லூக்கா நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 5:
மற்ற நற்செய்தி நூல்களான [[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயு நற்செய்தி]],[[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு நற்செய்தி]] என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து [[ஒத்தமை நற்செய்தி நூல்கள்]] (Synoptic Gospels) <ref name="ஒத்தமை நற்செய்திகள்">[http://en.wikipedia.org/wiki/Synoptic_Gospels ஒத்தமை நற்செய்திகள்]</ref> என்று அழைக்கப்படுவதும் உண்டு.
 
லூக்கா நற்செய்தி [[இயேசு கிறித்து|இயேசுவைப்]] பற்றித் தகவல் தருகின்ற நான்கு [[நற்செய்திகள்|நற்செய்திகளிலும்]] அழகும் சிறப்பும் பொருந்தியது என அறிஞர் கூறுவர். ஏன், உலக இலக்கியத்திலேயே லூக்கா நற்செய்தி ஒரு சிறப்பிடம் பெறுகிறது. இந்நூலின் ஆசிரியர் பிற இன-கிறிஸ்தவர் என்றும், அவர் யூத சமய மரபுகள் பற்றி நன்கு புலமை பெற்றிருந்தார் எனவும் தெரிகிறது. [[இயேசு|இயேசுவை]] யூத சமயத்தில் வேரூன்றியவராக லூக்கா காட்டுகின்றார். அதே சமயத்தில், கிறிஸ்தவ நம்பிக்கையானது எருசலேமிலிருந்து, மத்திய தரைக் கடல் பகுதிகளைத் தாண்டி உரோமைதாண்டிஉரோமை நகர் வரை பரவியதையும் அவர் உயிரோட்டமான விதத்தில் விவரிக்கின்றார்.
 
லூக்கா தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு இந்நூலைப் படைத்துள்ளார். [[இயேசு|இயேசுவைப்]] பற்றிப் பிற நூல்கள் இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாற்று்ப் பின்னணியோடும் யாவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக் 1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயச் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/லூக்கா_நற்செய்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது