சிக்கிமின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

470 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
No edit summary
1670 ஆம் ஆண்டில் புன்ட்சோங் நம்க்யாலுக்குப் பிறகு அவரது மகன், டென்சுங் நாம்யால் என்பவர் ஆட்சிக்கு வந்தார். இந்த சோக்யால் ஆட்சியில் நாடு அமைதியாக இருந்தது, நாட்டின் தலைநகரானது யூக்சோம் நகரிலிருந்து ரபெண்டெஸ் நகரத்துக்கு மாற்றப்பட்டது. அரசரின் இரண்டாவது மனைவியின் மகனான சக்டோர் நம்கியால், 1700 ஆம் ஆண்டு அரசாட்சி கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது ஒன்றுவிட்ட அக்காள் பெண்டியன்குமு, [[பூட்டான்|பூடானின்]] உதவியுடன் அவரை ஆட்சியில் இருந்து அகற்றினார். 1700 முதல் 1706 வரை சக்டோர் நாம்கால் சிக்கிமை ஆண்டுவந்தபோது, சிக்கிம் மன்னர் மூன்றாவது சோகையால் என்பவர் படையெடுத்துவந்து சிக்கிமின் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். இதனால் சக்டோர் நாம்கால் திபெத்தில் தஞ்சமடைந்தார். இதன் பின்னர் திபெத்தியர்கள் பூட்டானிய இராணுவத்தை வெளியேற்றி, நாம்காலை மீண்டும் சிக்கிமுக்கு அழைத்து வந்தனர். சக்டோருக்குப் பின் அவரது மகன் கியுர்மத் நம்க்யால் 1717 இல் ஆட்சிக்கு வந்தார். கியுர்மத் நம்க்யால் ஆட்சியில் நேபாளம் மற்றும் சிக்கிமுக்கு இடையே பல சண்டைகள் நடந்தன. கியுர்மத்துக்கு முறையற்றவகையில் பிறந்தவரான இரண்டாம் நன்ஜால், 1733 இல் தனது தந்தையிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் காலத்தில் பூட்டானியர்கள் மேற்கொண்ட தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்டது மேலும் நேபாளிகள் இவர்களின் தலைநகரான ரபெண்டெஸை கைப்பற்றினர் இதனால் ஆட்சியில் குழப்பம் நிலவியது.
 
1780 முதல் 1793 வரை டென்சிங் நம்க்யால், ஆட்சி புரிந்தார் இவர் சோக்யால்களில் பலவீனமான ஆட்சியாளராக இருந்தார், அவருடைய நாட்டின் பெரும்பான்மைப் பகுதியானது நேபாளம், சிக்கிம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டது. 1788 ஆம் ஆண்டு, நேபாள [[கோர்க்கா நாடு|கோர்கா]] இராணுவம் சிக்கிம்மீது படையெடுத்தது, லிம்புவானா மற்றும் முன்னாள் தலைநகரான ரெட்டெண்ட்ஸை ஆகியவற்றை சூறையாடியது. சிக்கிம் மன்னர் இரண்டாவது முறையாக திபெத்தில் தஞ்சமடைந்தார். 1788 ஆம் ஆண்டு, திபெத்தின் 8 வது தலாய் லாமா ரெனா ஸாங்கில் சும்பி பீடபூமியில் (இன்றைய [[யாதோங் கவுண்டி]]) அவரை தங்க வைத்தார்.<ref name="Extensive">{{cite journal|title=III. A Brief History of Sikkim|journal=Journal of Qinghai Nationalities Institute|date=April 1978|first=|last=|volume=III|issue=|pages=34|id=|url=http://epub.cnki.net/grid2008/detail.aspx?filename=QHMS197804003&dbname=CJFQ1979|format=|accessdate=21 November 2008|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20110723043800/http://epub.cnki.net/grid2008/detail.aspx?filename=QHMS197804003&dbname=CJFQ1979|archivedate=23 July 2011|df=dmy-all}}</ref> சீனாவின் உதவியுடன் அவரது மகன் துஷ்புது நாம்யாலை 1793 ல் சிக்கிமுக்கு திரும்பினார். அவர் தன் தலைநகரை டும்லொங்கிற்கு மாற்றினார்.
 
=== பிரிட்டிஷ் பேரரசுடன் உறவு ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2449581" இருந்து மீள்விக்கப்பட்டது