"சினேகா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8,414 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சுஹாசினி ராஜராம் நாயுடு,என்று அறியப்படுவர் சினேகா, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது)
(சுஹாசினி ராஜராம் நாயுடு,என்று அறியப்படுவர் சினேகா, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் பெரும)
}}
'''சினேகா''' எனப்படும் '''சுகாசினி இராசாராம் நாயுடு''' தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்]], தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். [[2001]] ஆம் ஆண்டு ''இங்கே ஒரு நீலப்பக்சி'' என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். [[2001]] ஆம் ஆண்டு ''என்னவளே'' திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
 
== பிறப்பும் ,கல்வியும் ==
 
'''சினேகா''' மும்பையில் சுஹாசினி எனப் பிறந்தார் [1] ராஜராம் மற்றும் பத்மாவதிக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் இளையவர். அவளுடைய குடும்பம் அவளுடைய பிறப்புக்குப் பிறகு விரைவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு '''அவர்ஓன் ஆங்கிலஉயர்நிலை பள்ளி'''யில் படிப்பை முடித்தார் . பின்னர் குடும்பத்தினர்பன்ருட்டி, என்ற ஊரில் தமிழ்நாட்டில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது
 
== திரைப்பட வாழ்கை ==
 
சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார் .பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார் . என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார் .[[மம்மூட்டி]]யுடன் [[ஆனந்தம்]] படத்தில் நடித்தார் .இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் .இதற்கு '''தமிழ்நாடு சிறந்த நடிகை விருது''' கிடைத்தது .தொடர்ந்து [[புன்னகை தேசம்]] ,[[உன்னை நினைத்து]] ,[[விரும்புகிறேன்]] ஆகிய படங்களில் விருது பெற்றார் . [[பார்த்திபன் கனவு]] ,
[[ஆட்டோகிராப் ]],என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார் .
 
==சொந்த வாழ்க்கை ==
 
2009 இல் சினேகா முதல் முறையாக [[பிரசன்னா]]வுடன் [[அச்சமுண்டுஅச்சமுண்டு]] படத்தில் இணைந்தார் .. பின்னர், [[பிரசன்னா]] சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார்.ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று [[பிரசன்னா]] தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார் . 2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது .
 
==விளம்பர மாடலிங் தொழில்==
 
[[சரவண ஸ்டோர்ஸ்]],[[ ஹார்லிக்ஸ் ]], [[ஆஷிர்வாட்]] போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றினார். திருமணத்திற்குப் பின் சினேகா தன் கணவருடன் [[பிரசன்னா]]வுடன் இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்தார்,சென்னை சர்வதேச ஃபேஷன் வீக், சிட்னி ஸ்லேடன் பேஷன் வாரம் மற்றும் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் நடித்தார்.
 
== பொது வாழ்வும் ,உதவியும்==
 
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில 41 நாளாக போராடி வருகின்றனர்.டெல்லியில் போராடி வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நடிகர் [[பிரசன்னா]],[[ சினேகா]] தம்பதியினர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர்.
என்னுடைய சம்பளம் முழுவதும் கொடுக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெறவில்லை என்றாலும், இயன்றதைச் செய்து இன்பம் பெநும் முயற்சியாகவே நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதே போன்று நடிகர்கள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்
 
== சினேகாவின் தாயார் பேட்டி ==
 
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், ரொம்ப சிரமப்பட்டு சினிமாவிற்கு வந்தவர் சி‌னேகா, என்று சினேகாவின் அம்மா பத்மாவதி முதன்முறையாக மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்
 
"சினேகா சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 12 வருஷம் ஆச்சு.[[ விரும்புகிறேன் ]]படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு வந்த சினேகா, தொடர்ந்து நிற்க கூட நேரம் இல்லாமல் பல படங்களில் நடித்து வந்தார். வீட்டில் அவள் தான் கடைக்குட்டி. ரொம்ப செல்லமா வளர்த்தோம். இன்னும் சொல்லப் போனால் சினிமாவில் அவர் படாத கஷ்டமே இல்லை. அவ்வளவு பிரச்னையையும் அவள் சந்தித்த போது, அவளை தூக்கி விட ஆள் இல்லை. [[ஆட்டோகிராப்]] படத்தில் வர ஒவ்வொரு பூக்களுமே என்ற பாட்டில் வர்ற கஷ்டம் மாதிரியே சினேகாவின் வாழ்க்கை இருந்தது.
அவ்வளவு கஷ்டத்தையும் கடந்து, அவளுக்கு ஒரு நல்ல இடத்தை கொடுத்திருக்கிறார் கடவுள் "
 
== நடித்த திரைப்படங்கள் ==
298

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2427835" இருந்து மீள்விக்கப்பட்டது