தொங்கல் (வேதியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
"Suspension (chemistry)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
[[வேதியியல்|வேதியியலில்]], '''தொங்கல்''' என்பது ஒரு  படிதலுக்குத் தகுதியான அளவு பெரிய திண்மத் துகள்களைக் கொண்ட பலபடித்தான கலவையாகும். வழக்கமாக இத்துகள்கள் ஒரு மைக்ரோமீட்டருக்கும் அதிகமான உருவளவைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு தொங்கல் கரைசல் என்பது கரைபொருள் துகள்களானவை கரையாமல், ஊடகம் முழுவதும் தொங்கிய நிலையில் காணப்படும் பலபடித்தான கலவையாகும். தொங்கலின் துகள்களை வெறும் கண்ணால் பார்க்க இயலும்.  அதாவது, கரைப்பானில் துகள்கள் கட்டற்று மிதக்கும் நிலையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால் இது சாத்தியமாகிறது. அக நிலையானது (திண்மம்) புற நிலை (திரவம்) முழுவதுமாக சில குறிப்பிட்ட கலக்கிகளைக் கொண்டோ அல்லது தொங்கலை உருவாக்கும் காரணிகள் கொண்டோ  இயந்திரவியல் கலக்கலின் மூலமாக விரவச் செய்யப்படுகிறது. கூழ்மங்களைப் போலல்லாமல், தொங்கல்கள் இறுதி விளைவாக கீழே தங்கி விடுகின்றன. நீரில் மணல் என்பது தொங்கலுக்கான உதாரணமாகும். தொங்கலின் துகள்கள் நுண்ணோக்கியின் வழியாகப் பார்க்கக் கூடியவையாகவும், சிறிது நேரம் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டால் கலனில் அடியில் சேகரமாகிவிடும். இந்தப் பண்பே தொங்கலையும், கூழ்மத்தையும் வேறுபடுத்தும் பண்பாகும். அதாவது, கூழ்மத்தின் துகள்கள் தொங்கலை விடச் சிறியதாக இருப்பதால் அவை கீழே தங்குவதில்லை. கூழ்மங்களும், தொங்கல்களும் கரைசல்களிலிருந்து வேறுபட்டவை. அதாவது, கரைசல்களில், கரைந்த பொருளானது (கரைபொருள்) திண்மமாக இருப்பதில்லை. மேலும், கரைப்பானும் கரைபொருளும் ஒருபடித்தாக கலந்து விடுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2453136" இருந்து மீள்விக்கப்பட்டது