சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 236:
தென்கிழக்காசிய [[ஒளியிழை|கண்ணாடி நூலிழை]] மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில் [[தகவல் தொடர்பு|தகவல் தொடர்பில்]] முதலிடம் வகிக்கிறது. இங்கு [[பிஎஸ்என்எல்|பி.எஸ்.என்.எல்]], [[டாட்டா டொகோமோ|டாடா]], [[ரிலையன்ஸ் கம்யூனிகேசன்|ரிலையன்ஸ்]], [[ஏர்டெல்]] ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் [[தொலைபேசி]] இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ்.என்.எல், ஏர்டெல், [[வோடபோன்]], ஏர்செல், டாடா, ரிலையன்ஸ், ஐடியா ஆகிய நிறுவனங்கள் [[நகர்பேசி]] இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் [[அகன்றவரிசை|அகலப்பாட்டை]][[இணையம்|இணைய]] இணைப்புகளும் அளிக்கின்றன.
 
அனைத்து தேசிய, அனைத்துலக [[தொலைக்காட்சி]]களும் சென்னையில் தெரிகின்றன. [[சன் டிவி]] மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான சன் மியூசிக்,சன் நியூஸ்,கே டிவி, ஆதித்யா, [[மக்கள்வெளிச்சம் தொலைக்காட்சி]], [[கலைஞர் தொலைக்காட்சி]] மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான கலைஞர் செய்திகள்,இசையருவி, சித்திரம்,சிரிப்பொலி, [[ராஜ் தொலைக்காட்சி]] மற்றும் அதன் அலைவரிசைகள் ராஜ் நியூஸ்,ராஜ் டிஜிடல் ப்ளஸ், [[விஜய் தொலைக்காட்சி|ஸ்டார் விஜய்]], [[ஜெயா தொலைக்காட்சி]] மற்றும் அதன் அலைவரிசைகள் ஜெயா மாக்சு, ஜெயா பிளசு, [[பொதிகை தொலைக்காட்சி|தூர்தர்சன் பொதிகை]], டிஸ்கவரி தமிழ் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அவற்றில் பரவலான சிலவாகும். நான்கு ஏ.எம் மற்றும் பதினொன்று [[பண்பலை ஒலிபரப்பு|பண்பலை]] அலைவரிசைகளில் [[வானொலி]] நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. சூரியன் பண்பலை,ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, [[ஹலோ எப்.எம்|ஹலோ]], ரேடியோ ஒன், ஆஹா, பிக், ரெயின்போ பண்பலை, எப் எம் கோல்டு ஆகியன அவற்றில் சிலவாகும்.
 
[[தினகரன் (இந்தியா)|தினகரன்]],[[தமிழ் முரசு]], [[தினத்தந்தி]], [[தின மலர்]], [[தினமணி]],[[மாலை மலர்]], [[தி இந்து (தமிழ் நாளிதழ்)|தி இந்து]] ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், [[தி இந்து]], [[தி நியூ இந்தியன் எக்சுபிரசு]], [[தி டெக்கன் குரோனிக்கள்|டெக்கான் கிரானிக்கிள்]], [[தி டைம்சு ஆப் இந்தியா]] ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன. [[ஆனந்த விகடன்]], [[குமுதம் (இதழ்)|குமுதம்]], [[கல்கி (இதழ்)|கல்கி]], [[குங்குமம் (இதழ்)|குங்குமம்]], நக்கீரன், புதிய தலைமுறை ஆகியவை இங்கு அச்சிடப்படும் முக்கிய வார இதழ்கள்.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது