ஐரோவாசியக் கழுகு ஆந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removing category & cleanup using AWB
வரிசை 36:
== உடலமைப்பு ==
56 செ.மீ. - குண்டான தோற்றம் கொண்ட இது பழுப்பு நிறமான உடலில் வெளிர் மஞ்சளும் நல்ல பழுப்புமான கோடுகளையும் புள்ளிகளையும் கொண்டது. பெரிய வட்ட வடிவமான ஆரஞ்சு நிறக் கண்களையும் தலையில் கருப்பு நிறத்தில் விறைத்து நிற்கும் கொம்புகளையும் கொண்டது.
கண்கள் உருண்டு, பெரியதாக, மஞ்சள் நிறத்தில் காணப்படும்,ஊர்ப்பருந்தை விட சற்று பெரியதாக காணப்படும் பெரிய ஆந்தைகள் இவை.
 
== வகைகள் ==
வரிசை 76:
'''கொம்பன் ஆந்தைகள்''' முக்கியமாக சுண்டெலி எலிகளையே உண்டாலும் பாம்புகள், தவளைகள் போன்றவற்றோடு வண்டுகள் போன்ற பூச்சிகளையும் உண்ணுகின்றன.கூகையைப் போலச் சூரிய வெளிச்சத்தைக் கண்டு மிரளாது.
<ref>'''வட்டமிடும் கழுகு''' -ச.முகமது அலி தடாகம் வெளியீடு </ref>
== இனப்பெருக்கம் ==
பொதுவாக கொம்பன் ஆந்தைகள் நவம்பர் முதல் மே வரை மழைக்காலம் முடியும் தருவாயில் முட்டையிடுகின்றன. இவை கூடுகள் ஏதும் கட்டுவதில்லை. புதர் ஓரமான குழிகளிலும் மண்மேடுகளின் மீதும், நிழல் கவிழ்ந்த பாறைகளின் மேல் முட்டையிடுகின்றன. சில நேரங்களில் பெரிய புதர் அல்லது மரத்தின் கீழேயோ கூட முட்டையிடும் என்று ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இனப்பெருக்க காலத்தில் கொம்பன் ஆந்தைகள் மிகவும் மூர்க்கமாக முட்டை இட்டுள்ள பகுதியைப் பாதுகாக்கும். ஒரு ஆந்தை அடைகாக்கும் வேளையில் மற்றொரு ஆந்தை அருகில் உள்ள மரத்திலோ அல்லது பாறையிலோ அமர்ந்து காவல் இருக்கும்.வைரி போன்ற பறவைகளோ அல்லது மனிதர்களோ முட்டைகள் உள்ள பகுதியை அணுகும்போது தற்காப்பிற்காகத் தாக்க முற்படும்.
வரிசை 82:
=== வாழ்க்கை ===
கொம்பன் ஆந்தைகள் 4 முட்டைகள் வரை இடும் என்றும், சிலசமயங்களில் 2 அல்லது 3 தான் இடும் என்றும் சாலிம் அலி குறிப்பிட்டுள்ளார். எல்லா முட்டைகளும் ஒரே நாளில் இடப்படுவதில்லை. ஒருநாள்விட்டு ஒரு நாள் அவை முட்டையிடுவதால், குஞ்சுகள் வெவ்வேறு வளர்ச்சி நிலையில் இருப்பதை கண்டு அறியலாம். சுமார் 33 அல்லது 35 நாட்களில் வெளிவரும் குஞ்சுகள் 6 மாத காலத்திற்கு பெற்றோரை நம்பியே வாழ்கின்றன.
<ref>'''காடு''' -தடாகம் வெளியீடு செப்-அக்டோபர்-2015 பக்கம் எண்:20,21 </ref>
[[File:Eurasian Eagle-Owl RWD.jpg|thumb|left|Eurasian Eagle-Owl RWD|முட்டையை பாதுகாக்கும் கொம்பன்]]
 
வரிசை 92:
குஞ்சுகள் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்தே பாதுகாத்து வளர்க்கின்றன. சில சமயங்களில் எலிகளைக் கொன்று எடுத்து வந்து குஞ்சுகளுக்குக் கொடுப்பதோடு உணவைச் சேமிப்பது போல் குஞ்சுகளின் அருகாமையில் வைக்கும். கொம்பன் ஆந்தைகள், தங்கள் குஞ்சுகளை நன்கு பாதுகாத்தாலும் அவைகள் வளர் நிலையில் தமது வாழிடங்களை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பிக்கும் போது பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்கின்றன. மனிதர்களாலும் மற்ற வேட்டையாடிப் பறவைகளாலும் நேரும் ஆபத்துகளை விடவும் அவை பாறைகளில் இருந்து கீழே விழுந்துவிடும் ஆபத்தே அதிகமாக உள்ளது. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அவை இருக்கும் பாறைகளின் மறைவிடங்களை விடவும் அளவில் பெரியதாகும் போது வேறு இடங்களுக்குச் செல்லத் தொடங்கும். அச்சமயங்களில் அவை நழுவி கீழே உள்ள நீர்நிலையில் விழுந்து விடும். அவ்வாறு நீரில் விழும் ஆந்தைக் குஞ்சுகள் சில சமயங்களில் கரையேறிவிடும். ஆனால் பலநேரங்களில் அவை நீரில் மூழ்கி இறந்து விடும்.
[[File:Eurasian Eagle RWD at CRC.jpg|thumb|left|Eurasian Eagle RWD at CRC|'''கொம்பன் ஆந்தை''']]
<ref>'''தமிழ்நாட்டுப் பறவைகள்''' ''முனைவர் க.ரத்னம்''-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:76 </ref>
 
==வெளி இணைப்புகள்==
வரிசை 100:
 
==மேற்கோள்கள்==
 
 
[[பகுப்பு:பறவைகள்]]
[[பகுப்பு:முதுகெலும்பிகள்]]
[[பகுப்பு:பறவையியல்]]
[[பகுப்பு:ஆந்தைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோவாசியக்_கழுகு_ஆந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது