ரியாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 65:
== வரலாறு ==
=== தொடக்க வரலாறு ===
இசுலாத்துக்கு முற்பட்ட காலத்தில் ரியாத் அமைந்துள்ள இடத்தில் அமைந்திருந்த நகரம் ''ஹஜிர்'' என அழைக்கப்பட்டது. பானு[[பனி அனீபா]] என்னும் பழங்குடியைச் சார்ந்தோர் இந்த நகரை அமைத்ததாகத் தெரிகிறது. இது அல் யமாமா மாகாணத்தின் தலைநகரமாக இருந்தது. இந்த மாகாணத்தின் ஆளுனர்கள் உமய்யாத், அப்பாசியக் காலங்களில் நடு அரேபியாவினதும், கிழக்கு அரேபியாவினது பெரும் பகுதிக்குப் பொறுப்பாக இருந்தனர். கிபி 866 இல், அல் யமாமா [[அப்பாசியப் பேரரசு|அப்பாசியப் பேரரசிலிருந்து]] பிரிந்து, உகாதிரைட்டுக்களின் ஆட்சிக்குள் வந்தது. இவர்கள் தலைநகரை ஹஜிரில் இருந்து அருகில் இருந்த அல் காரிச்சுக்கு மாற்றினர். இதனால் ஹஜிர் நகரம் ஒரு நீண்டகால வீழ்ச்சி நிலைக்குச் சென்றது. 14 ஆம் நூற்றாண்டில் வட ஆப்புரிக்கப் பயணி [[இப்னு பத்தூதா]] தான் ஹஜிர் நகருக்குச் சென்றது பற்றி எழுதியுள்ளார். அவர் இந்நகரை அல் யமாமாவின் முதன்மை நகரம் எனக் குறித்துள்ளார். ஹஜிர் கால்வாய்களையும், மரங்களையும் கொண்ட நகரமாக இருந்ததாகவும் நகரில் பெரும்பான்மையோர் பனி அனீபாக்கள் என்றும் அவர்களது தலைவருடன் தான் மக்காவுக்கு ஹஜ் கடமைகளை நிறைவேற்றச் சென்றதாகவும் இப்னு பத்தூதா குறிப்பிட்டுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரியாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது