ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி''' (''Giovanni Battista Amici'', 25 மார்ச் 1786 – 10 ஏப்ரல் 1863) இத்தாலிய வானியலாளரும், நுண்ணோக்கியாளரும், தாவரவியலாளரும் ஆவார்.
 
அமிசி தற்கால [[இத்தாலி]]யில் உள்ள மாடெனாவில் பிறந்தார். பொலோகுனா கல்விக்குப் பின்னர் மாடெனாவில் கணிதவியல் பேராசிரியரானார். 1831 இல் மாடெனா துக்கியில் ஆராய்ச்சி பொது ஆய்வாளரானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, புளோரன்சு வான்காணகத்தின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு இவர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் விரிவுரை ஆற்றியுள்ளார். அமிசி புளோரன்சு நகரில் 1863 இல் இறந்தார்.இவர் ஒளித்தெறிப்புத் தொலைநோக்கி ஆடிகளின் மேம்படுத்த்லுக்காக மிகவும் புகழ்பெற்றார். குறிப்பாக, நுண்ணோக்கியின் கட்டுமானத்த்க்காக பெயர்பெற்றவர். இவர் திறமையும் நுட்பமும் வாய்ந்த நோக்கீட்டாளர் ஆவர். இவர் இரட்டை விண்மீன்கள், வியாழனின் நிலாக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த்தோடு சூரியனின் நடுவரை விட்டத்தையும் முனை விட்டங்களையும் அளந்தார். மேலும் இவர், தாவர் (நிலைத்திணை) சாற்றின் சுழலோட்டத்தையும் பூத்தலையும் நன்னீர் நுண்ணுயிரிகளைப் பற்றியும் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் தான் முதன்முதலாக பொலன்தாளை இனங்கண்டவர் ஆவார்.<ref>{{cite web|url=http://physerver.hamilton.edu/Research/Brownian/Botany.html|title=Early Pollen Research|date=2010|author=P. Pearle, K. Bart, D. Bilderback, B. Collett, D. Newman, S. Samuels}}</ref>
 
இவர் dipleidoscopeஇருபடிம நோக்கி, [[அமிசி பட்டகம்|நேரடி காட்சிப் பட்டகம்]], [[அமிசியின் கூரைப் பட்டகம்]] ஆகியவற்றைப் புதிதாக உருவாக்கினார்.
 
அமிசி எனும் நிலாக் குழுப்பள்ளம் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஜியோவன்னி_பாட்டிசுட்டா_அமிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது