பவோலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Shah Jahan-ki-Baoli.jpg|thumb|ஷாஜஹான்-கி-பவோலி]]
[[File:Baoli Ghaus Ali Shah, Farrukhnagar.jpg|thumb|பவோலி கவுஸ் அலி ஷா, பாரூக்நகர்]]
'''பவோலி''' அல்லது '''படிக் கிணறு''' (Baoli அல்லது Stepwell) என்பது படிக்கட்டு வடிவக் [[கிணறு]]கள் அல்லது குளங்கள் ஆகும். இவை பொதுவாக மேற்கு [[இந்தியா]]விலும், [[பாக்கித்தான்]]வரையும் மற்றும் [[தெற்காசியா]]வின் மற்ற வறண்ட பகுதியிலும் பரந்து காணப்படுகின்றன.
 
வறட்சி காலத்தில் மக்களின் தண்ணீர் தேவைக்காக இந்தக் கிணறுகள் அன்றைய மன்னர்களால் உருவாக்கப்பட்டன. இக்கிணறுகளில் நீரை அடைவதற்குப் படிக்கட்டுகள் மூலமாகக் கீழிறங்கி செல்ல வேண்டும், இவை ஓரளவு ஆழமுள்ள கிணறுகளாகவும், அதைச் சுற்றிலும் படிக்கட்டுகளை அமைத்திருக்கிறார்கள். இப்படியான கிணறுகள் குடிநீருக்கென்று தனியாகவும், குளிப்பதற்கென்று தனியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் இப்படிப்பட்ட கிணறுகள் கோயில்கள், பள்ளிவாசல்கள் ஆகியவற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டன. சில கிணறுகளின் மேலே வழிப்போக்கர்கள் போன்றோர் தங்கிச் செல்வதற்காக அறைகளும் கட்டப்பட்டிருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/பவோலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது