பண்ணுறவாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
தூதுவர் விளக்களிப்பு (Diplomatic Immunity) என்பது ஒரு சட்டபூர்வமான விதிவிலக்கு ஆகும். இது பிறநாட்டுத் தூதுவர்களுக்கு உள்நாட்டில் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. மேலும் அவர்களின் மீது உள்நாட்டுச் சட்டப்படி அல்லது நாட்டின் சட்டங்களின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் நாட்டிலிருந்து வெளியேற்ற வழிவகை உள்ளது. இராஜதந்திர உறவுகள் பற்றிய வியன்னா ஒப்பந்தத்தில் சர்வதேச சட்டமாக நவீன இராஜதந்திர விதிவிலக்கு குறியிடப்பட்டது (1961) <ref>http://legal.un.org/ilc/texts/instruments/english/conventions/9_1_1961.pdf</ref>
 
பண்ணுறவாளர்கள் அல்லது தூதுவர்களின் தகவல்களும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. ஆதலால் அவர்கள் கொண்டு செல்லும் உடைமைகளும் ஆவணங்களும் எவ்வித சோதனைளும் செய்யப்படாமல் எல்லைகளை கடந்து, கொண்டு செல்ல நீண்ட காலமாக அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இச்செயல்முறையில் தூதுவர்கள் அல்லது அவர்களுக்காக கொண்டு வரப்படும் அல்லது கொண்டுசெல்லப்படும் சீலிடப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் அடங்கிய பெட்டகத்துக்கு "தூதுவர் பை” (Diplomatic Bag or Diplomatic Pouch) என அழைக்கப்படுகிறது. இப்பை எவ்விதமான சுங்கம், கலால், மற்ற பிற சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தற்காலத்தில் ரேடியோ மற்றும் எண்முறை மின்னணு தகவல் தொழில்நுட்பங்கள் மிகச்சிறந்த தரத்தில் இருந்த போதிலும் இம்முறையில் தகவல் தொடர்பு பொதுவான அம்சமாக இன்றும் நடைமுறையில் உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட சில வல்லரசு நாடுகள் ஒரு முழு கொள்கலக் கப்பலையும் “தூதுவர் பைகளாக” பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவை எவ்வித சோதனைகளுமின்றி அனுமதிக்கப்படுகின்றன. <ref>https://www.state.gov/ofm/customs/c37011.htm</ref>
 
தூதரக விரிகல், பிற காரணங்களால் ஏற்படும் விரோதப் போக்குகள் காரணமாக தூதுவர்களின் ​​தனிப்பட்ட பாதுகாப்பு காரணங்களுக்காக பிணக்கு ஏற்பட்ட நாடுகளில் பணியாற்றும் பண்ணுறவாளர்கள் அல்லது தூதுவர்கள் பெரும்பாலும் திரும்பப் பெறப்படுகின்றனர். <ref>https://www.nbcnews.com/news/world/trump-s-plan-quickly-recall-ambassadors-risky-move-experts-n705131</ref> அதே நேரத்தில் சில சந்தர்ப்பங்களில் அந்நாடு நட்பாக இருந்தாலும், உள்நாட்டு எதிர்ப்பாளர்களிடமிருந்து அல்லது தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படுமாயின் தூதர்கள்
திரும்ப அழைத்துக்கொள்ளப்படுகின்றனர்.<ref>{{cite web | url=https://books.google.co.in/books?id=es9Sunv_y2MC&pg=PA127&lpg=PA127&dq=terror+threat+ambassdor+recall&source=bl&ots=XwP2hpwnfA&sig=DyqZUoDZrgPFrLCPGxA3CS-2z-M&hl=en&sa=X&ved=0ahUKEwiVwqPpq-3WAhXIkJQKHcDpD-cQ6AEIOjAE#v=onepage&q=terror%20threat%20ambassdor%20recall&f=false | title=Islamic State Practices, International Law and the Threat from Terrorism: A Critique of the 'Clash of Civilizations' in the New World Order | publisher=Bloomsbury Publishing | date=31 May 2005 | accessdate=13 அக்டோபர் 2017 | author=Javaid Rehman | pages=280}}</ref> சிலநேரங்களில் தற்காலிகமாக விருந்தினர் நாட்டின் மீது அதிருப்தி தெரிவிக்கவும் தூதுவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இரண்டு சந்தர்ப்பங்களிலும், கீழ்-நிலை ஊழியர்கள் தூதுவர்களின் பண்ணுறவாண்மைப் பணியினை செய்ய வேண்டியிருக்கலாம். சில வேளைகளில் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடல், உளவுபார்த்தல் போன்ற நெறிபிறழ் நடத்தைகளின் காரணமாக விருந்தினர் நாட்டால் குற்றஞ்சாட்டப்பட்டு வெளியேற்றப்படுவர். <ref>http://foreignpolicy.com/2012/05/29/so-how-do-you-expel-an-ambassador-anyway/</ref>
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பண்ணுறவாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது