13,973
தொகுப்புகள்
சி (+ cleanup) |
|||
== யூக்ளிடின் எலிமென்ட்சு (Elements of Euclid) ==
எலிமென்ட்சு எனும் நுால் பழைய கிரேக்கத்திலிருந்து கிடைக்கப் பெற்ற கணிதம் தொடர்பான மிகப்பெரிய ஆய்வுக்கட்டுரையாகும். இந்த ஆய்வுக்கட்டுரையானது 13 தொகுதிகளைக் கொண்டதாகும். வரையறைகள், எடுகோள்கள், ஆய்வுக்கருத்துரைகள், கோட்பாடுகள், கருத்துரைகளுக்கான கணிதவியல் நிரூபணங்கள் போன்றவற்றின் தொகுப்பாகும். இந்த நூலானது, [[யூக்ளீட் வடிவியல்|யூக்ளிட் வடிவியல்]], [[எண் கணிதம்]] மற்றும் பொதுஅளவில்லாத [[கோடு]]கள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது. இது தர்க்க மற்றும் நவீன அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான கருவியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் தர்க்கரீதியான கடுமை 19 ஆம் நூற்றாண்டு வரை விஞ்சப்படவில்லை. யூக்ளிடின் எலிமென்ட்சானது இதுவரை எழுதப்பட்டவற்றில் மிகவும் வெற்றிகரமான செல்வாக்கு வாய்ந்த பாடப்புத்தகம் என்று குறிப்பிடப்படுகின்றது.<ref name="Boyer Author of the Elements">{{cite book|last=
எலிமென்ட்சு நுாலின் முதல் 6 பிரிவுகள் வடிவியல் குறித்தது. அதாவது, முதல் 3 பிரிவுகள் [[முக்கோணம்]], [[இணைகரம்]], [[செவ்வகம்]], [[சதுரம்]] ஆகியவற்றின் அடிப்படைப் பண்புகளையும், 4ஆவது பிரிவு வட்டத்தின் பண்புகள், வட்டத்தை ஒட்டிய கணக்குகளையும், 5 ஆவது பிரிவு [[விகிதம்]] பற்றியும், ஆறாவது பிரிவு வடிவியல் பயன்பாடு பற்றியும், 7ஆவது பிரிவு மீப்பெரு பொதுவகுத்திகளைப் பற்றியும், எட்டாவது மற்றும் ஒன்பதாவது பிரிவுகள் [[பெருக்கல் வரிசை|பெருக்கல் தொடர்]] பற்றியும், பத்தாவது பிரிவு [[விகிதமுறா எண்]]களைப் பற்றியும், 11, 12 ஆவது பிரிவுகள் முப்பரிமாண வடிவியல் பற்றியும் எழுதப்பட்டிருந்தது.<ref>{{cite book | title=கணிதம் கற்பித்தல் - ஆசிரியர் பட்டயப் பயிற்சி - முதலாம் ஆண்டு | publisher=தமிழ்நாட்டுப் பாடநுால் கழகம் | year=2009 | location=சென்னை | pages=18}}</ref>
* பகா எண்கள் குறித்த யூக்ளிடின் பணி
* யூக்ளிடின் லெம்மா - ஒரு [[பகா எண்]]ணானது இரு எண்களின் பெருக்கற்பலனை மீதியின்றி வகுத்தால், குறிப்பிட்ட அந்த பகா எண்ணானது அந்த இரண்டு எண்களில் ஒரு எண்ணை வகுக்கக்கூடியதாக இருக்கும் என்ற பகா எண் தொடர்பான அடிப்படைப் பண்பை வரையறுத்துள்ளார்.
* [[எண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம்]] (அல்லது) தனித்த பகாக் காரணியாக்கத் தேற்றம் - [[1 (எண்)|1]]ஐ விடப் பெரியதான<ref>Using the
* யூக்ளிடின் [[படிமுறைத் தீர்வு]] - இரண்டு எண்களின் [[மீப்பெரு பொது வகுத்தி]] (G.C.D) கணக்கிடுவதற்கான மிகவும் பயனுள்ள முறையாகும். இரண்டு எண்களையும் மீதமின்றி வகுக்கக்கூடிய மிகப்பெரிய எண்ணே மீப்பெரு பொது வகுத்தி எனப்படும்.
* யூக்ளிடு ஒரு வடிவத்துடன் தொடர்புடைய வடிவியலின் அமைப்பு, வெளியில் (space) அதன் ஒப்புமை நிலைகள் மற்றும் பண்புகள் ஆகியவற்றைக் குறித்து விவரித்தார். யூக்ளிடு, வடிவியலைத் தானே விளங்கிக் கொள்கின்ற வகையிலான, காரண காரிய கருத்துத் தொடர்புடைய தேற்றங்களின் வடிவத்தில் அளித்தார். அவரது இப்பணியே [[யூக்ளீட் வடிவியல்|யூக்ளிடு வடிவியல்]] என அழைக்கப்படுகிறது.<ref>{{cite web | url=http://www.biographyonline.net/scientists/euclid.html | title=Euclid biography | publisher=Biographyonline | date=24 March 2015 | accessdate=27 செப்டம்பர் 2017 | author=Pettinger, Tejvan}}</ref>
=== கணிதவியலுக்குப் பொதுவான மெய்ம்மைகள் அல்லது எடுகோள்கள் ===
# ஒரே பொருளுடன் சமமான பொருட்கள் அனைத்தும் அவைகளுக்குள் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கும்.
# சமமானவை சமமானவற்றுடன் கூட்டப்பட்டால் முடிவுகளும் சமமானவைகளாக இருக்கும்.
=== வடிவவியலுக்கேயான மெய்ம்மைகள் அல்லது எடுகோள்கள் ===
# ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளியை இணைத்து நேர்கோடு வரையலாம்.
# மையப்புள்ளியில் இருந்து குறிப்பிட்ட ஆரத்தைக் கொண்டு வட்டம் வரைய முடியும்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:கணிதவியலாளர்கள்]]
|
தொகுப்புகள்