"விடுதலைச் சிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,642 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
(முற்பதிவு)
 
ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர்.
 
1875-ஆம் ஆண்டு இந்த சிலையின் கட்டுமானம் தொடங்கியது. 1884-ஆம் ஆண்டு இச்சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது.
 
== சிலையின் அமைப்பு ==
சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போரின் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர் ஆகும். பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர். சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன் ஆகும். <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/சுதந்திர-தேவி-சிலை-யார்-தந்த-பரிசு/article6216099.ece | title=சுதந்திர தேவி சிலை யார் தந்த பரிசு? | publisher=தி இந்து | date=16 சூலை 2014 | accessdate=31 அக்டோபர் 2017 | author=தொகுத்தவர் பா. தனுஷ்}}</ref>
 
{{குறிப்பிடத்தக்க சிலைகளின் உயர ஒப்பீடு}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2437106" இருந்து மீள்விக்கப்பட்டது