உத்தரவிட்டார்.
 
ப்ராடஸ்டன்ட் பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பிரிவினரின் திருமணங்கள் செல்லாது என்று சட்டமியற்றும் அளவுக்கு மன்னரின் கத்தோலிக்க வெறி எல்லை தாண்டியது. கத்தோலிக்கக் கல்வியும் ஞானஸ்நானமும் அனைத்து பிரான்ஸ் குழந்தைகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதன் காரணமாக தொழிலதிபர்களாக இருந்த ப்ராடஸ்டன்ட் பிரிவினரில் பலரும் பிரான்ஸைவிட்டு நீங்கினார்கள். ஆக பெருத்த முதலீடுகளும் திறமையான நபர்களில் கணிசமானவர்களும் நாட்டைவிட்டு நீங்கினர். இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு இப்படிச் சென்றவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஆகும்
== ஆங்கில அரசுரிமைப்போர் (கி.பி.1688-1697) ==
லுாயி [[ஆலந்து]]க்குச் செல்லக்கூடிய வழியிலுள்ள [[கொலோன்]] நகரத்தைத் தாக்கிய போது ஆங்கில அரசர் மூன்றாம் வில்லியம் ஆலந்தைக் காப்பாற்றும் பொருட்டு இங்கிலாந்து, [[ஆசுத்திரியா]], இசுபெயின், பிரான்சுடன்பர்க்கு, [[தென்மார்க்கு]], [[சுவீடன்]] முதலிய நாடுகளையெல்லாம் ஒரு பெருங்கூட்டாக இணைத்தார். பல இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. பிரெஞ்சுக் கப்பற்படை ஆங்கில-தச்சுக் கப்பற்படையை 1690-இல் பீச்சி எட்டில் வென்றது. ஆங்கிலக் கப்பற்படை 1692-இல் பிரெஞ்சுக் கப்பற்படையை இலாகோக்கில் வென்றது. இதற்கிடையில் நாட்டை விட்டுப் பிரான்சில் அடைக்கலம் புகுந்த இரண்டாம் சேம்சு அயர்லாந்துக்குச் சென்று அதனைக் கைப்பற்ற முயன்றார். மூன்றாம் வில்லியம் சேம்சைத் தோற்கடித்து அயர்லாந்தைத் தம் வசம் வைத்துக் கொண்டார். இறுதியில் 1697-இல் செய்யப்பட்ட இரிசுவிக்கு உடன்படிக்கையின்படி, பிரான்சு 1684-இல் தன் விருப்பமாக இணைத்துக் கொண்ட நகரங்களில் இசுடுராசுபர்க்கு, அல்சேசு முதலியவற்றை மட்டும் தன்வசம் வைத்துக் கொண்டு, மற்றவற்றைத் திருப்பிக் கொடுத்தது. மூன்றாம் வில்லியம் இங்கிலாந்தின் அரசராக ஒப்புக்கொள்ளப்பட்டார். உலுாயி தாம் இரண்டாம் சேம்சுக்கு ஆங்கில அரசுரிமையின்மீது ஆதரவளிப்பதில்லை என்று ஒப்புக்கொண்டார்.<ref>{{cite encyclopedia | title=பதினான்காம் உலுாயி | encyclopedia=வாழ்வியற் களஞ்சியம் | publisher=தஞ்சைத் தமிழ்ப் பல்கைலக்கழகம் | accessdate=4 அக்டோபர் 2017 | editor=முனைவர் நா. பாலுசாமி | year=2009 | volume=தொகுதி 5 | edition=மூன்றாம் பதிப்பு | location=தஞ்சாவூர் | pages=307-309}}</ref>
 
==சொந்த வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சின்_பதினான்காம்_லூயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது