மின்னணு இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
=== 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ===
[[படிமம்:Teleharmonium1897.jpg|thumb|250px|[[Telharmonium]], [[Thaddeus Cahill]], 1897.]]
ஒலிகளைப் பதிவு செய்யவதற்கான வல்லமை மின்னணு இசையுடன் தொடர்பு உடையதாகக் கருதப்பட்டு வந்திருப்பினும், இது கட்டாயம் அல்ல. நாம் அறிந்த மிக முந்திய [[ஒலிப்பதிவுக் கருவி]], ''போனாட்டோகிராப்'' எனப்படும் கருவியாகும். இதற்கான உரிமம் 1857 ஆம் ஆண்டில் [[எட்வார்ட்-லியொன் ஸ்காட் டி மார்ட்டின்வில்லி]] என்பவருக்கு வழங்கப்பட்டது. இது பார்க்கக்கூடிய வடிவில் ஒலிகளைப் பதிவு செய்யக்கூடியதே அன்றி அவ்வொலிகளை மீண்டும் உருவாக்கும் வல்லமை கொண்டதல்ல. 1878 ஆம் ஆண்டில் [[தாமஸ் ஆல்வா எடிசன்]] ''போனோகிராப்'' என்னும் கருவியொன்றுக்கு உரிமம் பெற்றார். இக் கருவியிலும் ஸ்காட்டின் கருவியிலிருந்தது போலவே உருளை ஒன்று பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான உருளைகளே சிலகாலம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தன. 1887 ல், [[எமில் பெர்லினர்]] என்பவர் [[தட்டு|தட்டைப்]] பயன்படுத்தும் ''போனோகிராப்'' ஒன்றை உருவாக்கினார்.<ref>{{cite book|last1=Swezey|first1=Kenneth M.|title=The Encyclopedia Americana – International Edition Vol. 13|date=1995|publisher=Grolier Incorporated|location=Danbury, Connecticut|page=211}}</ref><ref>{{harvnb|Weidenaar|1995|p=82}}</ref>
 
மின்னணு இசைத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கிய கண்டுபிடிப்பு லீ டி பாரெஸ்ட் என்பவர் உருவாக்கிய மும்முனைய ஆடியன் (audion) ஆகும். 1906 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இதுவே முதலாவது [[வெற்றிடக் குழாய்]] ஆகும். இவ்வெற்றிடக் குழாய்களே மின் சமிக்ஞைகளைப் மிகைப்படுத்தல், வானொலி ஒலிபரப்பு, கணிப்பொறி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுவதற்கான கருவிகளை உருவாக்கப் பயன்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/மின்னணு_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது