திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 60:
தஞ்சை மாவட்டத்திலிருந்து பிரித்து, திருவாரூர் மாட்டம் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் சில பகுதிகளை ஒன்றிணைத்து இம்மாவட்டம் உண்டாக்கப்பட்டபோது ஏ.டி.பன்னீர் செல்வம் மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் 1998இல் தமிழக அரசின் ஆணையை தொடர்ந்து, மாவட்டத் தலைநகரான திருவாரூரின் பெயரிலேயே வழங்கப்படுகிறது.
 
=='''திருவாரூர் மாவட்ட ஒன்றியங்கள்:'''==
 
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், கொரடாச்சேரி, குடவாசல்.
 
=='''சட்டமன்றத் தொகுதிகள்:'''==
 
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, வலங்கைமான்,நன்னிலம்.
 
=='''வழிபாட்டிடங்கள்:'''==
 
திருவாரூர், மன்னார்குடி, திருச்செங்கட்டான்குடி, திருக்கண்ணபுரம், எண்கான், வலங்கைமான்.
 
=='''சுற்றுலாயிடங்கள்:'''==
 
திருவாரூர், மன்னார்குடி.
 
=='''மாவட்ட முக்கிய பிரமுகர்கள்:'''==
 
மனுநீதிசோழன், தியாகய்யர், முத்துசாமி தீட்சதர், சாமா சாஸ்த்திரி, திருவாரூர் நடேச நாயனக்காரர், திருமருகல் டி.வி.நமச்சிவாயம், வலங்கை சண்முகசுந்தரம் முதலிய புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும், திரு.வி.க., ஏ.டி.பன்னீர் செல்வம், முதல்வர் கருணாநிதி, திருவாரூர் தங்கராசு, ஆரூர்தாஸ், மன்னை நாராயணசாமி, கோட்டூர் அரங்கசாமி முதலியார், வடபாதிமங்கலம் ஆரூரான், சக்கர ஆலை தியாகராஜ முதலியார், கந்தசாமி, கே.பாலசந்தர், நெடுஞ்செழியன் முதலியோர் இம்மாவட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள்.
திருவாரூர்
==தியாகராசர் கோயிற் சிறப்புகள்:==
இவ்வூர்த் தியாகராசர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று.
கோயில் ஐந்து வேலி
வரிசை 103:
'திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்' என்று சுந்தரர் தேவாரம் பாடுகிறது. இதைவிட இவ்வூர்ச் சிறப்பு பற்றி வேறு சொல்ல வேண்டுமா?
 
=='''திருவாரூர்த் தேர்:'''==
 
'திருவாரூர்த் தேரழகு' என்றும் 'திருவாரூர்த் தேரசைவது போல் அசைகிறான்' என்ற பழமொழியும் நாட்டு மக்களிடம் திருவாரூர் தேர்ப்பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது என்பதை அறியலாம். 'ஆழித்தேர் வித்தகனே நான் கண்டது ஆரூரே' என்று திருநாவுக்கரசர் சொல்கிறார். அவர் காலம் 7 ஆம் நூற்றாண்டு. இதன்மூலம் 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தேர்த்திருவிழா நடந்து வருவதை அறியலாம். மற்ற ஊர்களில் உள்ள தேர்கள் அரைத்தேர், முக்கால் தேர்தான். திருவாரூர் தேரே முழுத் தேராகும்.
வரிசை 110:
1926 ஆம் ஆண்டு தேரோட்டத்தின்போது ஏற்பட்ட தீ விபத்தில் திருவாரூர் தேர் முழுவதும் எரிந்தது. 2 நாட்கள் எரிந்ததாக கூறுவர். பின்னர் 1928 ஆம் ஆண்டு புதுத்தேர் உருவாக ஆரம்பித்து 1930 ஆம் ஆண்டு மார்ச் 3ந் தேதி மீண்டும் ஓடியது. இது இன்று நாம் காணும் தேராகும். பின்னர் 1948 ஆம் ஆண்டோடு தேரோட்டம் நின்றுவிட்டது. 1970 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி மற்றும் வடபாதி மங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோரின் முன் முயற்சியால் மீண்டும் ஓடத் தொடங்கியது.
 
=='''தேரின் அமைப்பு:'''==
 
அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடியாகும். விமானம் வரை தேர்ச்சீலைகளால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி. தேர்க்கலசம் 6 அடி என அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடியாகும்.
வரிசை 116:
26.4.98 அன்று தமிழக அறநிலையத்துறை மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மு.தமிழ்குடிமகன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
 
=='''வேளாண்மை:'''==
 
திருவாரூர் மாவட்டத்தின் முக்கியத் தொழிலே வேளாண்மைதான். கீழத்தஞ்சை மாவட்டமாக உள்ள இப்பகுதிகள் பொன் விளையும் பூமி. மேட்டூர் அணை கட்டிய பிறகு வடவாற்றுக் கால்வாயால் மன்னார்குடி வட்டம் பெரும்பயன் அடைந்திருக்கிறது. நன்னிலம் வட்டத்தையொட்டிய பகுதிகள் மிகுந்த வளம் அடைந்திருக்கின்றன. நன்னிலம் வட்டம் நல்ல மழையும், நிலவளமும், ஆற்றுவளமும் ஒருங்கே பெற்றுள்ளது. நன்னிலம் வட்டம் தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக நிலவரி செய்யும் மாவட்டம் ஆகும்.
வெண்ணாற்றுக் கால்வாய் திருத்துறைப்பூண்டி வட்டம் வழியே கடலில் கலக்கிறது. ஆனால் இவ்வட்டத்துக்கு வரும் முன்னரே தண்ணீர் அனைத்தும் பாசனத்துக்குப் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. எனவே இவ்வட்டம் பெரும்பாலும் வானம் பார்த்த பூமியாகவே இருக்கிறது. இருந்தாலும் திருத்துறைப்பூண்டி வட்டாரங்களில் நன்செய் நிலங்களும், நாச்சிக்குளம், முத்துப்பேட்டை வட்டாரங்களில் தென்னந்தோப்புக்களும் உள்ளன.
==தொழில்:==
இம்மாவட்டத்தின் பெருந்தொழில் விவசாயமே. அதற்கடுத்து வடபாதிமங்கலத்தில் ஆரூரான் சர்க்கரை ஆலை நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டு இன்றும் நல்ல முறையில் நடந்து வருகிறது. இதற்குத் தேவையான கரும்பை சுற்று வட்டாரங்களில் பயிர்செய்து இங்கு கொண்டுவரப்படுகிறது. இதற்கடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் முயற்சியால் மன்னார்குடியை அடுத்த வடசேரியில் இரசாயன ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
 
=='''மன்னார்குடி:''' ==
 
1866 முதல் கோட்ட ஆட்சித் தலைமை அலுவலகம் உள்ள நகராக மன்னார்குடி உள்ளது. காட்டுமன்னார்குடியிலிருந்து இவ்வூரை வேறுபடுத்திக் காட்ட 'ராஜமன்னார்குடி' என்றும் அழைப்பர். மன்னையில் சோழர் கட்டிய மூன்று கோயில்கள் உள்ளன. ராஜகோபாலசாமி கோயில் ஆதியில் சமணர் கோயிலாக இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இப்போது இது வைணவக் கோயிலாக இருந்து வருகிறது. 16 கோபுரங்கள், 7 பிரகாரங்கள், ஒற்றைக் கருங்கல்லில் 16.5 மீட்டர் உயரமுள்ள கருடத்தூண், வரலாற்றுச் செய்திகள் அடங்கிய கல்வெட்டுக்கள், ஓவியச் சிறப்பு நிறைந்த பழங்காலத்துப் பாவை விளக்குகள் (திருவிளக்கு நாச்சியார்) ஆங்கிலேய அலுவலர் ஒருவர் செய்து வைத்த கருட வாகனம் ஆகியவை இக்கோயிலில் இருக்கின்றன. இக்கோயிலுக்குச் சற்று தொலைவில் 23 ஏக்கர் பரப்புள்ள ஒரு தெப்பக்குளம் இருக்கிறது.
வரிசை 129:
கோட்டூர்: தேவாரமும், திருவிசைப்பாவாலும் பாடப்பெற்ற 2 கோயில்கள் இவ்வூரில் உள்ளது. சோழ, நாயக்க, மராட்டிய மன்னர்களின் கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன. இவ்வூர் கல்வெட்டை ஆதாரமாகக் கொண்டே சேக்கிழார் காலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வூர் வள்ளல் அரங்கசாமி முதலியார் (1805-1907) 200 வேலி நிலமும், 12 இலட்சம் ரூபாயையும் அறச் செயலுக்காக எழுதி வைத்தார். மாணவர் இல்லம், நூல் நிலையம், புலவர் மன்றம், ராஜகோபாலசாமி கோயில் கட்டளைகள் முதலியன இவர் பெயரால் மன்னார்குடியில் நடைபெறுகின்றன.
 
=='''கூத்தாநல்லூர்:'''==
 
'சின்ன சிங்கப்பூர்' என்ற பெயரைப் பெற்றது இவ்வூர். கிராமங்களுக்கு நடுவில் மாடமாளிகைகள் சூழ நகர் அமைந்துள்ளது. இவ்வூர் முழுவதும் முஸ்லீம்கள் நிறைந்து வாழ்கின்றனர். இவர்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் பரவி வணிகம், வேலைவாய்ப்பு பெற்று இந்நகரை செல்வச் செழிப்புமிக்கதாக மாற்றியுள்ளனர். ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் முன்பு யாராவது வீடு கட்டவேண்டும் என்றால் 'கூத்தாநல்லூரை ஒருமுறை சுற்றிவிட்டு வாருங்கள்' என்று பொதுமக்கள் சொல்லும் அளவுக்கு பல மாளிகைகள் நிறைந்த ஊர். இன்றும்கூட 'ஐசா பேலஸை' பார்க்கலாம். சாரணபாஸ்கரதாஸ் என்கிற பெயரில் அரபு இலக்கியங்கள் மொழிபெயர்த்த பெரியவரும் இவ்வூர்காரர்தான். இவ்வூரையொட்டிய அத்திக்கடை, மரக்கடை முதலிய இடங்களிலும் முஸ்லீம்கள் நிறையபேர் வாழ்கின்றனர்.
 
=='''வடபாதிமங்கலம்:'''==
 
ஆரூரான் சர்க்கரை ஆலையால் இவ்வூர் புகழ்பெற்றது. இந்த ஆலை இருப்பதால் இவ்வூர் அருகிலுள்ள பல கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டு இங்கு அனுப்பப்படுகிறது. ஒன்றுபட்ட தஞ்சைமாவட்டத்தில் ஏற்பட்ட முதல் ஆலைகளில் இதுவும் ஒன்று. இதன் உரிமையாளரான தியாகராஜ முதலியார் இம்மாவட்ட சிறப்பு பிரமுகராவார்.
 
=='''நீடாமங்கலம்:'''==
 
மாவட்டத்தில் அதிக நெல்விளைச்சல் உள்ள பகுதிகளில் இவ்வூர் முக்கியமானது. இங்கிருந்து நெல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மராட்டிய மன்னர் பிரதாப் சிங் 1761இல் கட்டிய 'யமுனா பாய் சத்திரம்' இவ்வூரில் இருக்கிறது. புகழ்பெற்ற தவில் வித்வான், கலியுக நந்தி மீனாட்சிசுந்தரம் இவ்வூர்காரரே ஆவார்.
 
=='''திருநாட்டியத்தான்குடி:'''==
 
இவ்வூர்க் கோயில் கந்தரரால் பாடல் பெற்றது. இவ்வூர் இறைவர் பெயர்: மாணிக்கவண்ணர்; இறைவி மலைமங்கையம்மை.இவ்வூரிலிருந்த கோட்புலி நாயனார் சோழர்களின் சேனைத்தலைவராக இருந்ததாக பெரியபுராணம் தெரிவிக்கிறது. பெளத்த, சமண ஆலயங்கள் இருந்ததாக சுந்தரர் தேவாரம் கூறுகிறது.
 
=='''மகாதேவபட்டினம்:'''==
 
இவ்வூர் மன்னார்குடியிலிருந்து 10கி.மீ தொலைவில் இருக்கிறது. இங்கு ஐதருக்கும் பிரிட்டீஷ் தளபதி பிரெய்த்வெயிட்டுக்கும் 1781இல் போர் நடைபெற்றது. கோட்டையில் சிதைந்த பகுதிகள் காணப்படுகிறது. மா, பலாவுக்கு இவ்வூர் புகழ்பெற்றது.
மன்னைவட்டத்தில் திருக்களர், பெருகவாழ்ந்தான், லெட்சுமாங்குடி, களப்பால், திருமாக்கோட்டை, திருவராமேசுவரம் முதலிய தொன்மையான ஊர்களும் இருக்கின்றன.
 
=='''திருத்துறைப்பூண்டி:'''==
'''திருத்தருப்பூண்டி:'''
 
இவ்வூர் இவ்வட்டத்தில் தலைநகருமாகும். இன்று திருத்துறைப்பூண்டி என்று அழைக்கப்படுகிறது. பல்லவர் காலத்தில் இங்கு துறைமுகம் இருந்ததாகக் கருதப்படுகிறது. 1952லும், 1955லும் உருவான புயல்களால் கடல் நீர் இவ்வட்டத்துக்குள் புகுந்து பெருஞ்சேதத்தை உண்டாக்கியது. திருத்துறைப்பூண்டி என்பது வில்வவனத்தை குறிக்கும் என்பர். இவ்வூர் கோயிலில் "பஞ்சமுக வாத்யம்" இருக்கிறது. திருவாரூருக்குப் பிறகு இங்கு மட்டுமே இந்த இசைக் கருவியைக் காணலாம். இவ்வூருக்கு அருகில் உள்ள ஊரான 'மணலி'தான் புகழ்பெற்ற வள்ளலான மணலி ராமகிருஷ்ண முதலியாரின் பரம்பரை ஊராகும். புகழ்பெற்ற பொதுவுடைமைமிக்க தலைவரான மணலி கந்தசாமி இவ்வூரைச் சார்ந்தவரே ஆவார். இவ்வூர் இப்பகுதியில் முக்கியமான வணிகத்தலமாகும்.
 
=='''முத்துப்பேட்டை:'''==
 
இது ஒரு சிறு துறைமுகம்; படகுகள் கட்டும் தொழில் இங்கு வளர்ந்துள்ளது. கடல் வாணிபத்தில் சிறந்த பாட்டை முஸ்லீம் வணிகர் பலர் இவ்வூரினர். சேதுரஸ்தாவில், இராமேஸ்வரம் சாலை இவ்வூர்வழியே செல்கிறது. இவ்வூர் அருகேயுள்ள சம்புவானோடையில் புகழ்பெற்ற இரண்டு தர்க்காக்கள் உள்ளன. இங்கு நிகழும் சந்தனக்கூடு விழாவுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து முஸ்லீம்கள் வருவார்கள்.
மூன்றாம் இராஜராஜச் சோழன் காலத்தில் புகழ்பெற்ற கோயிலூர் சிவன்கோயில் முத்துப்பேட்டை இரயில் நிலையத்திலிருந்து 1 1/2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.
 
=='''திருக்கோளிலி:'''==
 
திருவாரூர் அருகில் உள்ள இவ்வூர் ஒரு சப்த விடங்கத் தலம். தேவாரம் பாடல்பெற்ற தலமுமாகும். இங்கு நவக்கிரகங்கள் ஒரு தீங்கும் செய்ய இயலாதவாறு கோணமின்றி ஒரே திசையில் நேரே வைக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினாலேதான் இவ்வூர் 'திருக்கோளிலி' என அழைக்கப்படுகிறது. திருக்கோளிலி என்ற பெயர் திருக்குவளை என மருவி இன்று 'திருக்குவளை' என்று அழைக்கப்படுகிறது. இரண்டாம் ராஜராஜச் சோழன், மூன்றாம் இராஜராஜச் சோழன் ஆகியோரின் கல்வெட்டுக்கள் இவ்வூர்க் கோயிலில் உள்ளன. இங்குள்ள கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது. இவ்வூர்தான் தமிழக முதல்வர் கருணாநிதி சொந்த ஊர்.
 
=='''மாவூர்:'''==
 
திருநாட்டியத்தான்கூடிக்கு அருகில் உள்ளது. கல்கத்தாவிலுள்ள காளி கோயிலைப் போன்ற ஒரு கோயில் இங்கு இவ்வூரினரான சர்.ஆர்.எஸ்.சர்மாவால் கட்டப்பெற்றிருக்கிறது. சர்மா கல்கத்தாவில் பத்திரிகை நடத்தியவர். பிரிட்டிஷ் வைஸ்ராய்களின் ஆதரவு பெற்றவர். இந்தியாவிலிருந்து இலண்டனுக்கு ஆகாய விமானத்தில் சென்ற முதல் இந்தியர் இவர்தான் என்று சொல்லப்படுகிறது.
 
=='''நன்னிலம்:'''==
 
திருவாரூர் மாவட்டத்தில் நெல்விளையும் பகுதிகளில் நன்னிலம் வட்டம் முக்கியமானது. இங்குள்ள மதுவனீசுவரர் கோயிலில், சிவபெருமானின் விக்கிரகத்துக்குப் பின்னால் தேன்கூடு இருக்கிறது. இக்கோயில் மிகப்பெரிய கோயிலாகும். இவ்வூர் திருவாரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ளது. நன்னிலத்துக்கு அருகில் உள்ள ஊரின் பெயர்:'மாப்பிள்ளைக் குப்பம்' என்பதாகும்.
மயிலாடுதுறை - அறந்தாங்கி, தஞ்சை திருவாரூர், பேரளம் - காரைக்கால் இரயில் பாதைகள் இவ்வட்டத்தின் வழியே செல்லுகின்றன.
 
=='''எண்கண்:'''==
 
புகழ்பெற்ற முருகன் கோயில்களில் இவ்வூரும் ஒன்று. கடாரங்கொண்டான்: இவ்வூர் திருவாரூர் - நாகை சாலையிலிருக்கிறது. இங்குள்ள கோயிலுக்கு அழகான மதில் சுவர்கள் உள்ளன. இத்தகைய மதில்களை இந்நாளில் அமைக்க 100 கோடி ரூபாய் கொட்டினாலும் கட்ட முடியாது.
 
=='''குடவாயில்:'''==
 
இவ்வூரின் பெயர் இப்போது கொடவாசல்குடவாசல் என்று மருவி வழங்கி வருகிறது. கும்பகோணத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் குடவாசல் இருக்கிறது. குடம் என்பது மேற்கைக் குறிக்கிறது. குடவாயில் ஒரு நகரின் மேற்குப் பகுதி. இங்கே குடந்தையைத் தலைநகராகக் கொண்ட அரசர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படுகிறது.
'தண்குடவாயில் அன்னோள்' என்று அகநானுறு கூறுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
 
=='''தலையாலங்காடு:'''==
 
தலையாலங்கானம் என்பது இவ்வூரேயாகும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பெரும் போர்க்களம் இதுவே. நெடுநெல்வாடையும் மதுரைக் காஞ்சியும் இவ்வூரில் நிகழ்ந்த போர் வெற்றியைப் புகழ்கின்றன. இவ்வூர் குடவாசலிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது 53.சிமிழி ஊராட்சியில் அமைந்துள்ளது. பெருவேளூர், திருக்கரவீரம் என்ற பாடல்பெற்றத் தலமும் தலையாலங்காட்டுக்கு அருகே உள்ளன.
 
=='''திருக்கண்ணபுரம்:'''==
 
திருவாரூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்களால் இங்குள்ள பெருமாள்கோயில் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வூரிலுள்ள கோயில் 12 ஆம் நூற்றாண்டில் சோழர் பாணியில் கட்டப்பட்டது. முனியதரையன் என்ற சிற்றரசன் அக்காலத்தில் ஏற்படுத்திய அறச்செயல்படி இன்றும் 'முனியதரையன் பொங்கல்' இக்கோயிலில் வழங்கப்படுகிறது. திருக்கண்ணபுரம் பொங்கலைப் பற்றி சோழ மண்டல சதகப் பாடல் ஒன்று உண்டு.
வரிசை 197:
வளஞ்சேர் சோழமண்டலமே.
 
=='''திருக்கண்ணங்குடி:'''==
 
கீவளூர் இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இவ்வைணவத்தலம் இருக்கிறது. பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட கருடாழ்வார் திருவுருவம் இக்கோயிலில் இருக்கிறது. அவ்வுருவம் கைகளை ஒன்றின்மேல் ஒன்றாகக் குறுக்கே மடக்கி வைத்த நிலையில் அமைந்து தோற்றப்பொலிவு பெற்றது.
வரிசை 203:
இரவில் மூடாத இலைகளையுடைய புளியமரம்; பூத்துக் காய்த்தாலும் விதையை நட்டால் முளைக்காத வகுளமரம்; வேறு எங்கும் நல்லநீர் இல்லாவிட்டாலும் ஓர் இடத்தில் மட்டும் நன்னீர் கிடைக்கும் கிணறு; ஆகியவை இங்கு உள்ளன. இதையொட்டிய பழமொழி இங்கு நிலவுகிறது. 'உறங்காப்புளி ஊறாக்கிணறு, காயாவகுளம், தோரா வழக்கு திருக்கண்ணங்குடி'.
 
=='''திருக்கொள்ளம்பூதூர்:'''==
 
இவ்வூர் வெட்டாற்றின் வடகரையிலிருக்கிறது. இவ்வூர் ஞானசம்பந்தருடைய புராணத்துடன் தொடர்புடையது. இவ்விழா ஐப்பசி அமாவாசை நாளில் நடைபெறுகிறது. விபுலானந்தர் எழுதிய 'யாழ்நூல்' வெளிவர உதவிய பெ.ராம.ராம. சிதம்பரம் செட்டியார் ஆதரவால் இவ்வூர் கோயிலிலேயேதான் அரங்கேற்றம் செய்யப்பெற்றது.
 
=='''திருச்செங்காட்டங்குடி:'''==
 
இச்சிற்றுர் நன்னிலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ளது. திருவாரூரிலிருந்து 22.கி.மீ. தொலைவிலுள்ளது
வரிசை 214:
சிறுத்தொண்டர் நினைவாக இக்கோயிலில் முதலாம் ராஜராஜன் சிறுத்தொண்டர் மண்டபம் கட்டியிருக்கிறான்; இக்கோயிலிலுள்ள நவதாண்டவங்கள் அழகான சிலை வடிவங்களாக உள்ளன. இக்கோயிலில் காலையில் தொழுதால் வினை அகலும்; உச்சி வேளையில் வழிபட்டால் இப்பிறப்பின் துயர் நீங்கும்; அந்தி மாலையில் வணங்கினால் ஏழ் பிறப்பின் வெந்துயர் யாவும் விடும் என்பது மக்களின் நம்பிக்கை.
 
=='''திருப்புகலூர்:''' ==
 
இவ்வூர் நன்னிலத்திலிருந்து நாகை செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவிலுள்ள சிற்றுர் அப்பருடன் தொடர்புடைய ஊர். பாடல்பெற்ற தலம். இங்குள்ள கோவில் பெரியது. இதைச். சுற்றி மூன்று பக்கமும் அகன்ற அகழிகள் உள்ளன; ஊருக்குத் தென்பக்கத்திலுள்ள முடிகொண்டான் ஆற்றிலிருந்து பாய்காலும் வடிகாலும் இருப்பதால் அகழி எப்போதும் தெளிந்த நீர் உடையதாக இருக்கிறது.
வரிசை 220:
அம்மன் பெயர் கருந்தாழ் குழலி; திருப்புகலூர்க் கோயிலுக்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்னும் உட் கோயிலும் தேவாரம் பாடல்பெற்றது. இங்குள்ள நவக் கிரகங்கள் 'ட' என்ற அமைப்பில் உள்ளன; அப்பருக்கென்று தனி சந்நிதி உண்டு. நாவுக்கரசர் பெயரால் திருமடமும் நந்தவனமும் உள்ளன. இங்கு 67 பழமையான கல்வெட்டுக்கள் இருக்கின்றன. நெற்குன்றவாணர் என்ற புலவர் பாடியுள்ள 'திருப்புகலூர் அந்தாதி' இலக்கியம் இவ்வூருக்கு உண்டு.
 
=='''திருமருகல்:'''==
 
இவ்வூர் நன்னிலத்திலிருந்து நாகூர் செல்லும் வழியில் இருக்கிறது. அப்பரும் சம்பந்தரும் இங்கு கோயில் கொண்டுள்ள மாணிக்க வண்ணரையும், வண்டுவார் குழலியையும் வணங்கியுள்ளனர். சோழன் செங்கணான் கட்டிய மாடக் கோயில்களுள் திருமருகல் கோயிலும் ஒன்று.
 
=='''திருவாஞ்சியம்:'''==
 
நன்னிலத்துக்கு 6 கி.மீ. தொலைவிலுள்ள இவ்வூர், தேவாரத்தாலும், திருப்புகழாலும், இராஜராஜன் கட்டிய கோயிலாலும் அதிலுள்ள யமன் சந்நிதியாலும் இறைவனுக்கு உள்ள யமன் வாகனத்தாலும் புகழ்பெற்றது.
 
=='''திருவிற்குடி:'''==
 
சிவபெருமானுக்குப் பின்னால் விஷ்ணு வடிவம் இருப்பது இங்குள்ள கோயிலின் சிறப்பு. சிவபெருமானின் எட்டு வீரத் தலங்களுள் இவ்வூர் ஒன்று.
 
=='''தீபங்குடி:'''==
 
இவ்வூர், நன்னிலத்திற்குத் தென்மேற்கே எட்டு கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது - சமணர் கோயிலுள்ள இடம். இக்கோயில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பெற்றதென்று கூறுகின்றனர். பழங்கோயில் ஆற்றால் அழிக்கப்பட்டதாம். இங்கு சமணர்கள் வாழ்கின்றனர்.
கலிங்கத்துப்பரணி பாடிய கவிச்சக்ரவர்த்தி செயங்கொண்டார் பிறந்த ஊர் இதுவே ஆகும்.
 
=='''பேரளம்:'''==
 
இவ்வூர் காரைக்காலுக்குச் செல்லும் வாயிலாக அமைந்திருக்கிறது. தருமபுர ஆதீனத்திற்குட்பட்ட சுயம்புநாதசாமி கோயில் இவ்வூரில் இருக்கிறது. இது மேற்குப் பார்த்த கோயில். அம்பிகை - பவானி அம்பிகை; தெற்கு பார்த்த சந்நிதி.
 
=='''வலங்கைமான்:'''==
 
கும்பகோணத்திற்கு தெற்கே 10 கி.மீ. தொலைவில் ஆற்றின் கரையில் உள்ளது. இவ்வூர்க் கோயிலில் சிவபெருமானின் வலதுகையில் மான் இருப்பதால், வலங்கைமான் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற ஆங்கிலப் பேச்சாளர் Right honorable silver tunk வ.ச.சீனிவாச சாஸ்திரியார் பிறந்ததும் இவ்வூரே.
நன்றி-தமிழ் சுரங்கம் இணைய தளத்திற்கு.
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது