பகதூர் சா ஆட்சி செய்த முகலாயப் பேரரசு, [[தில்லிக் கோட்டைசெங்கோட்டை]]யிலும்யை விடச் சற்றுப் பெரியதாகவே இருந்தது. பிரித்தானியரே அக்காலத்து இந்தியாவில் பலம் வாய்ந்த [[அரசியல்]], இராணுவ சக்தியாக விளங்கினர். [[பிரித்தானிய இந்தியா]]வுக்கு வெளியே சிறிதும் பெரிதுமான பல அரசுகள் இருந்தன. பிரித்தானியர் முகலாயப் பேரரசருக்கு ஓரளவு மதிப்புக் கொடுத்ததுடன், அவருக்கு [[ஓய்வூதியம்]] வழங்கப்பட்டதுடன், சில [[வரி]]களை அறவிடுவதற்கான உரிமையும், தில்லியில் சிறிய படையொன்றை வைத்திருப்பதற்கான அனுமதியும் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் அவர் இந்தியாவில் இருந்த எந்த சக்திக்கும் பயமுறுத்தலாக இருக்கவில்லை. பகதூர் சா, அரசு நடத்துவதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்ததுடன், பேரரசு எண்ணங்கள் எதுவும் இல்லாதவராகவும் இருந்தார்.