சியார்ச் வாசிங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
1789 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடைபெற்ற முதல் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாசிங்டன் அனைத்து வாக்குகளையும் வென்றார். அவர், 1789 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் அலுவல் உறுதிமொழியை நியூயார்க் நகரத்தின் ஃபெடரல் அரங்கத்தின் மேல்மாடத்தில் எடுத்துக்கொண்டார். கடினமான அந்தக் காலகட்டத்தில் தனது தொலைநோக்கு கொண்ட நிர்வாகத்திறமையை நிரூபித்தார். அவரது முடிவுகள் பல முன் உதாரணங்களாய் அமைந்தன. ஆரம்பத்தில் $ 25,000 வருடாந்திர சம்பளத்தை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டிய அவர், தன்னுடைய முடிவு பணக்காரர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு வர முடியும் என்ற தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாதே என்பதற்காக, ஊதியத்தை ஏற்றுக்கொண்டார். புதிய அரசியலமைப்பை ஒரு செயல்படும் கருவியாக மாற்றியமைத்தார். அதே நேரத்தில் ஒருமைப்பாடு மற்றும் விவேகத்திற்கான எடுத்துக்காட்டாக விளங்கினார். குடியரசுத் தலைவரின் பட்டங்கள் மற்றும் விழாக்கள் குடியரசு நாட்டின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கின்றனவா என்பதை கண்காணிப்பதில் உறுதியாய் இருந்தார். குடியரசுத் தலைவரை அழைப்பதற்கு பேரவை உறுப்பினர்கள் மிகவும் மேன்மைதங்கிய பல அடைமொழிகளை உருவாக்கிக் கொடுத்தபோதும், திருவாளர். குடியரசுத்தலைவர் என்றழைப்பதையே விரும்பினார். 1792 ஆம் ஆண்டில், முதல் பதவிக்கால முடிவில், வாசிங்டன் மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1796-ல் அது முடிவடைந்தபோது, மீண்டும் அப்பதவியில் தொடர்வதை அவர் உறுதியாய் மறுத்து, மவுண்ட் வெர்னானுக்குத் திரும்பினார். இதன் மூலம் இன்றளவும் ஒரு குடியரசுத் தலைவர் இரண்டு முறைகள் மட்டுமே பதவி வகிக்கலாம் என்ற மற்றுமொரு முன்னுதாரணத்தை வாசிங்டன் உருவாக்கிச் சென்றுள்ளார்.<ref>{{cite web | url=https://www.thefamouspeople.com/profiles/george-washington-18.php | title=George Washington | publisher=The Famous People | date=Last updated June 01, 2017 | accessdate=28 அக்டோபர் 2017 | author=Editors, TheFamousPeople.com}}</ref>
 
== இறப்பு ==
1799 ஆம் ஆண்டின் ஒரு டிசம்பர் மாதத்தில், வாசிங்டன் பனிப்பொழிவின் நடுவே, குதிரையின் மீதமர்ந்தவாறு தனது பண்ணைத் தோட்டத்தினை ஆய்விடுவதில் அதிக நேரம் செலவிட்டார். தனது நனைந்த உடைகளுடன் வீடு திரும்பி இரவு உணவை முடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றார். அடுத்த நாள் டிசம்பர் 13 ஆம் நாள் காலை கடுமையான தொண்டைப்புண்ணுடன் கண் விழித்தார். அந்த நாளின் நேரம் செல்லச்செல்ல மிகவும் நிலைமை மோசமடைந்தது. பல மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி, டிசம்பர் 14 ஆம் நாள் மாலை அவர் இறந்தார்.<ref>{{cite web | url=https://www.biography.com/people/george-washington-9524786 | title=George Washington | publisher=Biography.com | work=Editors, Biography.com | accessdate=28 அக்டோபர் 2017}}</ref>
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சியார்ச்_வாசிங்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது