எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 247) கி.மு 1 ஆம் நூற்றாண்டிற்கும் (கி.மு 29) இடைப்பட்ட 220 ஆண்டுகால [[அனுராதபுர இராச்சியம்|அனுராதபுர]] அரசின் வரலாற்றில் ஆட்சி புரிந்த 19 மன்னர்களுள் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் ஆட்சி புரிந்துள்ளனர்.<ref>Geiger,W., The Mahawamsa - Introduction, Colombo 1950. Page XXXVII</ref> இதில் 44 வருடங்கள் எல்லாளனுக்கும் 22 வருடங்கள் அவனது தந்தை ஈழசேனனுக்குமுரியவை. ஆயினும், இக்கால வரலாற்றைப் பல அத்தியாயங்களில் கூறும் [[மகாவம்சம்]] தமிழ் மன்னர்களின் ஆட்சியைச் சில செய்யுட்களில் மட்டுமே கூறி முடிக்கின்றது. எல்லாளன் என்ற சோழ மன்னனை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கையின் விடுதலை வீரனாக வருணிக்கப்பட்ட [[துட்டகைமுனு|துட்டகாமினியின்]] 24 ஆண்டுகால ஆட்சியை 843 செய்யுட்களில் கூறும் [[மகாவம்சம்]], 44 ஆண்டுகள் நீதி தவறாது ஆட்சி நடத்திய எல்லாளனை 21 செய்யுட்களில் மட்டுமே கூறுகிறது. இது ஒன்றே [[பாளி]] இலக்கியங்களில் [[தமிழ்]] மன்னர்களின் வரலாறு மறைக்கப்பட்டுள்ளமைக்கு சிறந்த சான்று.<ref>புஸ்பரட்ணம், ப., [[இலங்கை|இலங்கையில்]] தமிழ் மன்னர்களின் ஆட்சி - ஒரு நோக்கு. நா.கிருஸ்ணனந்தன் நினைவுமலர், பொருளிதழ் 3, பக்கம் - 5.</ref>
 
=== எல்லாளன் பற்றி மகாவம்சம் ===
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை ([[இந்து]] மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை.<ref>சிற்றம்பலம் சி.க.ஈழத்தமிழர் வரலாறு : 1 சாவகச்சேரி - 1994. பக்கம் 20</ref> இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என [[மகாவம்சம்]] கூறுகிறது.<ref>The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 34, பக்கம் : 145.</ref> எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் [[மகாவம்சம்]], அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை [[மனுநீதிச் சோழன்|மனுநீதிச் சோழனின்]] கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் [[கோட்டை|கோட்டைவாசலில்]] தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.
* எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.<ref>The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 15 - 18</ref>
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது