இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
துப்புரவு
வரிசை 7:
== வரலாறு ==
 
1950-ம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் [[கணினி]] மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக [[மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள்]], வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் [[தரவுப்பொதி நிலைமாற்றம்]] போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர்.
 
ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணையத் தந்தையாக அறியப்படுகிறார் [http://ksaw.me/2010/12/29/internet/ இணையம் - இன்று ஒரு தகவல்]
 
முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது [[அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]] நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் [[ஜனவரி 1]] [[1983]] முதல் இயங்க ஆரம்பித்தது.
 
1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் [[ரஷ்யா|உருசியாவில்]] உள்ள [[சேர்னோபில்]] அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. [[பிரான்ஸ்]] [[ஸ்விட்சலாந்து]] எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் [[டிம் பேர்ணர்ஸ்-லீ]] எச்டிஎம்எல் (HTML) மெருகூட்டும் மொழி, எச்டிடிபீ (HTTP) என்னும் அனுமதிக்கப் பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN சேர்ண்) இணையத் தளமானது உருவாக்கப் பட்டது.
 
ஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள். [http://www.internetworldstats.com/stats.htm Internet World Stats]
 
=== இணையத்தின் தோற்றம் ===
 
1957-ஆம் ஆண்டில் அன்றைய [[சோவியத் யூனியன்]] [[ஸ்புட்னிக்]] என்னும் ஆளில்லா செயற்கைக்கோளை விண்ணில் பறக்கவிட்டது.இது தமக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கான ஆய்வாக இருக்குமோ என்ற அச்சம் அமெரிக்காவுக்கு உண்டாகியது. விண்வெளி ஆய்வில் தாம் பின்தங்கிவிடக் கூடாது என்கிற அக்கறையும் அவாவும் அமெரிக்காவுக்கு பிறந்தது.எனவே,அப்போதைய [[அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர்]],உடனடியாக ஓர் ஆராய்ச்சி அமைப்பை உருவாக்க ஆணை பிறப்பித்தார்.அந்த ஆய்வமைப்பு ‘ஆர்ப்பா’ (ARPA - Advanced Research Project Agency) எனப்பட்டது.
 
’ஆர்ப்பா’வின் முதன்மைக் குறிக்கோள் சோவியத் யூனியனைப் போன்று விண்கலனை ஏவிப் பரிசோதனை செய்வதேயாகும்.அடுத்த ஆண்டான 1958-இல் அமெரிக்காவின் ‘[[எக்ஸ்புளோரர்]]’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாகப் ஏவப்பட்டது. இதே வேளையில் அமெரிக்க இராணுவப் பாதுகாப்புத் துறையில் தகவல் தொடர்புக்குக் கணினியைப் பயன்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. விண்வெளிப் பயண ஆய்வில் ஈடுபட்டிருந்த ’ஆர்ப்பா’ ஆய்வு மையத்திடம் அமெரிக்க இராணுவத் துறையில் கணினியின் பயன்பாட்டை மேம்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டது.1962-இல் [[டாக்டர் ஜே.சி.ஆர்.லிக்லைடர்]] தலைமையில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
இப்பணி ஆரம்பிக்கப்பட்டது.
 
கணினிப் பிணையங்கள், கணினி வழியான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ’ஆர்ப்பா’ முதலில் கவனம் செலுத்தியது. ஒரு புதுவகையான கணினிப் பிணையத்தை நிறுவுவது ‘ஆர்ப்பா’வின் தொடக்கத் திட்டமாக இருந்தது.அயல்நாட்டுடன் போர்மூண்டு, எதிரிகளின் குண்டு வீச்சில் பிணையத்தின் ஒருபகுதி சிதைக்கப்பட்டாலும் பிணையத்தின் மீதிப் பகுதி எவ்வித பாதிப்புமின்றிச் செயல்பட வேண்டுமென எண்ணினர்.
 
இதுபோன்றதொரு,அதாவது இன்றைய ’இணையம்’ போன்ற ஒரு பிணையத்தை வடிவமைக்கும் முயற்சியில் அமெரிக்காவின் ‘ரேண்டு’ (Rand)என்ற நிறுவனமும் ஈடுபட்டிருந்தது.1965-இல் அதற்கான ஒரு மாதிரிக் கட்டமைப்பை வெளியிட்டது. இதே கோட்பாடுகளின் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1968-இல் இங்கிலாந்து நாட்டின் [[தேசிய இயற்பியல் ஆய்வுக்கூடம்]] (National Physics Laboratary) இதுபோன்ற பிணையத்தின் மாதிரியைச் சோதனை முறையில் அமைத்துக் காட்டியது.
 
இத்தகைய ஆய்வுகளின் இறுதியில் ‘ஆர்ப்பா’வின் முயற்சியால் 1969-இல் இராணுவப் பயன்பாட்டுக்கென அமெரிக்காவில் நான்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த கணினிப் பிணையங்கள் இணைக்கப்பட்டு ‘ஆர்ப்பாநெட்’ (ARPANet) என்கிற அமைப்பு நிறுவப்பட்டது.இதுவே, பிற்கால இணையத்தின் முன்னோடிப் பிணைய அமைப்பாகும்.
 
இந்த சூழலில் பாஸ்டன் நகரின் எம்ஐடீயில் (MIT - Massachusetts Institute of Technology) பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்த மாணவர் [[லியோனார்டு கிளெய்ன்ராக்]] என்பார் ஆர்ப்பாநெட்டின் மூலமாக இரு சேய்மைக் கணினிகளுக்கிடையே முதல் தகவல் பரிமாற்றத்தை நடத்திக் காட்டினார்.இதனால் இவர்,’இணையத்தின் தந்தை’ (Father of Internet) என்று அழைக்கப்படுகிறார்.
 
=== இணையத்தின் வளர்ச்சி ===
 
1971-இல் [[ஆர்ப்பாநெட்டில்]] இணைக்கப்பட்ட [[கணுக்கள்]] (Nodes) என்னும் பிணைய மையங்களின் எண்ணிக்கையானது பதினைந்தாக அதிகரித்தது.பின் அது 1972-இல் முப்பது கணுக்களாக வளர்ச்சி பெற்றது. ஆர்ப்பாநெட்டில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அமெரிக்காவின் எந்த மூலையிலிருந்தும் கணினித் தொடர்பு மூலம் பெற முடியும் என்பது செயற்படுத்திக் காட்டப்பட்டது.
 
அதன்பிறகு,அரசின் வெவ்வேறு துறைகள், பல்கலைக் கழகங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் தங்கள் பிணையங்களை ஆர்ப்பாநெட்டில் இணைத்துக் கொண்டன.
வரி 42 ⟶ 41:
1983-இல் ஆர்ப்பாநெட்டிலிருந்து அமெரிக்க இராணுவப் பிணையம் ‘[[மில்நெட்]]’ (Milnet) என்ற பெயரில் தனியாகப் பிரிக்கப்பட்டுச் செயல்பட ஆரம்பித்தது.அதற்குப்பின்,ஆர்ப்பாநெட் பொதுப் பிணையமாகியது.
 
அறிவியல் ஆய்வுக்கென அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் நிறுவனம் (National Science Foundation) [[என்எஸ்எஃப்நெட்]] (NSFNet) என்னும் பிணையத்தைத் தோற்றுவித்தது.இதில் ஐந்து மீத்திறன் கணினி மையங்கள் இணைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தகவல் மூலாதாரங்களை அமெரிக்காவிலுள்ள எந்தவொரு கல்வி நிறுவனமும், ஆய்வுக் கூடமும் பெருமளவில் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டன.
 
இது 1984-இல் ஆர்ப்பாநெட்டைப் போன்றே நாடு முழுவதும் அளாவத்தக்க வகையில் தம் சொந்தப் பிணையக் கட்டமைப்பை நிறுவியது. ஒவ்வொரு வட்டாரத்திலும் செயல்பட்ட கணினி மையங்கள் அருகிலுள்ள என்எஸ்எஃப்நெட்டின் மீத்திறன் கணினி மையத்துடன் இணைக்கப்பட்டன.
வரி 50 ⟶ 49:
அரசுத் துறையினர்,அரசு சார்ந்த நிறுவனங்கள்,அறிவியல் ஆய்வுக்கூடங்கள் முதலானவை தம் சொந்த பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தி வந்த பிணையத்தைப் பிற்காலத்தில் பொதுமக்களும் பயன்படுத்திட என்எஸ்எஃப்நெட் வழிவகுத்தது.
 
=== இணையம் வரையறை ===
 
International Network என்பதன் சுருக்கமே Internet ஆகும். இணையம் இதன் தமிழ்ச் சொல்லாகும். இணையம் எனப்படுவது பல கணினிகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதாகும்.
 
=== குவி இணையம் ===
 
ஓர் அறையில் அல்லது அலுவலகத்தில் இந்த இணையச் செயற்பாடுகள் நிகழ்வதற்கு குவி இணையம்(LAN Local Area Network) என்று பெயர்.
 
=== விரி இணையம் ===
 
வெவ்வேறு இடங்களில் உள்ள ஒரு நிறுவனத்தின் கிளைகளை ஒரு மையக் கணினியுடன் இணைத்துச் செயற்படுத்துவதனை விரி இணையம்(WAN Wide Area Network)எனப்படுகிறது.
 
=== மின் வணிகம் ===
 
இணையம் உதவியோடு நடைபெறும் வணிகம் மின் வணிகம்(e-commerce)எனப்படும்.இதில் விளம்பர வசதிகள் உண்டு.குறிப்பிட்ட இணைய தளத்தினை வாடகைக்கு எடுத்தோ,விட்டோ பயன்படுத்திக்கொள்ள முடியும்.
 
=== தனிநபர் இணைய தளம் உருவாக்கும் வழிமுறைகள் ===
 
1.பல்வேறு பெயர்களின் அடிப்படையிலான தளங்கள் ஏற்கனவே பிறரால் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் ஒன்றிரண்டு விருப்பப் பெயர்களைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு உள்ளீடு செய்து கொள்ளவும்.பின்னர்,அது உறுதியானதும் அதை ...காம்,...ஆர்க்,...நெட் என்ற முதன்மை புலத்துடன் இணைத்திட வேண்டும்.
வரி 96 ⟶ 95:
* உலவி இனி 208.80.152.2 முகவரியாக கொண்ட வழங்கியை இணையத்தில் தொடர்பு கொள்ள முயலும்.
* அடுத்து உலவி 208.80.152.2 எண் முகவரிக்கு <code>GET w/index.php HTTP/1.0 </code> என்னும் கட்டளையை பிறபிக்கும்.இக்கட்டளையானது [[துண்டங்கள்]] ஆக (Packets) மாற்றப்படும்.
இத்துண்டத்தில் [[அனுப்புனர் முகவரி]] (Sender Address) , [[பெறுபனர் முகவரி]] (Receiver Address) மற்றும் [[படலை (கணினி)]] (Port) குறிப்பிடபட்டிருக்கும். துண்டங்கள் பொதுவாக பின்வருமாறு இருக்கும்.
 
<pre>
வரி 150 ⟶ 149:
* இறுதியாக நமக்கு [[மீயிணைப்புகள்]] கொண்ட இணையத்தளம் தெரிகிறது.
 
=== உசாத்துணைகள் ===
== இணையம் - நுட்பியல் சொற்கள் ==
=== பொது இணைய பயன்பாடுகள்/செயல்பாடுகள் ===
* [[மின்னஞ்சல்]], [[மின்மடல்]] - Email
* [[உலகளாவிய வலை]] - World Wide Web
* [[இணையத்தளம்]] - Website
* [[இணைய உரையாடல்]] - Internet Chat
* [[வலைப்பதிவு]] - Blog
* [[இணைய வானொலி]] - Internet Radio
* [[நிகழ்படத் துண்டு]] - Clip
* [[தரவிறக்கம்]], [[பதிவிறக்கம்]] - Download
* [[தரவேற்றம்]], [[பதிவேற்றம்]] - Upload
* [[சுட்டி]]கள், [[இணைப்பு]]கள், [[தொடுப்பு]]கள் - Links
* [[இணைய அரசு]]
 
=== இணையம் எப்படி செயல்படுகின்றது? ===
* '''இணையம்''' - Internet
* [[புற இணையம்]] - Internet
* [[அக இணையம்]] - Intranet
* [[திறந்த முறைமை வலைப்பின்னல் மாதிரி]] - OSI Model
:* [[மீயுரை பரிமாற்ற நெறிமுறை]] - Hyper Text Transfer Protocol
:* [[பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை]] - Transmission Control Protocol
:* [[இணைய நெறிமுறை]] - Internet Protocol
* [[நெறிமுறை]] - [[விதிமுறைகள்]] - Protocol
* [[இணையவிதிமுறை இலக்கம்]] - Internet Protocol (IP) Number
* [[வாங்கி]] - Client
* [[வழங்கி]], [[வழங்கன்]] - Server
* [[தொடுப்பு]] - Connection
* [[இணையச் சேவை வழங்கி]] - Internet Service Provider
* [[மீயுரை]] - Hypertext
* [[மீயிணைப்பு]] - Hyper Link
* [[மீசுட்டு மொழி]] - Hyper Text Markeup Language
* [[துண்டங்கள்]] - Packets
* [[துணிக்கைகள்]] - Datagrams
* [[பொதிகள்]] - Data Packets
* [[பொதி நிலைமாற்று பிணையம்]] - Packet Switching Network
* [[தரவுத்துண்டம்]] - Packet Header
* [[இணைய முகவரி]] - Internet Address
* [[அனுப்புனர் முகவரி]] - Sender Address
* [[பெறுபனர் முகவரி]] - Receiver Address
* [[திசை காட்டிகள்]] - Router
* [[திசைவி]] - Router
* [[திசைவித்தல்]] - Routing
* [[பாதை]] - Route
* [[தரவு]] - Data
* [[படலை (கணினி)]] - Port
* [[தடம்]] - Wire
* [[ஒருசீர் வள அடையாளம்]] - Uniform Resource Identifier
* [[ஒருசீர் வள இடங்குறிப்பி]], [[உரலி]] - Uniform Resource Locator
 
=== பொது இணைய செயலிகள் ===
* [[உலாவி]]கள்
* [[தேடல் பொறி]]கள்
 
=== பிற சொற்கள் ===
* [[மூலம்]] - Source
* [[வரவுறை]] -
 
===உசாத்துணைகள்===
 
1)தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
 
2)முனைவர் பாக்யமேரி,
தமிழ் இலக்கிய வரலாறு,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
சென்னை-600098.
ஜூலை-2008.
 
3)கீற்று இணையதளம்
 
== வெளி இணைப்புகள் ==
 
* [http://www.net4tamil.com இணைய சேவைகள் தமிழில்]
* [http://www.avataram.com/2009-06-03-11-48-49.html இணைய உலக வரலாறு]
* [http://www.jaffnalibrary.com/tools/ip.html இணையம் பற்றிய மின்பாடங்கள்]
* [http://tamil.cri.cn/1/2007/03/19/62@50726.htm இணைய பழக்க அடிமைத்தனம்-சீன வானொலிக் கட்டுரை]
* [http://www.linuxdoc.org/HOWTO/Unix-and-Internet-Fundamentals-HOWTO/internet.html இணையம் இயங்கும் விதம் பற்றிய கட்டுரை]
 
[[பகுப்பு:இணையம்]]
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது