திருமலை நாயக்கர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up and re-categorisation per CFD
வரிசை 1:
[[File:Madurai Nayak Palace Collage.jpg|thumb|திருமலை நாயக்கர் அரண்மனை]]
'''திருமலை நாயக்கர் அரண்மனை''' அல்லது '''திருமலை நாயக்கர் மகால்''' என அழைக்கப்படும் [[அரண்மனை]], [[மதுரை]]யை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான [[திருமலை நாயக்கர்|திருமலை நாயக்கரால்]] கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் [[கட்டிடம்]], புகழ் பெற்ற [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து]] சுமார் 2 [[கிலோமீட்டர்]] தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் [[கட்டிடக் கலைஞர்]] ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.
 
== அமைப்பு ==
இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த [[இந்தோ சரசனிக் பாணி]] என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.<ref> [http://tamil.nativeplanet.com/madurai/attractions/thirumalai-nayakkar-palace/ Thirumalai Nayakkar Palace, Native Planet] </ref>
அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
 
இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், [[அந்தப்புரம்]], [[பூங்கா]]க்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.
 
==ஒலி-ஒளி காட்சி==
இந்த மஹால் 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டுமுதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி கட்சி நாள்தோறும் மலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின் இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் 2008-09 ஆண்டில் சுமார் 36 லட்சம் வரை வருவாய் ஈட்டப்பட்டது. <ref>http://www.thehindu.com/news/cities/Madurai/article19437.ece The Hindu: Cities/Madurai</ref>
 
==காட்சிக் கோப்பகம்==
வரிசை 46:
[[பகுப்பு:தமிழ்நாட்டு அரண்மனைகள்]]
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழக தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:மதுரை நாயக்கர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருமலை_நாயக்கர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது