மட்பாண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
== வரலாறு ==
மட்பாண்ட வரலாற்றின் பெரிய பகுதியானது வரலாற்றுக்கு முந்தைய, எழுத்தறிவுக்கு முந்தைய [[தொல் பழங்காலம்|தொல்பழங்காலக்]] கலாச்சாரத்தைச் சார்ந்ததாக உள்ளது. எனவே, இந்த வரலாற்றின் பெரும்பகுதி [[தொல்லியில் ஆய்வுகள்|தொல்லியல் ஆய்வுகளில்]] கிடைக்கப் பெற்ற கலைப்படைப்புகளின் வாயிலாகவே பெறப்படுகிறது. மட்பாண்டத்தின் ஆயுள் மிகவும் நீடித்தது என்பதால், மட்பாண்டங்கள், ஓட்டுச்சில்லுகள் ஆகியவை பல்லாயிரம் ஆண்டுகளாக தப்பிப்பிழைத்து தொல்லியல் ஆராய்ச்சி நடைபெறும் தளங்களில் கிடைக்கப்பெறுகின்றன.
 
மட்பாண்டக் கலை அல்லது மட்பாண்டத் தொழில் கலாச்சாரத்தின் பகுதியாக மாறுவதற்கு முன்பு, பல நிலைகள் பொதுவாக சந்திக்கப்பட்டிருக்க வேண்டும். அவை,
* முதலில், மட்பாண்டம் செய்வதற்கு பொருத்தமான களிமண் கிடைக்க வேண்டும். ஆரம்ப மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுக்களங்கள், ஒழுங்காக வடிவமைக்கப்படவும், சுடுவதற்கும் ஏதுவான, உடனடியாக கிடைக்கக்கூடிய களிமண் மூலங்களை கொண்டிருக்கும் இடங்களுக்கு அருகாமையில் உள்ளவையாக உள்ளன. பலவிதமான களிமண் வகைகளை சீனா கொண்டிருந்துள்ளதால், மட்பாண்டத்தொழில் அல்லது கலையில் முன்னோடியாகத் திகழும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்துள்ளது. சீனா மட்டுமல்லாது வேறு பல நாடுகளும் பல்வேறு களிமண் வகைகளின் பெரிய படிவுகளைக் கொண்டுள்ளன.
* இரண்டாவதாக, கச்சா களிமண்ணிலிருந்து சுட்டாங்கல் வரை உருமாற்றம் செய்யப்படும் வெப்பநிலையை உருவாக்குதற்கு வாய்ப்பிருந்திருக்க வேண்டும். மட்பாண்டங்கள் சுடப்படுவதற்கு ஏற்ற வெப்பநிலையை நம்பகமான முறையில் உருவாக்கும் முறைகள் கலாச்சார வளர்ச்சியின் பிற்காலம் வரையிலும் உருவாக்கப்பட்டதாக அறியப்படவில்லை.
* மூன்றாவதாக, களிமண் மட்பாண்டங்களைத் தயாரிக்கவும், வடிவமைக்கவும், சூளையில் சுட்டு பக்குவப்படுத்தவும் போதுமான நேரம் கிடைத்திருக்க வேண்டும். தீயைக் கட்டுப்படுத்துவதற்கு மனிதர்கள் அறிந்த பிறகும் கூட நிலையான இருப்பிடத்தில் வாழும் நிலையைப் பெறும் வரை மனிதர்கள் மட்பாண்டம் உருவாக்குவதை அறிந்திருக்கவில்லை. மனிதர்கள் விவசாயம் செய்தலில் நிபுணத்துவம் பெற்று நிரந்தரமான குடியேற்றங்களுக்கு வழிவகுத்த பின்னரே மட்பாண்டம் உருவாக்கப்பட்டது என்று கருத வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், பழங்காலத்திலேயே அறியப்பட்ட மட்பாண்டமானது சீனாவிலிருந்து கி.மு.20,000 க்கு முன்னதாக, அதாவது விவசாயமெல்லாம் அறியப்படுவதற்கு முன்னதாகவே இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது.
* நான்காவது, அதன் உற்பத்திக்கான அவசியம் இருந்திருந்தால் மட்டுமே மட்பாண்டங்களைத் தயாரிப்பதற்கான வளங்களைக் குறித்து நியாயப்படுத்த முடியும்.ref>William K. Barnett and John W. Hoopes, ''The Emergence of Pottery: Technology and Innovation in Ancient Society'', Smithsonian Institution Press, 1995, p. 19</ref>
 
== மூலப்பொருட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மட்பாண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது