சுலைமான் நபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 37:
 
அரியணை ஏறி நான்காண்டுகள் கழித்து, தமது தந்தை தாவூது நபி அவர்கள் ஆரம்பித்து வைத்த பைத்துல் முகத்தஸ் (எருசலேம் கோயில்) பள்ளிவாசலை நிர்மாணிக்கத் தொடங்கினார்கள். மனிதர்களையும், ஜின்களையும் குழுக்களாகப் பிரித்து, அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளையும் ஒழுங்கு படுத்திக் கொடுத்தார்கள். எருசலேம் நகரம் நிர்மாணிக்கப்பட்டு முடிந்ததும், அதை பன்னிரெண்டு பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு இஸ்ரேலியர்களின் ஒவ்வொரு பிரிவினரையும் தனித்தனியாகக் குடியேற்றினார்கள். சுலைமான் நபி தங்களின் ஐம்பத்து மூன்றாவது வயதில் இறைவனிடம் " இறைவா! எனது இறப்பை ஜின்களோ, சாத்தான்களோ அறியா வண்ணம் செய்வாயாக" என்று பிரார்த்தித்தார்கள். அதேபோல் அவர்களின் இறப்பு நிகழ்ந்தது. அன்னாரின் சமாதி இருக்கும் இடம் பற்றி அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் பெரும்பான்மையோர் பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலிலுள்ள 'குப்பதுஸ் ஸஹ்றா' என்னுமிடத்தில் உள்ளது என்று கூறியிருக்கின்றனர்.<ref>நபிமார் வரலாறு, அறிஞர் அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை. ஆறாம் பதிப்பு, பக்.555,556</ref>
 
34:12 மேலும், நாம் ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அதனுடைய காலைப் புறப்பாடு ஒரு மாத தூரம் வரையிலாகும்; மாலைப் புறப்பாடும் ஒரு மாத தூரம் வரையிலாகும். நாம் அவருக்காக உருகிய செம்பின் ஊற்றை ஓடச் செய்தோம். மேலும், ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவைகளோ தம் இறைவனின் கட்டளைப்படி பணிபுரிந்து கொண்டிருந்தன. அவற்றில் எது நம்முடைய கட்டளையை விட்டும் பிறழ்கின்றதோ அதனைக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம். 34:13 அந்த ஜின்கள் ஸுலைமானுக்காக அவர் விரும்பியவை அனைத்தையும் உயர்ந்த மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகத்தையொத்த பெரிய தட்டுகளையும், இருப்பிடத்தை விட்டகலாத பெரும் அண்டாக்களையும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தன தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள். என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர்தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர். 34:14 பிறகு நாம் ஸுலைமான் மீது மரணத்தை விதித்தபோது, அவருடைய கைத்தடியைத் தின்றுகொண்டிருந்த கரையான்களைத் தவிர வேறெதுவும் அவருடைய மரணத்தைப் பற்றி அந்த ஜின்களுக்கு அறிவித்துக்கொடுக்கவில்லை. இவ்வாறு ஸுலைமான் கீழே சாய்ந்ததும் ஜின்களுக்குப் புலப்பட்டது. மறைவானவற்றை அவர்கள் அறிபவர்களாய் இருந்திருந்தால் இழிவுதரும் இவ்வேதனையில் அவர்கள் சிக்கியிருந்திருக்க மாட்டார்களே!
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுலைமான்_நபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது