ஸ்பிட்சர், விண்வெளித் தொலைநோக்கி ஒன்றின் அவசியத்தை உணரச் செய்வதற்காக பெருமளவு காலத்தைச் செலவளித்துள்ளார். 1962 இல், [[ஐக்கிய அமெரிக்கத் தேசிய அறிவியல் அக்கடமி]], தனது அறிக்கையொன்றில், விண்வெளித்திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளித் தொலைநோக்கி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சிபார்சு செய்தது. 1965 ஆம் ஆண்டில், ஒரு பெரிய விண்வெளித் தொலைநோக்கி ஒன்றின் [[அறிவியல்]] நோக்கங்கள் பற்றி வரையறுப்பதற்கான குழுவொன்றின் தலைவராக ஸ்பிட்சர் தெரிவு செய்யப்பட்டார்.
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர், போர்க் காலத்தில் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை அறிவியலாளர்கள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர், விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட வானியல் சிறிய அளவில் தொடங்கியது. சூரியனின் முதலாவது புற ஊதாக் கதிர் [[நிறமாலை]] 1946 ஆம் ஆண்டில் பெறப்பட்டது. 1962 இல், [[ஐக்கிய இராச்சியம்]], புவியைச் சுற்றும் சூரியத் தொலை நோக்கி ஒன்றை ஏவியது. 1966 இல் நாசா தனது முதலாவது [[புவியைச் சுற்றும்புவிசுற்றும் வானியல் அவதான நிலையம்|புவியைச் சுற்றும்சுற்றிவரும் வானியல்வான்காணகத்தை அவதான நிலையத்தை]] (ஓஏஓ) ஏவியது. ஓஏஓ-1 இன் மின்கலங்கள் பழுதானதால் திட்டம் மூன்று நாட்களிலேயே நின்றுபோனது. தொடர்ந்தி 1968 ஆம் ஆண்டில் ஓஏஓ-2 ஏவப்பட்டது. இது, புற ஊதாக் கதிர்கள் மூலம் [[விண்மீன்]]களையும், விண்மீன் கூட்டங்களையும் அவதானித்தது. ஓர் ஆண்டுக்கு மட்டுமே இது திட்டமிடப்பட்டது ஆயினும்திட்டமிடப்பட்டதாயினும், அதனையும் தாண்டி 1972 ஆம் ஆண்டு வரை இது செயல்பட்டது.
வானியலில், விண்வெளியிலிருந்தான அவதானிப்புவான்காணகத்தின் வகிக்கக்கூடியமுதன்மையான முக்கிய பங்குபங்களிப்பு குறித்து ஓஏஓ திட்டங்கள் நன்கு விளக்கின. தொடர்ந்து, 1968 ஆம் ஆண்டில், 3 மீட்டர் விட்டம் கொண்ட ஆடியுடன் கூடிய [[தெறிப்புத் தொலைநோக்கி]] ஒன்றை உருவாக்குவதற்கான திட்டமொன்றை நாசா தொடங்கியது. 1979 ஆம் ஆண்டில் செலுத்தப்படுவதற்காகத் திட்டமிடப்பட்ட இதற்கு பெரிய சுற்றும் தொலைநோக்கி அல்லது பெரிய விண்வெளித் தொலைநோக்கி (எல்எஸ்டி) எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டது. இத்தகைய செலவு கூடிய திட்டங்கள் நீண்டகாலம் பயன்பட வேண்டுமாயின், திருத்தப் பயணத் திட்டங்கள் தேவை என உணரப்பட்டது. அத்துடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய [[விண்வெளி ஓடம்|விண்வெளி ஓடங்களை]] உருவாக்குவதற்கான திட்டங்களும், இத்தகைய திருத்தப் பயணத் திட்டங்களுக்கான தொழில்நுட்பங்கள் விரைவில் கிடைக்கும் என்பதைக் குறித்துக் காட்டின.