மஹ்மூத் கவான் மதராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 30:
| designation3_free1value = N-KA-D40
}}
'''மஹ்மூத் கவான் [[மதராசா]]''' ( '''Madrasa of Mahmud Gawan''' (மத்ராசா இ மஹ்மூத் கவான்)  என்பது  [[பீதர்]]  நகரில் அமைந்திருந்த ஒரு பழமையான பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பாரம்பரிய  கட்டுமான அமைப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  இது 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [[பாமினி சுல்தானகம்|பாமிணி பேரரசின்]] இது பிரதம மந்திரியான மஹ்மூத் கவானால் நிறுவப்பட்டது.  இவர் ஈரானின் கிலாந்தில்  என்னும்  பகுதியில் இருந்து  வெளியேறிய (நாடுகடத்தலால்) ஒரு பாரசீக வர்த்தகர்  ஆவார்.   இவர் முதலில் தில்லிக்கு வந்து,  பின் 1453 இல் பிதார் நகருக்கு வந்தார் என்பதற்கு இது சான்றாக உள்ளது.
 
மஹ்மூத் மதராசாவை தனது சொந்த பணத்தைக் கொண்டு கட்டியதாகக் கூறப்படுகிறது. இது [[குராசான்]] மதராசாவை  முன்மாதிரியாகக்  கொண்டு கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்ட ஒரு  உடனுறை பல்கலைக்கழகம் போல  செயல்பட்டது.  இந்தப்  பரபரப்பான பல்கலைக்  கழகத்தின்  விசாலமான கட்டிடம் கட்டடக்கலையில் ரத்தினமாகவும், [[பீதர்|பீதாரின்]] ஒரு முக்கிய  அடையாளமாகவும் கருதப்படுகிறது.
 
== அமைவிடம் ==
பீதரானது  [[தக்காணப் பீடபூமி]]யில் கடல் மட்டத்திலிருந்து  2330 அடி உயரத்தில், {{Rp|42}}  நெடிய கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்  கொண்ட ஒரு இடத்தில் உள்ளது. இந்த நினைவுச்சின்னமானது சௌபாரா (மணிக்கோபுரம்) மற்றும் [[கோட்டை]]  ஆகியவற்றுக்கு  இடையில் சில நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.இந்த நினைவுச்சின்னத்தின் எஞ்சிய பகுதிகளை சுற்றி  தற்போது நகர்ப்புற குடியிருப்புகள்  சூழ்ந்துள்ளது.  அதன் முதன்மையான கிழக்கு முகப்பு,  தற்காலத்தில் பாழாகிவிட்டது. நகரத்தின்  முதன்மை வீதியிலிருந்து வழியுள்ளது.
 
== விளக்கம் ==
இந்த  மதராசா அழிவுக்கு  ஆளான கட்டிடமாக  தொடர்ந்து  சேதமுற்று  வந்துள்ளது. இது 1805 இல் 205 அடி பரப்பளவில்  பரவி, கிழக்குப் பக்கத்தில் ஒரு பெரிய நுழைவாயிலைக்  கொண்டு இருந்துள்ளது. இதற்கு முன்னால்  நூறு  அடி  உயரமுள்ள இரண்டு உயர்ந்த [[கோபுரம்|கோபுரங்கள்]] இருந்தன. இந்த  வளாகத்தின் மையத்தில் 100  சதுர  அடி பரப்பளவைக் கொண்ட  திறந்த முற்றமும்,  அதைச் சுற்றி, மூன்று பக்கங்களிலும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது  அறைகளானது 26 அடி அகலமும், 52 அடி நீளமும்  கொண்டு  மூன்றடுக்கு கட்டிடமாக உயர்ந்து இருந்தது. இந்த  கட்டடங்களின் ஒவ்வொன்றின் வெளிப்புறத்தில் ஒரு [[குவிமாடம்|குவிமாடங்களைக்]] கொண்டு உள்ளது.{{Rp|43}} மதராசாவின் சுவர்கள் கிழக்கிலிருந்து மேற்கில் 242 அடியும், வடக்கிலிருந்து  தெற்காக 220 அடி  நீளமும் கொண்டது.
 
மதராசாவின் கோபுரத்தின் (மினார்) கீழ்பாதிவரை பல்வேறு  வண்ண  ஓடுகளால் ஜிக் ஜாக் கோடுகளாக  சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. சுவர்களில், குறிப்பாக முன்பகுதிகளில் அதே  போன்ற  ஓடுகளைக்  கொண்டு பதிக்கப்பட்டுள்ளன. முன் சுவரின் உச்சியில்  பச்சை  மற்றும் தங்க நிறத்திலான எழுத்துக்களில்  [[திருக்குர்ஆன்]]  வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 
 
இதன்  முதன்மை நுழைவாயில்  அழிந்துவிட்டது,  ஆனால் அதன்  அடித்தளம் அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. நுழைவாயிலுக்கு அப்பால் ஒரு  தாழ்வாரம் (போர்டிகோ) இருந்ததள்ளது.  அது 15 அடி 4 அங்குல  நீள  அகலத்தில் சதுரமானது  என அளவிடப்படுள்ளது.
 
மினாரில்  பதிக்கப்பட்டுள்ள வண்ண ஓடுகளின் பளபளப்பின் காரணமாக, உள்ளூர் மக்கள் இந்த நினைவுச்சின்னத்தை "'''காஞ்சினா கம்பா'''" ([[கன்னடம்]]; கான்ச் = கண்ணாடி, கம்பா =  கோபுரம்)
 
== வரலாறு ==
இப்பகுதியை  '''இரண்டாம் முஹம்மது ஷா பஹாமணி'''  (1463-1482), '''குவாஜா மஹ்மூத் கிலானி''' (மஹ்மூத் கவான் என்று அறியப்பட்டவர்), மாலிகுட்-டார்ஜர் என்ற  பட்டத்துடன்  ஆட்சி செய்தார். இவர்கள் காலத்தில் கட்டப்பட்ட மதராசவில்.{{Rp|43}} எஞ்சிய பகுதியே தற்போது உள்ளது.  ஃபிரிஷ்தாவின் காலத்திலும்,  அதற்கு  பிறகு  சிலகாலமும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக,  இங்குள்ள பெரிய  பள்ளிவாசல்  போன்ற மற்ற கட்டிடங்களுடனும், காவன்கி சௌக் (இன்றைய காவன் சௌக்) என்று அழைக்கப்பட்டு பாதுகாப்பாக இருந்தது.  மேலும்  அந்தக்  கட்டடங்களும் அவை  எந்த  நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்டதோ  அதே நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டன.{{Rp|43}}
 
1635 ஆம் ஆண்டில், [[ஔரங்கசீப்]]பின்  படையெடுப்பின்போது, பிதரானது  ''' கான் டாரன்'''  என்பவரால் அழிக்கப்பட்டது.  அந்தக்  கால வரலாற்று அறிஞர்களின்  கூற்றின்படி "[[பாமினி சுல்தானகம்|பஹாமாணி சுல்தான்களின்]] ஆட்சியில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஒரு மசூதிக்கு ,  1656 ஆம் ஆண்டின் முடிவில் சென்ற, அவுரங்கசீப் தனது செலவில், தனது தந்தையான பேரரசர் [[ஷாஜகான்|ஷாஜகானின்]] பெயரில் குத்பா  அறச்செயலுக்கு  ஏற்பாடு  செய்தார்.{{Rp|43}}
 
இவர்களின்  கைப்பற்றலுக்குப் பிறகு, மதராசாவானது  முதன்மையாக [[குதிரைப்படை]]க்கான  தங்கும்  இடமாக பயன்படுத்தப்பட்டது.  இந்த  அறைகளுக்கு  அருகே இடது  பக்கமிருந்த [[மினார்|மினரை]]  [[வெடிமருந்து|வெடி மருந்து]]  சேமிப்பு  இடமாக  பயன்படுத்தப்பட்டது,  பின்னர் அது விபத்தில் வெடித்து,  அந்த  வெடிவிபத்தால்  கட்டடத்தின்  நான்கில்  ஒரு  பகுதியும் நுழைவாயிலும் அழிந்த்தது.{{Rp|43}}
 
இது 1696 ஆம் ஆண்டில்  விழுந்த  இடியால்  இந்த  கட்டமைப்பு குறிப்பிடத்தக்க சேதத்துக்கு  உள்ளானதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
== முக்கியத்துவம் ==
இந்த மதராசாவானது,  இசுலாத்தின் [[சியா இசுலாம்|ஷியா]]  பிரிவை அரச மதமாக உறுதி செய்யக் கட்டப்பட்டது.  இதன் முழு வளாகமும்,  இஸ்லாமிய கட்டிடக்கலையின்  சிறப்பைக்  கொண்டதாக  உள்ளது.  மதராசாவானது நுண்ணறிவுடன்  கூடிய திட்டமிட்ட கட்டுமானத்தைக்  கொண்டுள்ளது.  வளாகத்தின்  மேற்பரப்பானது பல்வேறு நிறங்களைக்  கொண்டு  தயாரிக்கப்பட்ட  கண்ணாடி ஓடுகள்  ஒட்டப்பட்டு  வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த அழகிய வண்ணமய ஓடுகளின் தடயங்கள் கட்டிடத்தின் சுவர்களில் இன்னமும் காணப்படுகின்றன.  எல்லா இடங்களிலும்  நிறைந்திருக்கும் வளைவுகள், மலர் அலங்காரங்கள், அரேபஸ் வடிவமைப்பு, அலங்கார கல்வேலைப்பாடுகள்  இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு சிறந்த மாதிரியாக அமைகின்றன.
மஹ்மூத் கவனுக்கு சமர்கண்ட் மற்றும் கோராசானில்  இருந்த புகழ்பெற்ற கல்லூரிகள்  குறித்து நன்கு தெரிந்திருந்ததால் இது சாத்தியமானது.  இந்தக்  கட்டடத்தில் விரிவுரை அரங்குகள், ஆய்வகம்,  பள்ளிவாசல், மாணவர் விடுதி, உண்ணும் அறை, ஆசிரியர்களுக்கு  அறைகள்  போன்ற  கட்டுமானங்களைக்  கொண்டு  இருந்தன.  இந்த  சமய  கல்விக்கூடத்தில் இஸ்லாமிய அறிஞர்கள்,  [[அறிவியல்|அறிவியலாளர்கள்]],  மெய்யியலாளர்கள்,  அரபு வல்லுநர்கள் ஆகியோரை உள்ளடக்கிய கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களால்  அறிவியலும், [[கணிதம்|கணிதமும்]]  சமயத்தோடு  கற்பிக்கப்பட்டன.  உலகெங்கும்  இருந்து  வந்திருந்த 500 க்கும் அதிகமான மாணவர்களுக்கு  இங்கு இலவச உறைவிடம் மற்றும் கல்வி ஆகியவை  வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.   நிறுவனர் தனது இறப்பிற்கு முன் இந்த பல்கலைக்கழகத்தில் 3000 தொகுதிகளைக்  கொண்ட நூலகத்தை நிறுவினார்;  அது என்ன ஆனது என்பது தெரியவில்லை.{{Rp|43}}
 
== பாதுகாத்தல் ==
2005 ஆம் ஆண்டு [[பீதர் மாவட்டம்|பீதர் மாவட்டத்தில்]]  உள்ள பழங்கால நினைவுச்சின்னங்களைக் காப்பாற்றி பாதுகாக்கும்  பொருட்டு [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] அவற்றை  தன்வசம் எடுத்துக் கொண்டது. அதன்பிறகு  இந்த இந்த கட்டமைப்புகளைச் சுற்றி, கலையுணர்வுடன் வடிவமைக்கப்பட்ட  சுற்றுச் சுவர்களைக் கட்டி, சில நினைவுச்சின்னங்கள் சுற்றி விளக்குகள் மற்றும்  புல்வெளித் தோட்டங்கள்  போன்றவை  அமைக்கப்பட்டன.
 
உலக நினைவுச்சின்னக் கண்காணிப்பு பட்டியலில் 2014  இல்  பீதர் இடம்  பிடித்தது. இதனால் இந்த நினைவு சின்னங்களினால் இந்த நகரின் முன்னேற்றம்  குறித்து சில நம்பிக்கைகளை அளிக்கிறது.
 
=== கவலைகள் ===
[[படிமம்:In-Cloud_Lightning_over_Bidar_2.JPG|thumb|  2015  மார்ச் 8  அன்று  பீதரில் நிகழ்ந்த  [[இடிமழை|இடி]]  [[மின்னல்]]  ]]
இன்றைய காலகட்டத்தில்,  வரலாற்றுச்  சிறப்புமிக்க இடிபாட்டுப்  பகுதிகள்  உள்ளூர்  மக்களால் மேய்ச்சலுக்குப்  பயன்படுத்தப்படுகின்ற காட்சிகள்  வருந்தத்தக்கதாக  உள்ளன.
ஒரு மதிப்பீட்டின்படி, பிதார் மற்றும்  அதைச் சுற்றியுள்ள  பகுதிகளில் சுமார் 100 வரலாற்று நினைவு சின்னங்கள் உள்ளன.  மஹ்மூத் கவான் மதராசா  போன்ற பிதார் பகுதியில் உள்ள நினைவுச்சின்னங்களில்  தொடர்  கண்காணிப்புத்  தேவைப்படுகிறது.  இதை  தொல்லியல்  துறை  புரிந்துக்கொள்ளவில்லை. மதராசாவைச் சுற்றியுள்ள பூங்காவை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் இன்னும்  வகுக்கப்படவில்லை.  இந்த நினைவுச்சின்னத்தின் பின்னால் உள்ள திறந்தவெளியானது உள்ளூர் மக்களால் துடுப்பாட்ட மைதானமாக பயன்படுத்தப்படுகிறது, பந்து (கள்) பெரும்பாலும் நினைவுச்சின்னத்தைத்  தாக்குகின்றன.
 
== படக்காட்சியகம் ==
"https://ta.wikipedia.org/wiki/மஹ்மூத்_கவான்_மதராசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது