உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 347:
 
தொடர்பங்களிப்பாளர் போட்டி பரபரப்பாக நடைபெற்று முடியும் தறுவாயில் உள்ளது. இந்த நேரத்தில் தாங்கள் தான் முதலாவதாகவும் உள்ளீர்கள். ஆனால் முதல் இடம்பெறுவது கேள்விக்குறியே. காரணம், இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளவர்கள் நினைத்தால் உங்களை முந்திவிடலாம். இவ்வளவு நாளும் சிறப்பாக பங்குபற்றி நீங்கள் எதிர்பார்த்த கனவை நனவாக மாற்றுவதற்கு தொடர்ந்தும் போட்டியுடன் போராட வேண்டியுள்ளது. சற்றும் பின்வாங்கமல் தொடர்ந்து பல கட்டுரைகளை வேகமாக, சிறப்பாக விரிவாக்கி தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றிபெற என் வாழ்த்துக்கள். நன்றி!...--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:46, 18 அக்டோபர் 2017 (UTC)
:போட்டிக்கு அனுப்பப்பபடும் முழுக் கட்டுரைகளையும் முழுமையாக, தீர்க்கமாக வாசிப்பதில்லை. உங்களுடைய கட்டுரைகளை ஓரளவு மேலோட்டமாகப் பார்ப்பதே வழக்கம். ஆனால் [[டியேகோ வெலாஸ்க்குவெஸ்]] கட்டுரையை முழுமையாக வாசித்தபோது, பல இடங்களில் சொற்றொடரைப் புரிந்து கொள்வதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. சில இடங்களில் சொற்றொடர்கள் சரியாக அமையாதது போன்ற தோற்றத்தைத் தருகிறது. பல சொற்றொடர்களில் நிறுத்தற்புள்ளிக்குப் பதில் காற்புள்ளி இட்டு, தகவலை நிறைவு செய்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். எ.கா.
# ''இவர் வரைந்த மியூசோ டெல் பிரொடோ உருவப்படம் சான் பெலிப்பிவின் நடவடிக்கைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது, '''அவரால் உற்சாகத்துடன் பெற்றுக் கொள்ளப்பட்டது'''. தற்போது அவ்வுருவப்படம் இழக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் கிடைக்கபெற்ற வெலாசுக்வெசு வரைந்த அரசரின் 1070, 1071 என்ற எண்ணிட்ட இரண்டு ஓவியங்களில் செவில் காலத்தின் குறிப்பு காணாமல் போனது '''மற்றும் திண்மையும் மிகவும் மென்மையாக உள்ளது'''. '' என்ற சொற்றொடரமைப்பு வாசிப்பதற்குக் கடினமாக இருப்பதுடன், புரிந்து கொள்வதிலும் சிரமம் உள்ளது. எது அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, எது மற்றும் திண்மையும், மிகவும் மென்மையகவும் உள்ளது என்பதுபோன்ற கேள்விகள் எழுகின்றன.
# கட்டுரை முடிவில் ''எசுப்பானியாவின் பெண்மயமாக்கல் நம்பிக்கையுடன் அமைதியாக அமர்ந்துள்ளது.'' என்ற சொற்றொடர் எந்தத் தகவலுடன் தொடர்புபடுத்தப்பட்டுச் சொல்லப்பட்டுள்ளது என்பது புரியவில்லை.
:தயவுசெய்து சரிபாருங்கள். நன்றி.--[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 09:49, 28 அக்டோபர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:கி.மூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது