மார்ட்டின் லூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
[[இடாய்ச்சு மொழி]]ப் பற்று அதிகமாய் இருந்த காலத்தில் இம்மொழிபெயர்ப்பு வெளிவந்ததாலும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்ததாலும் இது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
 
== திருச்சபைத் தொடர்புரிமை நீக்கமும் மற்றும், வோர்ம்ஸ் நகரின் உயர் அதிகார சபையும் ==
 
1517 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் நாளில் சேக்சோனியில் விட்டென்பெர்க், சகல ஆன்மாக்களின் ஆலயத்தின் கதவில் மார்டின் லூதர் தனது 95 கோரிக்கைகளை ஆணி கொண்டு அடித்தார்.<ref>{{cite web | url=http://www.history.com/topics/martin-luther-and-the-95-theses | title=Martin Luther and the 95 Theses | publisher=History.com | accessdate=22 அக்டோபர் 2017}}</ref> லுாதரின் 95 கோரிக்கைகள் நேரடியாக புனித உரோமையின் கத்தோலிக்கத் திருச்சபையின் மீது தாக்குதல்களை முன்வைத்தன. மார்ட்டின் லுாதர் தொடர்ந்து தனது கோரிக்கை முழக்கங்களை எழுதியும் பேசியும் பரப்பி வந்தார். இதன் காரணமாக லுாதரின் 95 கோரிக்கைகள் தடை செய்யப்பட்டன 1519 ஆம் ஆண்டு சூன் மற்றும் சூலை மாதங்களில் பைபிள் அல்லது விவிலியத்தின் வசனங்களுக்கு விளக்கமளிப்பதற்கான அதிகாரம் தனிப்பட்ட முறையில் போப்பிற்கு மட்டுமே உரித்தானதல்ல என்றும் அவ்வாறான அதிகாரம் விவிலியத்தால் வழங்கப்படவில்லை என்றும் பேசியது, போப் ஆதிக்கத்தின் மீதான நேரடியான தாக்குதலாக இருந்தது. 1520 ஆம் ஆண்டு சூன் 15 ஆம் நாளில் போப், மார்ட்டின் லுாதரை கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலக்கி வைக்கும் கடுமையான நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என்று விளக்கமளிக்க எச்சரிக்கப்பட்டார். அதே ஆண்டு திசம்பர் 10 ஆம் நாள், லுாதர், இந்த உத்தரவைத் தாங்கிய கடிதத்தை, அனைவரும் அறியும்படி பொதுவான இடத்தில் எரித்தார்.1521 ஆம் ஆண்டு சனவரி 21 ஆம் நாள், லுாதர் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டார்.<ref>{{cite web | url=https://www.biography.com/people/martin-luther-9389283 | title=Martin Luther | publisher=Biography.com | accessdate=21 அக்டோபர் 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது