சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோள்
வரிசை 4:
நமது உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் தொடர்ந்து ஊட்டச்சத்துக்களும், ஆக்சிசனும் தேவை. உயிரணுக்களில் ஏற்படும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றங்கள்]] மூலம் அங்கு தோன்றும் கழிவுப்பொருட்களையும், [[காபனீரொட்சைட்டு]] போன்றவற்றையும் வெளியேற்றுதலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உடலின் பெரும்பாலான உயிரணுக்கள் ஊட்டச்சத்துக்கள் அகத்துறிஞ்சப்படும் இடமான உணவுப்பாதை அல்லது கழிவுகளை நீக்கும் இடமான சிறுநீரகங்களுக்கு அருகிலோ இருப்பதில்லை. எனவே உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் சுற்றோட்டத் தொகுதி அமைந்துள்ளது. [[இதயம்|இதயத்தின்]] இயக்கத்தால் குருதியைக் கடத்தும் [[குருதிக்குழல்]]கள் (அல்லது இரத்தக் குழாய்கள்) மூலம் கடத்தல் நடைபெறுகின்றது.
 
இத்தொகுதியை ஒரு குருதி வழங்கும் வலையமைப்பாக மட்டும் பார்க்க முடியும். எனினும் சிலர் இத் தொகுதி, குருதிக்கான வலையமைப்புடன், [[நிணநீர்|நிணநீரைக்]] (Lymph) கொண்டு செல்லும் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யின் ஒரு பகுதியான [[நிணநீர்த் தொகுதி]]யையும் (Lymphatic system) உள்ளடக்கியது என்கின்றனர்<ref name="ReferenceA">{{DorlandsDict|nine/000951445|circulatory system}}</ref>.

[[மனிதன்|மனிதரும்]], பிற [[முதுகெலும்பி]]களும் மூடிய குருதிக் குழாய்த் தொகுதியைக் கொண்டுள்ளன. மூடிய குருதிக் குழாய்த் தொகுதியில் குருதி ஒருபோதும், [[தமனி|தமனி அல்லது நாடி]], [[சிரை|சிரை அல்லது நாளம்]] மற்றும் நுண்துளைக் குழாய்களைக் கொண்ட வலையமைப்பை விட்டு வெளியேறுவதில்லை. சில [[முதுகெலும்பிலி]]களில் திறந்த குருதிக் குழாய்த்தொகுதி காணப்படுகின்றது. சில தொல்லுயிர்களில் சுற்றோட்டத் தொகுதியே இருப்பதில்லை. நிணநீர்த் தொகுதி எப்போதும் திறந்த தொகுதி ஆகும்.<ref>{{cite book|author=Sherwood, Lauralee |title=Human Physiology: From Cells to Systems |url=https://books.google.com/books?id=I9qH3eZ1pP0C&pg=PT401 |year=2011 |publisher=Cengage Learning |isbn=978-1-133-10893-1 |pages=401–}}</ref>
 
== மனிதச் சுற்றோட்டத் தொகுதி ==
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது