சலார் ஜங் அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
== அருங்காட்சியகத்தில் காணப்படும் அரங்கங்கள், பொருட்கள் ==
 
இந்த அருங்காட்சியகத்தில் உலோகச் சிற்பங்கள், சலவைக்கல் சிற்பங்கள், ஓவியங்கள், தந்தத்தில் செதுக்கப்பட்ட நுணுக்கமான கலைப் பொருட்கள், விதவிதமான துணிகள், பீங்கான் சாடிகள், விரிப்புகள், கடிகாரங்கள், இருக்கைகள், கையெழுத்துப் பிரதிகள், புத்தகங்கள் என்று சுமார் 42.000 பொருட்களும், 60,000 நுால்களும் 950 கையெழுத்துப் பிரதிகளும் இங்கே உள்ளன. இவற்றுடன் பெரிய நுாலகம், படிக்கும் அறை, பதிப்பகம், இரசாயண முறையில் பொருட்களைப் பாதுகாக்கும் ஓர் ஆய்வகம், விற்பனையகம் பொன்றவையும்பாேன்றவையும் உள்ளன. [[ராஜா ரவிவர்மா]] ஓவியங்கள், ஒளரங்கசீப், [[ஜஹாங்கீர்]], நுார்ஜஹானுடைய வாள்கள், [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] அங்கிகள், தலைப்பாகை, நாற்காலிகள் என்று வரலாற்று முக்கியத்துவம் மிக்க பல பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முக்காடு போட்டிருக்கும் இரபேக்கா சிலை மிகவும் புகழ் பெற்றது. 1876 ஆம் ஆண்டில் பென்சொனி என்னும் இத்தாலிய சிற்பியால் இந்தச் சிற்பம் செதுக்கப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட [[குரான்]] நுால்கள், விதவிதமான அளவுகளிலும், வடிவங்களிலும் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. தங்கம், வெள்ளித் தகடுகளில் எழுதப்பட்ட குரான், மிகச் சிறிய குரான் போன்று பல இங்குள்ளன. கடிகாரங்களுக்கு என்று தனி அறை உள்ளது. பழங்கால சூரியக் கடிகாரத்திலிருந்து இருபதாம் நுாற்றாண்டின் அதிநவீன கடிகாரங்கள் வரை வைக்கப்பட்டிருக்கின்றன. உருப்பெருக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தி பார்க்கக்கூடிய கடிகாரமும் இங்குள்ளது. இங்கு வரும் பார்வையாளர்களை ஈரக்கும்வெகுவாக ஈர்க்கும் ஒரு பொருள் இசைக்கடிகாரம் ஆகும். 200 வருடங்களாக இந்தக் கடிகாரம் ஒரு முறை கூடப் பழுதாகாமல் ஓடிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/kids/article21272151.ece | title=வியப்பூட்டும் இந்தியா: சலார் ஜங் அருங்காட்சியகம் | publisher=தி இந்து | date=06 திசம்பர் 2017 | accessdate=22 திசம்பர் 2017 | author=அ. மங்கையர்கரசி}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சலார்_ஜங்_அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது