கனிமச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனல்லாத தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து உருவாகும் சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் என அழைக்கப்படுகின்றன. இச்சேர்மங்களில் பெரும்பாலானவை [[அயனிப் பிணைப்பு|அயனிப்பிணைப்பு]]களால் பிணைக்கப்பட்டவையாகும்.<ref name="dictionary">{{cite web | url=https://medical-dictionary.thefreedictionary.com/Inorganic+compounds | title=Inorganic chemistry | publisher=Farlex | accessdate=9 திசம்பர் 2017}}</ref> வேறு விதமாகக் கூறுவதென்றால், கார்பன் ஐதரசன் பிணைப்பைக் (C-H பிணைப்பு) கொண்டிராத ஒரு சேர்மமே கனிமச் சேர்மமாக கருதப்படுகிறது. மேலும், நிலத்திலிருந்து அல்லது பாறைகளிலிருந்து பெறப்பட்ட கனிமங்களின் சேர்மங்களாகவும் கருதப்படுகிறது.<ref>{{cite web | url=https://study.com/academy/lesson/what-are-inorganic-compounds-definition-characteristics-examples.html | title=What Are Inorganic Compounds? - Definition, Characteristics & Examples | publisher=Study.com | accessdate=9 திசம்பர் 2017 | author=Marauo Davis}}</ref> [[கார்பன்]] [[ஐதரசன்|ஐதரசனுடன்]] இணைந்து உருவாகும் கார்பனின் சேர்மங்கள் [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்கள்]] என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரிமச்சேர்மங்கள் [[சகப் பிணைப்பு|சகப்பிணைப்புகளால்]] பிணைக்கப்பட்டவையாகும். கார்பைடுகள் (உதாரணம் சிலிகன் கார்பைடு SiC2), சில கார்பனேட்டுகள் (உதாரணம் [[கால்சியம் கார்பனேட்|கால்சியம் கார்பனேட்டு]] CaCO3), சில சயனைடுகள் ([[சோடியம் சயனைடு]] NaCN), [[கார்பனோராக்சைடு]], [[கார்பனீராக்சைடு]] போன்றவை கனிமச் சேர்மங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 
== கனிமச் சேர்மங்களுக்கும் கரிமச் சேர்மங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் ==
{| class="wikitable"
|-
! வ.எண் !! கரிமச் சேர்மங்கள் !! கனிமச் சேர்மங்கள்
|-
| 1 || கரிமச் சேர்மங்களின் பண்புகள் அவற்றில் உள்ள கார்பன் அணுக்களால் நிர்ணயிக்கப்படுகின்றன|| பெரும்பாலான கனிமச்சேர்மங்களில் கார்பன் அணுக்களே காணப்படுவதில்லை
|-
| 2 || கரிமச் சேர்மங்கள் திட, திரவ, வாயு நிலைகளில் காணப்படுகின்றன || கனிமச்சேர்மங்களில் பெரும்பாலானவை திண்மங்களாகவே காணப்படுகின்றன
|-
| 3 || கார்பன்-ஐதரசன் பிணைப்புகளைக் கொண்டுள்ளன || கார்பன்-ஐதரசன் பிணைப்புகள் காணப்படுவதில்லை
|-
| 4 || கரிமச் சேர்மங்கள் உயிருள்ளவற்றில் காணப்படுகின்றன || கனிமச்சேர்மங்கள் உயிரற்ற பொருட்களில் காணப்படுகின்றன
|}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கனிமச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது