சலார் ஜங் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
| website = http://www.salarjungmuseum.in/
}}
'''சாலார்சங் அருங்காட்சியகம்''' (''Salarjung Museum'') [[ஐதராபாத்து|ஐதராபாத்திலுள்ள]] ஒரு அருங்காட்சியகமாகும். ஏழாவது நிசாம், நவாப் மிர் ஓசுமான் அலிகானின் (Nawab Mir Osman Ali Khan), ஏழாவது நிசாமின் முதன்மை அமைச்சராக, மிர் யுசுப் அலி கான் (Mir Yusaf Ali Khan) மூன்றாவது சாலார் சங் (Salar Jung 111) 1899 முதல் 1949 வரையில் இருந்தார். இவர் ஒரு சிறந்த கலை இரசனையாளர். இவரது சொந்த முயற்சியினால் சேகரிக்கப்பட்ட கலைநயம் மிக்க பொருட்களே இந்த அருங்காட்சியகத்தில் உள்ளவை. மக்களைக் கவரும் ஒரு முக்கிய இடமாக இது விளங்குகிறது. முதலில் இவ் வருங்காட்சியகம் சாலார்சங் குடும்ப மாளிகையான திவான் டியோரியில்தான் (Dewan Deorhi) அமைக்கப்பட்டிருந்தது. 1968 ல் தான் முசி ஆற்றின் தென்கரையிலுள்ள புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்பட்டது. இந்திய நாட்டிலுள்ள மூன்று தேசிய அருங்காட்சியகங்களுள் இதுவும் ஒன்று<ref>[Book name: Footprint India By Roma Bradnock,ISBN 978-1-906098-05-6, p-1033]</ref>. இங்கு உலகெங்கிலுமிருந்து சேகரிக்கப்பட்ட அதிகமான கலைப்பொருட்கள் உள்ளன. ஆறு பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்திய, மத்திய கிழக்கு, நேப்பாளம், [[திபெத்து]], [[மியன்மார்]], தூரகிழக்கு மற்றும் ஐரோப்பிய கலைப் பொருட்களும் சிறுவர் பகுதியும் உள்ளன. இது ஒரு கலைப் பொருட்களுக்கான [[அருங்காட்சியகம்]] ஆகும். இங்கே யானைத் தந்தம், சலவைக்கல் போன்றவற்றால் செய்யப்பட்ட பல விலைமதிப்பற்ற பொருட்கள் உள்ளன. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய அருங்காட்சியகமும், ஒரு மனிதனால் சேகரிக்கப்பட்ட அரும்பொருட்களின் தொகுதிகளில் உலகிலேயே மிகப்பெரியதும் இதுவாகும். கிபி முதலாம் நூற்றாண்டிலிருந்து பல நாகரிகங்களையும் சேர்ந்த மதிப்பு மிக்க சேகரிப்புக்களைக் கொண்ட இந்த அருங்காட்சியகம் இந்தியா முழுவதும் பெயர் பெற்றது.
 
==வரலாறு==
வரிசை 19:
== அருங்காட்சியகத்தில் காணப்படும் அரங்கங்கள், பொருட்கள் ==
 
இந்த அருங்காட்சியகத்தில் உலோகச் சிற்பங்கள், சலவைக்கல் சிற்பங்கள், ஓவியங்கள், தந்தத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமான கலைப் பொருட்கள், விதவிதமான துணிகள், பீங்கான் சாடிகள், விரிப்புகள், கடிகாரங்கள், இருக்கைகள், கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள் என்று சுமார் 42.000 பொருட்களும், 60,000 நுால்களும் 950 கையெழுத்துப் பிரதிகளும் இங்கே உள்ளன. இவற்றுடன் பெரிய நுாலகம், படிக்கும் அறை, பதிப்பகம், இரசாயண முறையில் பொருட்களைப் பாதுகாக்கும் ஓர் ஆய்வகம், விற்பனையகம் பொன்றவையும் உள்ளன. [[ராஜா ரவிவர்மா]] ஓவியங்கள், ஒளரங்கசீப், [[ஜஹாங்கீர்]], நுார்ஜஹானுடைய வாள்கள், திப்புசுல்தானின்[[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] அங்கிகள், தலைப்பாகை, நாற்காலிகள் என்று வரலாற்று முக்கியத்துவம் மிக்க பல பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முக்காடு போட்டிருக்கும் இரபேக்கா சிலை மிகவும் புகழ் பெற்றது. 1876 ஆம் ஆண்டில் பென்சொனி என்னும் இத்தாலிய சிற்பியால் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட [[குரான்]] நுால்கள், விதவிதமான அளவுகளிலும், வடிவங்களிலும் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. தங்கம், வெள்ளித் தகடுகளில் எழுதப்பட்ட குரான், மிகச் சிறிய குரான் போன்று பல இங்குள்ளன. கடிகாரங்களுக்கு என்று தனி அறை உள்ளது. பழங்கால சூரியக் கடிகாரத்திலிருந்து இருபதாம் நுாற்றாண்டின் அதிநவீன கடிகாரங்கள் வரை வைக்கப்பட்டிருக்கின்றன. உருப்பெருக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தி பார்க்கக்கூடிய கடிகாரமும் இங்குள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களை ஈரக்கும் ஒரு பொருள் இசைக்கடிகாரம் ஆகும். 200 வருடங்களாக இந்தக் கடிகாரம் ஒரு முறை கூடப் பழுதாகாமல் ஓடிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/article21272151.ece | title=வியப்பூட்டும் இந்தியா: சலார் ஜங் அருங்காட்சியகம் | publisher=தி இந்து | date=06 திசம்பர் 2017 | accessdate=22 திசம்பர் 2017 | author=அ. மங்கையர்கரசி}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சலார்_ஜங்_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது