"தில்லி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Reverted 1 edit by 103.217.240.133 (talk) to last revision by Raj.sathiya. (மின்))
சி
'''தில்லி''' அல்லது '''டெல்லி''' (''Delhi'', [[இந்தி]]: दिल्ली, [[பஞ்சாபி]]: ਦਿੱਲੀ, [[உருது]]: دلی) [[இந்தியா]]வில் உள்ள இரண்டாம் மிகப்பெரிய மாநகரமாகும். இது [[தேசிய தலைநகரப் பகுதி]]யில் உள்ள மூன்று நகரங்களுள் ஒன்றாகும். மற்ற இரண்டு நகரங்கள் [[புது தில்லி]] மற்றும் [[தில்லி கண்டோன்மென்ட்]] ஆகியனவாகும். இத் தேசிய தலைநகரப் பகுதி 11 மில்லியன் [[மக்கள் தொகை]]யுடன் உலகின் எட்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நகரமாகவும் விளங்குகிறது. இது நடுவண் அரசினால் நிர்வாகம் செய்யப்படுகின்றது.
 
வட இந்தியாவில் உள்ள [[யமுனை ஆறு|யமுனை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந் நகரம் நீண்ட காலம் தொடர்ச்சியாக மக்கள் குடியிருப்புப் பகுதியாக விளங்கி வருகின்றது. கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் இருந்தே இப் பகுதியில் மக்கள் வாழ்ந்து வருவதற்கான [[தொல்லியல்]] சான்றுகள் காணப்படுகின்றன. [[தில்லி சுல்தானகம்|தில்லி சுல்தானகத்தின்]] எழுச்சிக்குப் பின்னர், வடமேற்கு இந்தியாவுக்கும், [[இந்துசிந்து-கங்கைச் சமவெளி]]க்கும்சமவெளிக்கும் இடையிலான வணிகப் பாதையில் அமைந்த முக்கியமான அரசியல், பண்பாட்டு வணிக நகரமாக இந் நகரம் உருவானது. இங்கே, பெருமளவிலான பழங்காலத்தைச் சேர்ந்தனவும், மத்திய காலத்தைச் சேர்ந்தனவுமான நினைவுச் சின்னங்களும், [[தொல்லியல் களம்|தொல்லியல் களங்களும்]] அமைந்துள்ளன. 1639 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசர் சாஜகான் மதிலால் சூழப்பட்ட நகரமொன்றை இங்கே அமைத்தார். இது 1649 தொடக்கம் 1857 ஆம் ஆண்டுவரை [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] தலைநகரமாக விளங்கியது.
 
18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் [[பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி]]யின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபின்னர், [[கல்கத்தா]]வே (இன்றைய [[கொல்கத்தா]]) அவர்களது தலைமையிடமாக இருந்தது. கம்பனியின் ஆட்சியிலும் பின்னர் சில காலம் பிரித்தானிய அரசின் கீழும் இந்நிலை நீடித்தது. 1911 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைநகரத்தை தில்லிக்கே மாற்றும் அறிவிப்பை விடுத்தார். 1920களில், பழைய தில்லி நகருக்குத் தெற்கே [[புது தில்லி]] எனப் பெயர்பெற்ற புதிய தலைநகரம் அமைக்கப்பட்டது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இதுவே தலைநகராகவும், அரசின் இருப்பிடமாகவும் அறிவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2456996" இருந்து மீள்விக்கப்பட்டது