"கொடுமணல் தொல்லியற் களம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up and re-categorisation per CFD
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (clean up and re-categorisation per CFD)
==ஊர்ச்சிறப்பு==
இவ்வூர் [[இரும்புக் காலம்]] (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), [[சங்க காலம்]] (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் மக்கள் வாழ்ந்த பகுதியாகும்.
கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் [[பதிற்றுப்பத்து]] என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில [[நூற்றாண்டு]]களில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியங்களில்]] காணப்படுகின்றன.
 
கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி [[புதைகுழி]]கள் அடங்கிய அடக்கக் களமாகக் காணப்படுகின்றது. இதனை அண்டிச் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.<ref name="Stone spell" />
 
இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் [[செ.இராசு]], செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், [[பெருங்கற்காலம்|பெருங்கற்கால]]ப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள்,[[ஈமத்தாழி|முதுமக்கள் தாழி]] கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன.
 
==தொன்மையான தொழில் நகரம்==
கொடுமணல் சங்க இலக்கியத்தில் "[[கொடுமணம்]]" என்னும் பெயர் பெற்றிருந்தது. அங்கு, திறமை மிக்க கைவினைக் கலைஞர் இரும்பை சக்திவாய்ந்த வெப்ப உலைகளில் இட்டு, உருக்கி எஃகாக மாற்றினர். அந்த உலோகம் பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.<ref>[http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_1/2000616d_17.pdf Indian Journal of History & Science,37.1,2002,17-29 (through "Digital Library of India")]</ref><ref>[http://www.dli.gov.in/rawdataupload/upload/insa/INSA_1/20005b66_263.pdf Indian Journal of History & Science,34(4),1999 (through "Digital Library of India")]</ref>
 
அதுபோலவே, கொடுமணலில் நடந்த அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக் கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக் கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன.
[[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசில்]] புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் பலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன சிங்கச் சிலை மற்றும் இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு கொடுமணல் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய நகரமாக அறியப்பட்டுள்ளது.<ref>{{cite news|last=|title=A great past in bright colours|url=http://www.frontlineonnet.com/fl2720/stories/20101008272006400.htm|accessdate=|newspaper=Frontline|date=8 October 2010|location=India}}</ref><ref>BIG discovery: A 2,500-year-old industrial estate! http://www.rediff.com/business/slide-show/slide-show-1-big-discovery-a-2500-year-old-industrial-estate/20120612.htm</ref>
 
கிமு 500க்கு முற்பட்ட தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையின் சிதிலங்களையும் பல ஆபரணங்களையும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். <ref>[http://newindianexpress.com/states/tamil_nadu/Tamil-Brahmi-script-dating-to-500-BC-found-near-Erode/2013/05/17/article1593552.ece1 Tamil Brahmi script dating to 500 BC found near Erode ]</ref>
 
==குறிப்புகள்==
* [http://wikimapia.org/#lat=11.1097377&lon=77.5098748&z=16&l=0&m=b&v=8&show=/15122954/Kodumanal-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D விக்கிமேப்பியாவில் கொடுமணல் அமைவிடம்]
 
[[பகுப்பு:தமிழக தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:ஈரோடு மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
3,692

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2455757" இருந்து மீள்விக்கப்பட்டது