நீர்க்காரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆல்கலி''' என்பது கார உலோகங்களின் (உதாரணம்: [[இலித்தியம்]], [[சோடியம்]], [[பொட்டாசியம்]], [[ருபீடியம்]], [[சீசியம்]] போன்றவை) ஏதாவதொரு கரையக்கூடிய ஐதராக்சைடுகளைக் குறிக்கும் சொல்லாகும். ஆல்கலிகள் சிவப்பு லிட்மசை நீல நிறமாக மாற்ற வல்ல வலிமையான காரங்களாகும். இவை அமிலங்களுடன் வினைபுரிந்து நடுநிலையான உப்புக்களைத் தருகின்றன. இவை எரிதன்மையுடையவையாகவும் மற்றும் உயிருள்ள திசுக்களை அரிக்கும் தன்மை உடையனவாகவும் காணப்படுகின்றன. ஆல்கலி என்ற சொல்லானது [[காரமண் உலோகங்கள்|கார மண் உலோகங்களின்]] ([[பேரியம்]], [[கால்சியம்]], [[ஸ்ட்ரான்சியம்|இசுட்ரான்சியம்]] போன்றவை) கரையக்கூடிய ஐதராக்சைடுகளையும், மற்றும் அம்மோனியம் ஐதராக்சைடையும் கூடக் குறிக்கப் பயன்படுகிறது. உண்மையில் ஆல்கலி என்ற சொல்லானது சோடியம் அல்லது பொட்டாசியத்தைத் தரக்கூடிய தாவரங்கள் எரிக்கப்பட்டுக் கிடைக்கும் சாம்பலைக் குறிக்கக்கூடியதாகும்.
 
==ஆல்கலிகளின் பொதுவான பண்புகள் ==
ஆல்கலிகள் அனைத்துமே அறீனியசு காரங்களாகும். இவை நீரில் கரைக்கும் போது ஐதராக்சைடு அயினகளைத் (OH<sup>−</sup>) தரவல்லவை. பொதுவான காரத்தன்மையுள்ள ஆல்கலி நீர்க்கரைசல்களின் பொதுவான பண்புகள் பின்வருமாறு:
* மிதமான செறிவுடைய கரைசல்கள் (10<sup>−3</sup> M க்கும் அதிகமான) 7.1 அல்லது அதற்கும் அதிகமான pH மதிப்பினைக் கொண்டிருக்கக்கூடியவையாகும். இவை பினால்ப்தலீனை நிறமற்ற நிலையிலிருந்து இளஞ்சிவப்பாக மாற்றக்கூடியவை.
* அதிக செறிவான கரைசல்கள் எரிதன்மை உடையவை (வேதிக்காயங்களை ஏற்படுத்துபவை).
* ஆல்கலி கரைசல்கள் வழுவழுப்பானவையாகவும், தொடும் போது சோப்பைத் தொடுவது போன்ற உணர்வையும் தரக்கூடியவை. இவை, தோலின் மேற்புறத்தில் உள்ள கொழுப்புத் தன்மையுடைய பொருட்களுடன் சோப்பாக்குதல் வினையில் ஈடுபடுவதன் காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது.
* ஆல்கலிகள் இயல்பாக நீரில் கரைபவையாகும். இருப்பினும் பேரியம் கார்பனேட்டு போன்றவை அமிலத்தன்மையுள்ள நீர்க்கரைசல்களில் மட்டுமே கரையக்கூடியவையாக காணப்படுகின்றன.
 
 
[[பகுப்பு:கனிம வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/நீர்க்காரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது