சியார்ச் வாசிங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
== அமெரிக்கப் புரட்சிக்கு முந்தைய காலம் (1759 - 1774) ==
பிரெஞ்சு,செவ்விந்தியப் போருக்குப் பின்னர், வாசிங்டன் விதவையான மார்தா டான்ட்ரிட்ஜ் கஸ்டிஸை மணந்தார். தனது சகோதரர் லாரன்சு இறப்புக்குப் பின் மவுண்ட் வெர்னான் தோட்டத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொண்டார். மார்த்தாவின் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் பார்த்துக் கொண்டார். வாசிங்டனுக்கும் மார்த்தாவிற்குமான திருமண வாழ்வில் குழந்தைகள் ஏதும் இல்லை. தனது பண்ணையை மிக அதிக அளவில் கவனித்து தனது சொத்துக்களை அதிகப்படுத்தினார். அவர் தனது வாழ்வு முழுவதுமே, விவசாயத்தை தனது மதிப்புமிக்க தொழிலாகக் கருதினார். சிறிது சிறிதாக தனது நிலப்பரப்பை 8000 ஏக்கர் அளவிற்கு அதிகப்படுத்தினார். சியார்ச் வாசிங்கடன் விர்ஜீனியாவின் மிகப்பெரிய நில உரிமையாளராகி விர்ஜீனியா பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவிலேயே, வாசிங்டன் மற்றும் அவரோடு இணையாக இருந்த நில உரிமையாளர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நேர்மையற்ற அணுகுமுறையைக் குறித்து அதிருப்தியடைந்திருந்தார்கள். அவர்கள் தங்களது உரிமைக்காக விவாதிக்கவும், போராடவும் தொடங்கியிருந்தார்கள். இதற்கு ஆங்கிலேய அரசு மறுத்த போது ஒரு புரட்சியில் ஈடுபடவும் தயாராயினர்.<ref>{{cite web | url=https://www.biography.com/people/george-washington-9524786 | title=George Washington | publisher=Biography.com | accessdate=28 அக்டோபர் 2017 | author=Biography.com Editors}}</ref>
 
== அமெரிக்கப்புரட்சி ==
• போஸ்டன் முற்றுகையின் போது 1775 ஜூலையில் வாசிங்டன் பெருநிலப்பகுதியின் இராணுவத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார். எட்டு ஆண்டுகளுக்கு நீடித்திருந்த போரின் போக்கின்போது, அவர் நல்ல முறையில் பயிற்சி பெறாத, போதுமான அளவு படைக்கலன்கள் வழங்கப்படாத படைகளை வைத்துக்கொண்டு, அவர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து சிறந்த தளபதியாக முன்னணியில் இருந்தார்.
• தொடக்கத்தில், அவர் வென்றதை விட அதிக போர்களில் இழந்தார்; ஆனால் அவரது நிலைப்பாட்டைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினார். அந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய படைகளைத் தொடர்ந்து துன்புறுத்துவது, பெரிய நடவடிக்கைகளைத் தவிர்ப்பது போன்றவை அவரது உத்தியாக இருந்தது. பின்னர் அவர் தனது இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பதன் மூலமாகவும் படைத்தளவாடங்களை வழங்குவதன் மூலமாகவும், ஒழுங்கமைக்கத் தொடங்கியதால் நிலைமை முன்னேற்றமடையத் தொடங்கியது.
 
 
{{ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சியார்ச்_வாசிங்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது