பழைமைவாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
ஒரு பண்பாட்டுக்கு உள்ளேயே பழைமைவாதம் என்றால் என்ன என்பது குறித்துக் கருத்து வேறுபாடுகள் காணப்படலாம். சாமுவேல் பிரான்சிசு என்பவர் பழைமைவாதம் என்பது, "குறிப்பிட்ட மக்களையும், அவர்களுடைய நிறுவனப்படுத்தப்பட்ட பண்பாட்டு வெளிப்பாடுகளையும் நிலைத்திருக்கச் செய்வதும் அவற்றை மேம்படுத்துவதும் ஆகும்" என்றார். உரோஜர் சுக்கிரட்டன் என்பவர் பழைமைவாதம் என்பதை "சமுதாயச் சூழ்நிலையைப் பேணுதல்" என்றும், "சமூகத்தின் வாழ்வையும், நலத்தையும் இருக்கும் நிலையிலேயே எவ்வளவு காலத்துக்கு முடியுமோ அவ்வளவு காலத்துக்குப் பேணும் நோக்குடனான தாமதப்படுத்தும் அரசியல்" என்றும் வரையறுத்தார்.
 
பழைமைவாத அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே நோக்கங்களைக் கொண்டவையல்ல. அவை பெரிதும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஜப்பானின் [[தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி (ஜப்பான்)|தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி]], [[சிலி]]யின் [[சுதந்திர மக்களாட்சிக் கட்சி (சிலி)|சுதந்திர மக்களாட்சிக் கட்சி]], ஐக்கிய இராச்சியத்தின் [[பழமைவாதக் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|பழைமைவாதக் கட்சி]] என்பன வெவ்வேறான நிலைப்பாடுகளைக் கொண்ட பழைமைவாதக் கட்சிகள். பழைமைவாதக் கட்சிகள் பொதுவாக வலதுசாரிக் கட்சிகள் என்னும் பிரிவுக்குள் அடக்கப்படுகின்றன.
==குறிப்புகள்==
{{Reflist|25em}}
"https://ta.wikipedia.org/wiki/பழைமைவாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது