காமினி திசாநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
ஆக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

13:58, 19 மே 2008 இல் நிலவும் திருத்தம்

லயனல் காமினி திசாநாயக்கா (மார்ச் 20, 1942 - அக்டோபர் 24, 1994) இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும் அதிபர் பதவிக்கான வேட்பளருமாவார்.

தொடக்க வாழ்கை

இலங்கையின் மலையகத்தின் கொத்மலையில் பிறந்தார். அவரது தந்தையார் இலங்கை சுதந்திரக் கட்சியில் சாலமன் பண்டாரநாயக்காவின் அரசில் பிரதி அமைச்சராக செயற்பட்டு வந்தார். திசாநாயாக்கா கண்டி புனித திரித்துவக் கல்லூரியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து 1967 ஆம் ஆண்டு சட்டத்தரணியானார். 1988 ஆம் ஆண்டு அதிபரின் சட்டத்தரணியாக பதவியேற்றார். 1992 ஆம் ஆண்டு கேம்பிரிஜ் பல்கலையில் எம்.பில். பட்டப்படிப்பை முடித்தார். [1]

அரசியல் வாழ்க்கை

1970 ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக நுவரெலியா - மசுகெலியா பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். இத்தேர்தலின் போது பாராளுமன்றம் சென்ற 17 ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களில் காமினியும் ஒருவராவார். 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அமைச்சராக பதவியேற்றார். இலங்கையின் மகாவலி துரித அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்தார். 30 ஆண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த திட்டத்தை இவர் 6 ஆண்டுகளில் முடித்தார்.

இறப்பு

டிங்கிரி பண்டா விஜயதுங்கா 1994 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்ததை தொடர்ந்து காமினி திசாநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியி அதிபஎ வேட்பாளாரக தெரிவுச் செய்யப்பட்டார். அந்நேரம் இவரே பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராகவுமிருந்தார். அதிபர் தேர்தலுக்கான கூட்டத்தின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்பின் போது இவர் கொல்லப்பட்டார். குண்டு வெடிப்பு விடுதலைப் புலிகள் மீது குற்றஞ்சட்டப்பட்டது.

இவரது மகன் நவீன் திசாநாயக்கா இலங்கை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசில் பிரதி அமைச்சராக பதவி வகிக்கிறார்.

மேற்கோள்கள்

  1. Perera, Gayani. "If cricket is king, he was the kingmaker". Dailymirror. http://www.dailymirror.lk/worldcup/History/12.html. பார்த்த நாள்: 2008-05-19. 

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமினி_திசாநாயக்கா&oldid=242525" இலிருந்து மீள்விக்கப்பட்டது