எல்லாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Tweak
வரிசை 51:
 
=== எல்லாளன் பற்றி மகாவம்சம் ===
[[படிமம்:Elara’s bell and cow.jpg|thumb|சோழனின் ஆராய்சி மணியை அடிக்கும் பசு]]
எல்லாளன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். இவனது நீதி தவறாத ஆட்சியைப் புகழ்ந்துரைக்கும் பாளி நூல்கள், இவர் தவறான மார்க்கத்தினை ([[இந்து]] மதத்தினை) தழுவியவன் எனவும் கூறப் பின் நிற்கவில்லை.<ref>சிற்றம்பலம் சி.க.ஈழத்தமிழர் வரலாறு : 1 சாவகச்சேரி - 1994. பக்கம் 20</ref> இவன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என [[மகாவம்சம்]] கூறுகிறது.<ref>The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 34, பக்கம் : 145.</ref> எல்லாளன் பகைவர்க்கும் நண்பர்க்கும் சமநீதி வழங்கியதாக கூறும் [[மகாவம்சம்]], அவனது நீதிநெறி தவறாத ஆட்சியை [[மனுநீதிச் சோழன்|மனுநீதிச் சோழனின்]] கதைகளோடு இணைத்து விபரித்துள்ளது. எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்தது. நீதி வேண்டுவோர் எந்த நேரமும் [[கோட்டை]]வாசலில் தொங்கும் கயிற்றினை இழுத்து இந்த மணியை ஒலியெழுப்பின் மன்னன் உடன் வந்து விசாரித்துத் துயர் தீர்ப்பான்.
* எல்லாளனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிள்ளைகளாவார். ஒருநாள் ஒரு தேரில் திசாவாவியை நோக்கி எல்லாளனின் மகன் பயணப்பட்டபோது, வழியில் பசுவுடன் படுத்திருந்த கன்றின் கழுத்தின் மேல் தேர்ச்சில் ஏறியதால், கன்று அவ்விடத்தில் இறந்துவிட்டது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்து எல்லாளனிடம் நீதி கேட்டது. எல்லாளன் தனது மகனின் தலையைத் தேர்க்காலிலிட்டு அதேவிதமாக மரணமேற்படுத்தி நீதி வழங்கினான்.<ref>The Mahavamsa, மு.கு.நூல். அதிகாரம் : XXI வரி : 15 – 18</ref>
வரி 97 ⟶ 96:
 
== எல்லாளன் - மனுநீதிச் சோழன் ஒப்பு நோக்கல் ==
[[படிமம்:Elara’s bell and cow.jpg|thumb|சோழனின் ஆராய்சி மணியை அடிக்கும் பசு]]
* மனுநீதிச் சோழனது மகன் வீதிவிடங்கன், தேரேறி வீதி உலாக் கிளம்பினான். அவனையே அறியாது அவன் சக்கரங்கள் ஏறி ஒரு பசுங்கன்று இறந்து விட்டது. இதைக் கண்ட தாய்ப் பசு மன்னன் அவை சென்று [[ஆராய்ச்சி மணி]]யை முட்டி அடித்தது. பசுவின் துயர் அறிந்த மன்னவன் தானும் தன் மகனை இழத்தலே தகும் என்று மந்திரியிடம் இளவரசனை தேரேற்றிக் கொல்லப் பணித்தான். மந்திரியோ மன்னர் குலத்துக்கு ஒரு தீங்கும் செய்யேன் என்று கூற, மன்னனே தன் வீதிவிடங்கனைத் தேரேற்றிக் கொன்றான். கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் 6 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும், [[இலங்கை]]யின் வரலாறு கூறும் [[பாளி]] நூலான [[மகாவம்சம்]] கிமு 2 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் இருந்து வந்து 44 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான [[எல்லாளன்]] மீது இக்கதையை ஏற்றிச் சொல்கிறது<ref>Wijesinha, L. C., 1996. பக். 82.</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/எல்லாளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது