"முகம்மது நபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,321 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
=== எதிர்ப்பு ===
இசுலாமிய வரலாற்றுப்படி, முகம்மது நபியை இறைத்தூதர் என அவரது மனைவி கதீஜா தான் முதலில் நம்பினார்<ref name="Watt53-86">Watt (1953), p. 86</ref>. கதீஜாவை தொடர்ந்து முகம்மது நபியின் சிறிய தந்தை மகன் அலி இப்னு அபி தலிப், நெருங்கிய நண்பரான அபு பக்கர் மற்றும் வளர்ப்பு மகன் சையித் அவரை நபிகளாக கருத ஆரம்பித்தனர்<ref name="Watt53-86" />. கிபி 613-ஆம் வருடத்தில், முகமது பொதுமக்களுக்கு போதனை புரிய ஆரம்பித்தார்(Quran {{cite quran|26|214|s=ns|b=n}}).<ref>Ramadan (2007), p. 37–9</ref> மெக்காவை சேர்ந்த பலர் அவரை புறக்கணித்தனர் மற்றும் கேலி செய்தனர் எனினும், சிலர் அவரை பின்பற்ற ஆரம்பித்தனர். பெரிய வணிகர்களின் தம்பிகள் மற்றும் மகன்கள், குலத்தில் பெரும் பதவியை பறிகொடுத்தவர்கள் மற்றும் அடைய முடியாதோர் மற்றும் நலிந்த அயல்நாட்டினர் - என மூன்று வகையானவர்களே இசுலாத்தில் முதலில் இணைந்தனர்<ref name="Cambridge 1977 36">.Watt, ''The Cambridge History of Islam'' (1977), p. 36.</ref>.
 
=== முதல் பகிரங்க பிரச்சாரம் ===
 
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் ஸஃபா குன்றின் மீது நின்று கொண்டு குரைஷிகளை அழைத்தார்கள். அவர்கள் முன் அதிகமானோர் ஒன்று கூடினார்கள் அப்போது அவர்களை நோக்கி,
 
”இம்மலைக்குப் பின்னால் எதிரிகள் உங்களை அழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என நான் உங்களிடம் கூறினால் நீங்கள் என்னை நம்புவீர்களா?” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம்! உண்மையையும் நம்பிக்கையையும்; தவிர வேறு எதையுமே நாங்கள் உங்களிடம் அறிந்ததில்லை எனக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நிச்சயமாக நான் கடுமையான வேதனையை விட்டும் உங்களை எச்சரிக்கை செய்கிறேன் எனக் கூறினார்கள். பின்பு அவர்களை அல்லாஹ்வின் பக்கமும் சிலை வணக்கங்களை விட்டுவிடுமாறும் அழைக்க ஆரம்பித்தார்கள். அப்போது அக்கூட்ட த்திலிருந்த அபூலஹப் கொதித்தெழுந்தான். உனக்கு நாசம் உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? எனக் கேட்டான். இதன் பிறகு அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கிவைத்தான்: ”அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்! அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்;கு எந்தப் பல னையும் அளிக்கவில்லை. விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படு வான். (இங்கும்அங்கும்)புறம்பேசித்திரிபவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில்போடப் படுவாள்) அவளின் கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்”.(111:1-5)
 
சிலை வழிபாடு மற்றும் பல இறைக்கொள்கை பின்பற்றிய மக்காவின் முன்னோரை முகம்மது நபி கண்டித்ததை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதாக இப்னு சையிது கூறுகிறார்<ref>F. E. Peters (1994), p.169</ref>. ஆயினும், அவருக்கு எதிர்ப்பு ஆரம்பித்ததற்கான காரணம் அவரது பொது போதனை என குரானிய விளக்கங்களில் கூறப்படுகிறது<ref name="Rubin">Uri Rubin,'' Quraysh'', Encyclopaedia of the Qur'an</ref>.அந்நகரை ஆள்பவர்கள் மற்றும் குலங்களுக்கு, அவர்களின் பிடியில் இருந்த செல்வமதிப்புள்ள காபா மற்றும் அதனை சுற்றி அமைந்த முந்தைய மதத்தை, பலர் பின்பற்றும் முகம்மது நபி எதிர்க்கிறார் என்பது அச்சுறுத்தலாக தெரிந்தது.மக்காவின் முந்தைய மதத்தை முகம்மது நபி கண்டிப்பதை, அவரது குலமான குரைஷ்க்கு பிடிக்கவில்லை. காரணம், அவர்கள் தான் காபாவின் காப்பாளர்களாக இருந்து வந்தவர்கள்<ref name="Cambridge 1977 36" />.வணிகர்கள் மத்தியில் பெரும்பதவி மற்றும் திருமணம் மூலம் முகம்மது நபியைத் தடுத்து நிறுத்த சில செல்வந்தர்கள் முயன்றனர், எனினும் அவ்விரண்டையும் முகம்மது நபி மறுத்தார்<ref name="Cambridge 1977 36" />.
150

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2442408" இருந்து மீள்விக்கப்பட்டது