ஆஷுரா தினம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 2:
 
==வரலாற்றுப் பின்னணி==
முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா (அலை) அவர்களையும் (இஸ்லாமிய சமயத்தின் ஒரு தூதுவர்) அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிழந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தும் முகமாக மூஸா (அலை) அவர்களின் சமூகத்தார் நோன்பு நோற்றார்கள்.
26:52 மேலும், நாம் மூஸாவுக்கு வஹி அறிவித்தோம்: “என் அடியார்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாகப் புறப்படுவீராக! நீங்கள் பின் தொடரப்படுவீர்கள்!” 26:53 இதன்படி ஃபிர்அவ்ன் (படைகளைத் திரட்டுவதற்காக) நகரங்களுக்கு ஊழியர்களை அனுப்பினான். (மேலும், சொல்லியனுப்பினான்:) 26:54 “இவர்கள் மிகச் சிறிய ஒரு கூட்டத்தினர்தாம்! 26:55 மேலும், இவர்கள் நம்மை மிகுந்த கோபமடையச் செய்துவிட்டார்கள். 26:56 நாம் எப்பொழுதும் விழிப்பாக இருக்கக்கூடிய கூட்டத்தினர் அல்லவா!” 26:57 இவ்வாறு நாம் அவர்களை அவர்களுடைய தோப்புகள், நீருற்றுகள், 26:58 செல்வக் களஞ்சியங்கள் மற்றும் சிறந்த இருப்பிடங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறச் செய்தோம். 26:59 அவர்களுக்கு நேர்ந்தது இதுதான். (மற்றொருபுறம்) நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை இவை அனைத்திற்கும் வாரிசுகளாக்கிவிட்டோம். 26:60 பொழுது விடிந்ததும் இவர்கள் அம்மக்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். 26:61 இரு கூட்டத்தாரும் ஒருவரை ஒருவர் கண்டுகொண்டபோது மூஸாவின் தோழர்கள், “திண்ணமாக, நாம் பிடிபட்டுவிடுவோம்!” என்று கூக்குரலிட்டனர். 26:62 அதற்கு மூஸா கூறினார்: “ஒருபோதும் இல்லை. என்னோடு என் இறைவன் இருக்கின்றான். அவன் திண்ணமாக, எனக்கு வழிகாட்டுவான்!” 26:63 மூஸாவுக்கு நாம் வஹியின் மூலம் கட்டளையிட்டோம்: “உமது கைத்தடியினால் கடலை அடியும்!” உடனே கடல் பிளந்துவிட்டது. மேலும், அதன் ஒவ்வொரு பகுதியும் மாபெரும் மலை போன்றாகிவிட்டது. 26:64 அதே இடத்திற்கு இரண்டாவது கூட்டத்தாரையும் நாம் நெருங்கிவரச்செய்தோம். 26:65 மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம். 26:66 பிறகு, மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம். 26:67 திண்ணமாக, இந்நிகழ்ச்சியில் ஒரு சான்று இருக்கிறது. எனினும் இவர்களில் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அல்லர். 26:68 மேலும், திண்ணமாக உம் இறைவன் மிக வலிமை வாய்ந்தவனாகவும் பெரும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
 
இத்தினத்தில் [[முகமது நபி|நபி நாயகம்]] தானும் நோன்பு நோற்று தன் தோழர்களையும் நோற்கும் படி ஏவினார்கள். இதனடிப்படையிலேயே ஆஷுரா தினத்தன்று முஸ்லிம்கள் நோன்பு நோற்று வருகின்றார்கள். இது இஸ்லாத்தில் கட்டாய கடமையல்ல. இதுவொரு சுன்னத்தாக (நபி நாயகத்தின் வழிமுறை) கொள்ளப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/ஆஷுரா_தினம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது