மட்பாண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
மட்பாண்டங்கள் பலவிதமான முறைகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்றன. அவற்றில் சில:
* கைகளால் வடிவமைத்தல் : இது தொடக்ககால முறையாகும். களிமண் பாண்டங்கள் களிமண் சுருள்களிலிருந்து வடிவமைக்கப்படுகின்றன. களிமண்ணின் தட்டையான அடுக்குகளை இணைத்தல் அல்லது களிமண் திட பந்துகளைப் பிசைந்து பிணைத்தல் அல்லது இந்த இரண்டு முறைகளையும் சேர்த்து பயன்படுத்தி களிமண் பாண்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு கைகளால் உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் பாகங்கள் பெரும்பாலும் களிமண் மற்றும் நீர் சேர்ந்த தொங்கல் கலவைகளைக் கொண்டு சீட்டு எனும் துணைக்கருவியின் உதவியுடன் ஒன்றிணைக்கப்படுகின்றன. களிமண்ணால் ஆக்கப்பட்ட பாண்டமானது சூளையிலிட்டு சுடுவதற்கு முன்னரோ அல்லது சுடப்பட்ட பின்னரோ அலங்கரிக்கப்படலாம்.
* குயவரின் சக்கரம் : "வீசுதல்" என்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையில், களிமண்ணானது ஒரு சுழல் மேடையின் நடுவில் சக்கரத்தலை என்ற பகுதியில் வைக்கப்படும். பானை செய்பவர் இச்சக்கரத்தை ஒரு குச்சியின் மூலம் தனது கால்களில் உள்ள விசையைப் பயன்படுத்தியோ அல்லது மின் மோட்டாரைப் பயன்படுத்தியோ தேவைப்படும் வேகத்தில் சுழற்றுவார். இந்தச் செயல்முறையின் போது, சக்கரம் சுழலச் சுழல, மெல்லிய களிமண்ணின் திடக்கோளம் அழுத்தப்பட்டு, பிதுக்கப்பட்டு, மென்மையாக மேல்நோக்கியும், வெளிநோக்கியும் இழுக்கப்பட்டு ஒரு வெற்றிடக்கலனாக வடிவமைக்கப்படுகிறது. முதல் படிநிலையானது, சீரற்ற களிமண் பந்தை சமச்சீரான சுழற்சியைப் பயன்படுத்தி கீழ்நோக்கியும், உள்நோக்கியும் அழுத்துவது களிமண்ணை மையத்திற்குக் கொணரும் செயலாகும். இது மிக முக்கியமான அதிகத் திறன் தேவைப்படுகின்ற படிநிலையாகும்.திறப்பு ஏற்படுத்துவது (திடமான களிமண் பந்திலிருந்து மையத்தில் திறப்பு கொண்ட ஒரு வெற்றுக் கோளத்தை உருவாக்குவது), தளப்படுத்துதல் (தட்டையான வட்ட வடிவ அடிப்புறத்தை பானையின் உட்புறத்தில் உருவாக்குதல்) எறிதல் அல்லது இழுத்தல் (பானையின் உட்புறமிருந்து பானையின் சுவர்களை ஒரே அளவிலான தடிமனில் பரவிவிடுதல் மற்றும் செவ்வியதாக்கல் (தேவையற்ற அல்லது அதிகப்படியான களிமண்ணை நீக்கி தேவைப்படும் வடிவத்தைத் துல்லியமாக்குவது ). ஏற்றுக்கொள்ளக்கூடிய தரநிலைகளுடன் மண்பாண்டங்களை உருவாக்குவதற்கு குயவரின் சக்கரத்தில் எறிதல் செயல்முறையைக் கையாள குறிப்பிடத்தக்க திறன் மற்றும் அனுபவம் தேவைப்படுகிறது. அவ்வாறான அனுபவமும், திறனும் இருக்கும் நேர்வில் உருவாக்கப்படும் பாண்டங்கள் உயர் கலை நேர்த்தியுடனும் அமையும்.<ref>"Whitewares: Production, Testing And Quality Control." W.Ryan & C.Radford.'' Pergamon Press.'' 1987</ref>
 
== பல விதமான மட்பாண்டங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மட்பாண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது