சுற்றோட்டத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோள்
வரிசை 20:
''சிரைகள்''' அல்லது '''நாளங்கள்''' (''Veins'') என்பவை [[இருதயம்|இருதயத்தை]] நோக்கி [[குருதி]]யை எடுத்துச் செல்லும் [[குருதிக்குழல்]]கள் ஆகும். தந்துகிகளிலிருந்து இருதயத்திற்கு மீண்டும் உயிர்வளி அற்ற அசுத்தக்குருதியைப் பெரும்பாலான நாளங்கள் எடுத்துச் செல்கின்றன. விதிவிலக்காக [[நுரையீரல் சிரை]]யும், [[தொப்புள் சிரை]]யும் உயிர்வளி உற்ற குருதியை இருதயத்திற்கு எடுத்துச் செல்கிறன.
 
சிரைகளுக்கு மாறுபாடாக, [[தமனி]]கள் இருதயத்திலிருந்து குருதியை வெளியே எடுத்துச் செல்கின்றன. சிரைகள் குருதியை உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து [[இதயம்|இதயத்திற்கு]] எடுத்துச் செல்கின்றன. உடல் குருதி ஓட்டத்தில் ஆக்சிசனேற்றப்பட்ட குருதியானது இதயத்தின் இடது கீழறையில் இருந்து தமனிகள் வழியாக பல்வேறு உறுப்புகளுக்கும் தசைகளுக்கும் அனுப்பப் படுகிறது. அங்கு சத்துக்களும் வாயுக்களும் பரிமாறப்படுகின்றன. பின் [[கார்பனீரொக்சைடுகாபனீரொக்சைட்]]டு நிறைந்த குருதி சிரைகளின் வழியாக வலது மேலறைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. [[குருதி]]யானது பின் வலது கீழறைக்கும் அங்கிருந்து நுரையீரல் தமனி மூலம் [[நுரையீரல்|நுரையீரலுக்கும்]] கொண்டு செல்லப்படுகிறது. [[நுரையீரல்|நுரையீரலில்]] காபனீரொக்சைட்டு வெளியேற்றப்பட்டு, மீண்டும் ஆக்சிசனேற்றம் செய்யப்படும் குருதியானது நுரையீரல் சிரை மூலம் இதயத்தின் இடது மேலறைக்குச் செல்லும். அங்கிருந்து இடது கீழறைக்குச் செல்லும் குருதி மீண்டும் உடலின் பல பக்திகளுக்கும் கொண்டு செல்லப்படும்.
 
சிரைகள் தமனிகளைவிட குறைந்த தசையுடனும், பல முறை தோலிற்கு நெருக்கமாகவும் அமைந்திருக்கும். குருதி பின்னோட்டத்தைத் தடுக்க பெரும்பாலான சிரைகளில் தடுக்கிதழ்கள் அமைந்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சுற்றோட்டத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது