தொடுவானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Sailing_Boat_Horizon.JPG|thumb|கடலில் தொடுவானமும் அருகில் காணப்படும் கப்பலும்]]
'''தொடுவானம்''' (ஆங்கிலத்தில் '''horizon''' அல்லது '''skyline''')  இதை தமிழில் '''அத்து வானம்''' என்றும் அழைப்பர் ('''அத்து''' என்றால் எல்லை முடியும் இடம், நம் கண்களுக்கு வானம் முடிவதைப் போலத் தோன்றுவதால் அத்துவானம் அழைப்பர்) என்பது [[வானம்|வானத்தையும்]] [[புவி]]யையும் பிரிப்பதாக  தெரியும்  ஒரு கோடு. இது நாலாபுறமும் வெகு தூரத்தில் பூமியை குடை போல தொட்டுக்கொண்டு  இரண்டு  பிரிவுகளாக பிரிக்கும் காட்சியை  அளிக்கும் ஒரு  கோடு  ஆகும். பல இடங்களில், உண்மையான தொடுவானமானது மரங்கள், கட்டிடங்கள், மலைகள், முதலியவற்றால் மறைக்கப்படுவதில்லை,  சுருக்காமக கூறினால் பூமிக்கும் வானத்திற்கும் இடையில்  காணப்படும் குறுக்குக்கோடு தொடுவானம் என்று அழைக்கப்படுகிறது. கடற்கரையிலிருந்து கடலைப் பார்த்தால்,  தொடுவானமானது அடிவானத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில்  தெளிவாக  தெரியும்  இது ''கட்புல கடற்பரப்பு'' (horizon) என்று அழைக்கப்படுகிறது.<ref name="WebstersThird">
{{cite news|title=Offing|work=Webster's Third New International Dictionary|edition= Unabridged}} Pronounced, "Hor-I-zon".
</ref>
== தொடுவானத்தின்  தொலைவு ==
[[File:Horizons.svg|thumb|தொடுவானம்]]
வானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருப்பது  போல  தோன்றுவதற்குக்  காரணம் பூமி கோள வடிவத்தில் இருப்பதால்  அவ்வாறு  தோன்றுகிறது. ஒருவேளை பூமி தட்டையாக இருந்தால் “தொடுவானம்” என்ற ஒன்றே இருந்திருக்காது. பூமி கோள வடிவம் என்பதற்கு “தொடுவானம்” தான் மிக எளிய நிரூபணம்.  நாம் பூமியின் மீது நின்று கொண்டிருக்கும்போது. நமது கண்களிலிருந்து நேராக ஒரு கோடு போட்டுக் கொண்டே சென்றால் அந்தக் கோடு பூமியின் மேற்பரப்பை எந்த இடத்தில் தொட்டுச் செல்கிறதோ அதுவே பூமியை வானம் தொடும் இடம். நம் கண்களைப் பொறுத்தவரை அதுதான் தொடுவானம். படத்தில் தொடுவானத்தின் தூரம் என்பது என்ன என்று காட்டப்பட்டுள்ளது. மனிதனின் தலையில் இருந்து அவன் பார்வை தரையைத் தொடும் வரை உள்ள தூரம் தான் தொடுவானத்தின் தூரம்.
[[File:GeometricDistanceToHorizon.png|thumb|வடிவியலில் தொடுவானத்தின் தொலைவு]]
[[பித்தேகோரசு தேற்றம்|பித்தாகரசுத் தேற்றத்தின்படி]] ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள கர்ணத்தின் வர்க்கம் மற்ற இரு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகைக்கு சமம்.
"https://ta.wikipedia.org/wiki/தொடுவானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது