பெங்களூரு கால்பந்துக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பகுதி - போட்டித் தொடர்கள்
வரிசை 68:
=== ஆல்பர்ட் ரோகா காலம் (2016 - இன்று வரை) ===
பெங்களூரு கால்பந்துக் கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]] கால்பந்து கழகத்தில் துணைப்  பயிற்றுனராக பணியாற்றிய ஆல்பர்ட் ரோகாவை தலைமைப் பயிற்றுனராக நியமித்தது<ref>http://www.goal.com/en-india/news/1064/i-league/2016/07/06/25377492/i-league-bengaluru-fc-appoint-spaniard-albert-roca-as-new</ref>. அவரது தலைமையின் கீழ் பெங்களூரு ஆசிய கால்பந்துக் கூட்டமைப்புக் கோப்பைக்கான போட்டியில் இறுதிப் போட்டி வரை சென்று, இறுதில் இராக் அணியிடம் தோல்வியுற்றது. இப்போட்டியில் இறுதி வரை சென்ற முதல் இந்திய அணி என்ற பெருமையும் பெற்றது. 
 
== போட்டித் தொடர்கள் ==
 
=== ஐ-லீக் ===
பெங்களூரு கால்பந்து கழகம் தொடங்கிய முதல் நான்கு ஆண்டுகள் இந்தியாவின் அப்போதைய முதல் தர கால்பந்து போட்டியான ஐ-லீக்கில் விளையாடியது. தான் விளையாடிய நான்கு ஆண்டு காலத்தில் இரண்டு முறை வாகை சூடி பலம் வாய்ந்த அணியாக உருவானது.
 
=== இந்தியன் சூப்பர் லீக் ===
2017 ஆம் ஆண்டு இந்தியன் சூப்பர் லீக் போட்டி புதியதாக இரண்டு அணிகளை சேர்த்துக்கொள்ளப் போவதாக அறிவித்தது. புதிய அணிக்காக விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் பெங்களூரு அணியும் இருந்தது. இறுதியாக பெங்களூர் அணியும், டாடா குழுமத்தின் தலைமையில் ஜாம்செத்பூரை தலைமையகமாகக் கொண்டு ஒரு அணியும் இந்தியன் சூப்பர் லீக் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று மும்பை சிட்டி கால்பந்து கழகத்துக்கு எதிரான போட்டியில் வெற்றியுடன் தன் இந்தியன் சூப்பர் லீக் பயணத்தைத் தொடங்கியது பெங்களூரு அணி
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெங்களூரு_கால்பந்துக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது