வெதுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
[[படிமம்:Fladenbrot-2.jpg|thumb|right|250px|[[துருக்கி]] தட்டை உரொட்டி]]
 
'''வெதுப்பி''' ''(Bread)'' அல்லது '''உரொட்டி''' என்பது மாவும் தண்ணீரும் கலந்து பிசைந்த குழைவில் இருந்து வேண்டிய வடிவத்தில் உருமாற்றி பின்ன்ன்பின்னர் அட்டு (சுட்டு) செய்யப்படும் ஊட்டமிகு உணவாகும். வெதுப்பி வேளாண்மை தொடங்கிய காலமுதல் வரலாறு முழுவதும் உலகெங்கும் நயந்து உட்கொண்ட முதன்மையான மிகப் பழைய செயற்கை உணவாகும்.
 
மாவும் பிற உட்கூறுகளின் விகிதமும் செய்யும் வழிமுறைகளும் தணலில் அடுதல் (சுடுதல்) முறைகளும் பேரளவில் வேறுபடும். இதனால், உரொட்டிகளின் வகையும் வடிவமும் உருவளவும் உட்கட்டமைப்பும் உலகெங்கும் வேறுபடுகின்றன. உரொட்டி இயற்கையான நுண்ணுயிரிகளாலோ வேதிமங்களாலோ தொழிலகச் செயல்முறை நொதிகளாலோ உயரழுத்தக் காற்றூட்டத்தாலோ நொதுப்பிக்க அல்லது பதப்படுத்தப்படுகின்றன. சிலவகை உரொட்டிகள் பதப்படுத்துவதற்கு முன்பே மரபாக அல்லது சமயச் சடங்காக சமைக்கப்படுவதும் உண்டு. உரொட்டியில் கூலமல்லாத உட்கூறுகளாகிய பழங்களும் கொட்டைகளும் கொழுப்புகளும் உட்கூறுகளாக அமைவது உண்டு. வணிக உரொட்டிகளில், சில கூடுதல் சேர்க்கைப்பொருள்களைச் செய்தலை எளிதாக்கவும் மணம், வண்னம், வாணாள், உட்கட்டமைபு ஆகியவற்றை மாற்றவும் சேர்ப்பர்.
வரிசை 17:
பகல் உணவுடன் பல வடிவங்களில் உரொட்டிகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இது நொறுக்காகவும் உண்ணப்படுவதோடு, கலப்படைகள் செய்யும்போது உட்பொருளாகவும் சேர்க்கப்படுகிறது. வறுப்பு உணவுகல் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, உரொட்டிச் சிதைவுகள் கலக்கப்படுவதுண்டு. இது உரொட்டிப் புட்டுகளிலும் உரொட்டி பலகாரங்களில் சாறுகளைத் தேக்கிவைக்க துளைநிரப்பும் அடைபொருள்களாகவும் முதன்மையான உட்கூறாகவும் பயன்படுகின்றது.
 
உரொட்டி ஊட்டப் பொருளாக மட்டுமன்றி, சமூகவய, உணர்ச்சிவயச் சிறப்பையும் பெற்றுள்ளது. இது சமயச் சடங்குகளில் முதன்மை பங்கு வகிக்கிறது. சமய நீக்கப் பண்பாட்டிலும் அன்றாட வாழ்விலும் தவிக்கதவிர்க்க முடியாத பங்கேற்கிறது. இந்நிலை, மொழியிலும் பழமொழிகளிலும் கொச்சையான சொற்பரிமாற்றங்களிலும்சொற் பரிமாற்றங்களிலும் வெளிப்படுகின்றது. பேச்சுவழக்கானபேச்சு வழக்கான ("He stole the bread from my mouth")என்பதும் வழிபாட்டில் பயன்படும் ("Give us this day our daily bread") என்பதும் சிறந்த எடுத்துகாட்டுகளாகும்.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/வெதுப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது