எதிர்க்கட்சி (நாடாளுமன்றம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
நாடாளுமன்ற '''எதிர்க்கட்சி''' என்பது, வெஸ்ட்மின்ஸ்டர் முறையில் அமைந்த [[நாடாளுமன்றம்|நாடாளுமன்றங்களில்]] அரசுக்கு எதிர்க் கருத்துக்கொண்ட [[அரசியல் கட்சி|கட்சி]] அல்லது கட்சிகளைக் குறிக்கும். இவ்வாறான நாடாளுமன்றங்களில் அரசுக்கு எதிரான கட்சிகள் பல இருக்கும்போது அவற்றுள் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிகாரபூர்வ எதிக்கட்சியாக இயங்கும். அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் [[எதிர்க்கட்சித் தலைவர்]] என்னும் தகுதியைப் பெறுவார்.
 
கூடிய எண்ணிக்கை வாக்குகளைப் பெறுபவர் தேர்வுசெய்யப்படும் ஒற்றை உறுப்பினர் தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறை பயன்படும் நாடுகளில் பெரும்பாலும் இரண்டு குழுக்கள் வலுவாக அமைவதற்குச் சாத்தியம் உண்டு. இவை மாறி மாறி அரசாங்கக்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் ஆகும் போக்குக் காணப்படுகிறது.
தேர்தல்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை பயன்படுத்தப்படும் நாடுகளில் அரசாங்கக்கட்சிக்கு எதிரானவையும், தம்முள் ஒத்த கருத்து இல்லாதவையுமான பல கட்சிகள் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது உண்டு.
 
சிங்கப்பூர் போன்ற சில நாடுகளில் ஒரே கட்சியே பெரும்பான்மை பெற்றுத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதையும், எதிர்க்கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதையும் காணலாம். சில நாடுகளில், மக்களார்சித் தன்மையைப் போலியாகக் காட்டிக்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளைத் தாமே உருவாக்கிக்கொள்வதும் உண்டு.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:அரசியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எதிர்க்கட்சி_(நாடாளுமன்றம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது