இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
 
== எலிசபெத்தின் இறப்பு ==
1602 ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் வரை ராணி உடல்நலம் நல்ல முறையிலேயே இருந்தது. அவருடைய நண்பர்களின் தொடர்ச்சியான உயிரிழப்புகளால் கடுமையான எலிசபெத் மனத் தளர்வு அடைந்தார். பிப்ரவரி 1603 இல், அவரது உறவினர் மற்றும் நெருங்கிய நண்பரான [[கேத்தரின் கேரி | லேடி நோலிஸ்]] [[கேத்தரின் கேரி, நாட்டிங்காம் கவுண்டெஸ்]] ஆகியோரின் மரணம், அரசியிடம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எலிசபெத் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மிகவும் நீக்கமுடியாத, நிலையான துயரத்துடன் இயக்கமின்றி பல மணி நேரங்களாக ஒரே இருக்கையில் அமர்ந்திருந்தார்.<ref>Black, 411.</ref>இராபர்ட் செசில் நீங்கள் கட்டாயம் படுக்கைக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறிய போது, ”சிறிய மனிதா, ஒரு அரசியிடம் கட்டாயம் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தலாகாது” என்று பதிலளித்து தனது அதிகாரத்தைப் பறைசாற்றினார்.<ref>Black, 410–411.</ref>
 
எலிசபெத் தனது 69 ஆவது வயதில் ரிச்மாண்டு அரண்மனையில் 1603 மார்ச் 24 ஆம் நாள் மரணமடைந்தார். பல சாதாரண இலண்டன் நகரவாசிகள் எலிசபெத்தின் இறுதிப்பயணத்தைக் காண வீதிக்கு வந்தனர். கி.பி.1603 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் நாள் இராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள் [[வெஸ்ட்மின்ஸ்டர்]] மடத்தில் நடைபெற்றது, எலிசபெத் திருமணம் செய்து கொள்ளாமலும் குழந்தைகளைக் கொண்டிராமலும் இருந்ததால், நேரடியான டியூடர் இன வாரிசு இல்லாமல் இருந்த நிலையில் இசுகாட்லாந்தின் அரசி மேரியின் மகன் ஆறாம் ஜேம்ஸ் அரசராக்கப்பட்டார். இங்கிலாந்தை 118 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த டியூடர் வம்ச ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/timelines/ztfxtfr | title=Elizabeth I: Troubled child to beloved Queen | publisher=BBC-iWonder | accessdate=6 அக்டோபர் 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_எலிசபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது