தியாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
No edit summary
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
'''தியாகு''' (பிறப்பு: சனவரி 30, 1950) [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] செயல்பட்டுவரும் ஒரு சமூகப் போராளி. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளரான இவர் மார்க்சிய சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்றவர். இடதுசாரி சிந்தனைகளைத் தாங்கிய பல படைப்புகளைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். அவற்றுள் முதன்மையானது [[கார்ல் மார்க்ஸ்|கார்ல் மார்க்சின்]] [[மூலதனம் (நூல்)|மூலதனம்]] ஆகும். பல தாய் தமிழ்ப் பள்ளிகளையும் நடத்தி வருகிறார்.<ref>[http://www.keetru.com/literature/interview/thiyagu.php தியாகு நேர்காணல்: மினர்வா & நந்தன்]</ref> .
“வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் முழக்கத்துடன் [[இலங்கை]]யை [[பொதுநலவாய நாடுகள்|பொதுநலவாய]] அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்; இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது; இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போரினை அக்டோபர் 1, 2013 இல் மேற்கொண்டார். உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தனது போராட்டத்தைக் கைவிட மறுத்தவர் இவரது கோரிக்கை குறித்து நல்ல முடி​வு​ எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததைத் தொடர்ந்து 15 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தினை முடித்துக் கொண்டார்.<ref>http://www.tamilcnnlk.com/archives/205251.html</ref> இவரது மனைவி [[தாமரை (கவிஞர்)|கவிஞர் தாமரை]] ஆவார்.
 
==இளமைப் பருவம்==
 
தியாகுவின் சொந்தவூர் சந்திரசேகரபுரம் அருகே உள்ள நல்லம்பூர் ஆகும். அவருடைய தந்தை திருவாரூரில் ஆசிரியராக வேலை பார்த்ததால் இவர் பிறந்து வளர்ந்தது திருவாரூரில்தான். சிறு வயதிலிருந்தே [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூரில்]] [[பெரியார்]], [[அண்ணா]], [[ஜீவானந்தம்]], காமராசர், [[கலைஞர்]] போன்ற பல தலைவர்களின் பேச்சுக்களைப் பொதுக்கூட்டங்களில் கேட்டு வளர்ந்தார். இளவயதிலேயே படிப்பகங்களில் கிடைத்த [[தி.மு.க]], [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]], தமிழ்த் தேசிய இதழ்கள் அனைத்தையும் வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தார்.
 
==அரசியல் அறிமுகம்==
1965 ஆம் ஆண்டு, அவரது குடும்பம் வலங்கைமானுக்கு குடி பெயர்ந்தது. அங்கு ஒரு தட்டச்சுப் பள்ளியில் சேர்ந்தார். அப் பள்ளியினை நடத்திய அமீர்ஜான் இவருக்க்கு நெருங்கிய நண்பரானார். சாதி, சமய மறுப்பாளரான திரு.அமீர்ஜானின் நட்பு, தியாகுவை நாத்திகனாக மாற்றியதோடு, அவரது சிந்தனை முறையிலும் தீவிர தாக்கங்களை உண்டாக்கியது. அக்காலத்தில் [[பெரியார்|பெரியாரிடமிருந்து]] பிரிந்துவந்த [[குத்தூசி குருசாமி]] போன்றோர் [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தை]]த் தொடங்கியிருந்தனர். அவர்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் மாநாட்டில் கிடைத்த [[காரல் மார்க்சு|மார்க்ஸ்]], [[லெனின்]] போன்றோரது புத்தகங்கள் தியாகுவிற்கு முதன்முதலில் மார்க்சியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்தியது.
 
==காங்கிரசுடன் தொடர்பு==
பொதுவுடைமை புத்தகங்களை அதிகமாகப் படித்து அச்சிந்தனைகளால் தியாகு ஈர்க்கப்பட்ட வேளையில், அவரது [[இந்திய தேசிய காங்கிரஸ்|'''இந்திய கட்சிதேசிய காங்கிரஸ்''']] நண்பர்களின் வற்புறுத்தலால் 1967இல், ஒரு காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தனது முதல் உரையை ஆற்றினார். 1967 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தபின் [[காமராசர்|காமராசரின்]] தூண்டுதலில் ’தேசிய மாணவர் தமிழ் வளர்ச்சிக் குழு’ என்ற அமைப்பு உருவானது. அதன் மாநாட்டில் பேசுவதற்காகத் தியாகு சென்னை சென்றார். [[காமராசர்]], [[கண்ணதாசன்]], [[ஜெயகாந்தன்]] உள்ளிட்ட பலர் அமர்ந்திருந்த மேடையில், துணிந்து தன்னுடைய கருத்துக்களை முன்வைத்தார். அவரது உரையை இரசித்த [[காமராசர்]] அன்று முதல் எங்கு மாநாடு நடந்தாலும் தியாகுவையே முதலில் பேசுமாறு பணித்தார்.
 
==பொதுவுடைமையில் நாட்டம்==
"https://ta.wikipedia.org/wiki/தியாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது