சுரதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்: Suradha.jpg|thumb|100px|கவிஞர் சுரதா]]
'''சுரதா''' (???? - [[2006]]) என்னும் புலவரின் இயற்பெயர் இராசகோபாலன். இவர் [[மன்னார்குடி]]யில் பிறந்து வளர்ந்தவர். புரட்சிக் கவிஞர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்தினதாசன்''' என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுபெயரின் சுருக்கமாக ''சுரதா'' என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை ''உவமைக் கவிஞர்'' என்று சிறப்பித்துக் கூறுவர். இவர் தன்னுடைய 84ம் வயதில் சென்னையில் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்
 
தமிழ், கவிதை, புகழ் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்ட புரவலர்கள், ஆர்வலர்கள் ஆகியோரை இணைத்துச் சில வினோதக் கவியரங்கங்களை நடத்துபவராக இருந்தார் சுரதா. படகுக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம் முதலியவை அவை. கவியரங்குகளைக் கொண்டாட்ட நிகழ்வாக மாற்றியதில் அவருக்கு மிகுந்த பங்குண்டு. பாரதிதாசனைப் போன்ற இயல்புகள் (கூட்டத்தோடு இருத்தல், வெடுக்கெனப் பேசுதல் உள்ளிட்டவை) பலவற்றைப் பெற்றிருந்த சுரதா, மறக்கவியலாப் பெயராக நிலைத்தமைக்கு முக்கியக் காரணம், திரைப்படத்திற்கு அவர் எழுதிய பாடல்கள். திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். 'அவள் மயானம் தின்னும் மாத்திரை ஆனாள்' போன்ற கவிதை நடை உரையாடல் அவருடையது. மிகக் குறைந்த அளவுக்கான பாடல்களையே அவர் எழுதியுள்ளார். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில் அழியா வரம் பெற்று நின்றுவிட்ட அவரது இரண்டு பாடல்கள், 'அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு,' 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' ஆகியவை.
 
 
==சுரதாவின் படைப்புகள்==
வரி 9 ⟶ 13:
 
[[பகுப்பு:கவிஞர்கள்]]
==வெளி இணைப்புகள்==
* http://www.kalachuvadu.com/issue-80/anjali02.htm (27 மே 2008 அன்று)
"https://ta.wikipedia.org/wiki/சுரதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது