"வோல்ட்டயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,739 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
வால்டேரும் அவரத்கு மனைவியும் வடக்கே தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன்னர் பிரசல்சில் வால்டேர் மற்றும் ரூசியோ ஆகியோர் சில நாட்கள் சந்தித்துக் கொண்டனர். ஒரு வெளியீட்டாளர் இறுதியாக திகேக்கில் கண்டறியப்பட்டார் <ref>Pearson, p. 59</ref>. வால்டேர் பிரான்சிற்குத் திரும்பிய போது ரோயனில் ஓர் இரண்டாவது வெளியீட்டாளரை கண்டுபிடித்தார். அவர் லா என்றியேடு என்ற புராண காவியத்தை வெளியிடுவதற்கு ஒப்புக் கொண்டார் <ref>Pearson, p. 61</ref>. 1723 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வால்ட்டேர் பெரியம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார். அவரது காவிய நாடகத்தின் முதல் பிரதிகள் பாரிசுக்குக் கடத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டன <ref>Pearson, p. 62</ref>. அதேவேளையில் இக்காவியம் உடனடி வெற்றியைப் பெற்றது. வால்ட்டேரின் புதிய நாடகமான மரியாம்னேவும் , மார்ச் 1724 இல் முதன்முறையாக நடைபெற்றபோது தோல்வியைத் தழுவியது <ref name=P64>Pearson, p. 64</ref>. கடுமையான உழைப்பிற்குப் பின் மீண்டும் 1725 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்த்தப்பட்டபோது ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்று முன்னேற்றம் கண்டது <ref name=P64/>. 1725 செப்டம்பரில் நடைபெற்ற பதினைந்தாம் லூய்சின் திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நாடகம் நடைபெற்றது <ref name=P64/>.
 
== கடிதங்கள் ==
 
வால்டேர் தனது வாழ்நாளில் பிரத்தியேகமாக கடிதங்கள் எழுதுவதில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 20,000 கடிதங்களை அனுப்பியுள்ளார். தியோடர் பெசுடர்மேன் இந்த கடிதங்களை தொகுத்து 1964 இல் நிறைவு செய்தார். இக்கடிதங்கள் 102 தொகுதிகளை நிரப்பியுள்ளன <ref>{{cite journal |last1=Brumfitt |first1=J. H. |year=1965 |title=The Present State of Voltaire Studies |journal=Forum for Modern Language Studies |volume=I |issue=3 |page=230 |publisher=Court of the University of St Andrews |doi=10.1093/fmls/I.3.230 |url=http://fmls.oxfordjournals.org/cgi/pdf_extract/I/3/230 |accessdate=28 February 2012}}</ref>. இக்கடிதங்கள் விசித்திரமான சொற்பொழிவுகள் மட்டுமல்ல, அன்பான நட்பு, மனிதாபிமான உணர்வு மற்றும் கவர்ச்சியான எண்ணங்கள் ஆகியவற்றையும் கொண்ட ஒரு விருந்து" என்று ஒரு வரலாற்று ஆசிரியர் கூறுகிறார் <ref>[https://books.google.com/?id=OperFVu5MykC&q=%22feast+not+only+of+wit+and+eloquence%22&dq=%22feast+not+only+of+wit+and+eloquence%22&ie=ISO-8859-1&output=html Will and Ariel Durant, Rousseau and Revolution (1967), p. 138]</ref>.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2436409" இருந்து மீள்விக்கப்பட்டது