பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2,180:
 
வாயு கண்ணாடிப் புனல் நீர் ஐதரில்லாத் தாவரம்
 
1) அணுக் கட்டமைப்பு தொடர்பான பிழையான கூற்றைத் தெரிவு செய்க.
1. பிரதான சக்தி மட்டத்தில் இருக்கும் உப சக்தி மட்டங்களின் எண்ணிக்கை தலைமைச் சக்திச் சொட்டெண்ணுக்குச் சமன்.
2. ஒற்றை எண்ணாக அணு எண்ணை உடைய மூலக அணு ஒரு சோடியற்ற இலத்திரனையேனும் கொண்டிருக்கும்.
3. இரட்டை எண்ணாக அணு எண்ணை உடைய அனைத்து மூலகங்களின் அணுக்களின் அனைத்து இலத்தின்களும் சோடியாக்கப்பட்டிருக்கும்.
4. ஒரே சக்தி மட்டத்தில் உள்ள வெவ்வேறு உப சக்தி மட்டங்களின் இலத்திரன்கள் வெவ்வேறு அழுத்த சக்தியைக் கொண்டிருக்கலாம்.
5. சில அரு வாயுக்களின் அணுக்கள் தமது இறுதி சக்தி மட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்யாது உள்ளன.
 
2) C அணு அருட்டப்படும் போது அது தரை நிலையான 1s2 2s2 2p2 இலிருந்து 1s2 2s1 2p3 ஆக மாறுகிறது. எனினும் Li அணு 1s2 2s1 இலிருந்து 1s1 2s2 ஆக அருட்டப்படுவதில்லை. இவ் வேறுபாட்டுக்கு மிகப் பொருத்தமான காரணம் எது?
1. C உறுதியான அரை நிரம்பல் நிலையை அடைகின்றமை.
2. 1s ஒழுக்கும் 2s ஒழுக்கும் ஒரே வகை வடிவத்தைக் கொண்டிருக்கின்றமை.
3. 2s-2p சக்தி வித்தியாசம் குறைவாகவும், 1s-2s சக்தி வித்தியாசம் மிக அதிகமாகவும் இருத்தல்.
4. அருட்டப்படல் ஒரு அகவெப்பத் தாக்கமாக இருத்தல்.
5. Li ஒரு உலோகமாகவும், C ஒரு அல்லுலோகமாகவும் இருத்தல்.
 
3) H3PO3 தொடர்பாகச் சரியானது/ சரியானவை?
a. P அணு ஐதரசன் பிணைப்பில் பங்களிக்கும்.
b. P உடன் நேரடியாக இணைந்துள்ள H அணு ஐதரசன் பிணைப்பில் பங்களிக்கும்.
c. O உடன் இணைந்துள்ள H அணுக்கள் ஐதரசன் பிணைப்புக்களில் பங்களிக்கும்.
d. P உடன் இரட்டைப் பிணைப்பில் உள்ள O அணு ஐதரசன் பிணைப்பில் பங்களிக்கும்.
 
4) மேற்காட்டப்பட்ட A, B சேர்வைகள் தொடர்பான பிழையான கூற்று/ கூற்றுக்கள் எது/ எவை?
a. A இன் கொதிநிலை B இன் கொதிநிலையை விட அதிகமானது.
b. B இன் உருகுநிலை A இன் உருகுநிலையை விட அதிகமானது.
c. A, B இரண்டு திரவங்களிலும் ஐதரசன் பிணைப்புக்கள் உள்ளன.
d. A, B இரண்டும் ஒன்றோடொன்று கலக்காத திரவங்களாகும்.
 
5) மேற்கூறப்பட்ட மூலகங்கள், சேர்வைகளில் அவற்றை ஆக்கும் அணுக்களுக்கிடையிலான மின்னெதிர்த் தன்மை வித்தியாசத்தின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக.
 
6) பின்வருவனவற்றில் எது அதன் அடுத்த அயனாக்கற் சக்தியின் போது அதிகளவு சக்தியை உள்ளெடுக்கும்?
 
7) பின்வரும் கூற்றுக்களில் சரியானதைத் தெரிவு செய்க.
1. F இன் இரண்டாம் இலத்திரன் நாட்டற் சக்தி அகவெப்பமானது, ஆனால் Cl இன் இரண்டாம் இலத்திரன் நாட்டற் சக்தி புறவெப்பமானது.
2. O இன் முதலாம் இலத்திரன் நாட்டற் சக்தியை விட S இன் முதலாம் இலத்திரன் நாட்டற் சக்தி அதிக புறவெப்பமானது.
3. Li ஐ விட H இன் இலத்திரன் நாட்டற் சக்திப் பெறுமானம் குறைவாகும்.
4. H அணு ஒரு இலத்திரனை ஏற்றல் புறவெப்பத்துக்குரியது, ஆனால் He+ அயன் ஒரு இலத்திரனை ஏற்றல் அகவெப்பத்துக்குரியது.
5. வலுவளவோட்டு இலத்திரன்கள் புற இலத்திரனைக் கவர்வதால் அனேக முதலாம் இலத்திரன் நாட்டற் சக்திகள் புறவெப்பமானவையாக உள்ளன.
 
8) 65Cu, 63Cu எனும் இரு சமதானிகள் இயற்கையான செப்பை ஆக்கும். இதில் 65Cu 69.09% உள்ளது. 65Cu இன் சாரணுத்திணிவு = 64.93. 63Cu இன் சாரணுத் திணிவு = 62.93. செப்பின் சராசரி சாரணுத் திணிவைக் கணிக்க.
 
9) மேற்காட்டப்பட்ட மூலக்கூறுகளினை அவற்றின் பிணைப்பு வலிமை அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக.
 
10) மேற்காட்டப்பட்ட மூலகங்கள், சேர்வைகள் என்பவற்றை அவற்றின் உருகுநிலையின் அடிப்படையில் ஏறுவரிசைப்படுத்துக.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது